Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை

Print PDF

தினகரன் 11.06.2010

டெங்கு, மலேரியா பரவலை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை

புதுடெல்லி, ஜூன் 11: காமன்வெல்த் போட்டியை நடத்த டெல்லி தயாராகி வரும் நிலையில், கொசு மற்றும் தண்ணீரால் பரவும் டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

டெல்லியில் வரும் அக்டோபர் மாதம் 3 முதல் 14ம் தேதி வரையில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளது. நகரில் மழைக்காலத்தின்போது கொசுக்களால் பரவும் நோய்கள் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாக தொடர்கிறது. இந்த ஆண்டில் சரியாக மழைக்காலத்தில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற உள்ளன.இதனால் கொசுக்கள் மற்றும் தண்ணீரால் பரவும் நோய்களை தடுக்க உள்ளாட்சி அமைப்புகள் இப்போதே தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளன.

புதுடெல்லி நகராட்சி கவுன்சில் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இருக்கும் இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் வகையில் இருந்த 300 இடங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளன.

அதில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதில் சில அரசு கட்டிடங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து நகராட்சி கவுன்சிலின் சுகாதார மருத்துவ அதிகாரி பி.கே.சர்மா கூறியதாவது:

எங்கள் பகுதியில் கொசு பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறோம். தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டுபிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கும், குடியிருப்பு சங்கங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளோம்.

மழைக் காலத்துக்கு முன்னதாக கொசு ஒழிப்பு மருந்தை எங்கள் பகுதி முழுவதும் தெளிக்க உள்ளோம். கொசுக்களால் ஏற்படும் நோயை தடுக்க தேவையான அளவு மருந்தை இருப்பு வைத்துள்ளோம். இதேபோல் கொசு ஒழிப்புக்கு தேவையான மருந்து மற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை அடிக்கும் இயந்திரங்களையும் தயாராக வைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கொசு ஒழிப்பில் மாநகராட்சியும் மும்முரமாக இறங்கி உள்ளது. காமன்வெல்த் போட்டியின்போது டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க திட்டம் தயாரித்துள்ளது. மருத்துவமனைகளில் நியமிக்கப்படும் சிறப்பு குழுவினர் நோய் பாதித்த பகுதிகளுக்கு உடனடியாக சென்று அதை பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி குடிநீர் வாரியம், மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆண்டு கொசு மற்றும் தண்ணீரால் பரவும் நோய்களை தடுக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட உள்ளது.

காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக இந்த நடவடிக்கை தொடங்கும். இதற்காக 14 புகையடிக்கும் இயந்திரங்கள், 247 கை தெளிப்பான்கள் ஆகியவற்றை மாநகராட்சி வாங்கியுள்ளது.

 

தண்ணீர் கலப்படம் செய்த 120 லிட்டர் பால் பறிமுதல்

Print PDF

தினகரன் 11.06.2010

தண்ணீர் கலப்படம் செய்த 120 லிட்டர் பால் பறிமுதல்

ராசிபுரம், ஜூன் 11: ராசிபுரம் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி, தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட 120 லிட்டர் பாலை பறிமுதல் செய்து அழித்தனர்.

ராசிபுரம் நகராட்சி பகுதியில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்ட பால் விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி துப்புரவு அலுவலர் ராம்குமார் தலைமையில், துப்புரவு ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரகாஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இவர்கள், நகராட்சி பகுதி யில் பால் வியாபாரத்தில் ஈடுபட்ட 9 வியாபாரிகளிடம் இருந்த பாலை சோதனையிட்டனர். பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என லேக்டோ மீட்டர்என்ற கருவி மூலம் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 120 லிட்டர் பாலில் தண்ணீர் கலப்படம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் அவை கீழே கொட்டி அழிக்கப்பட்டது. நகராட்சி பகுதியில் பால் வியாபாரத் தில் ஈடுபடுபவர்கள் உரிய உரிமம் பெற்று தரமான பாலை விற்பனை செய்ய வேண்டும் என ஆணை யாளர் தனலட் சுமி கேட்டுக் கொண்டுள்ளார்.

 

கலப்பட பால் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

Print PDF

தினமணி 11.06.2010

கலப்பட பால் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ராசிபுரம்,ஜூன் 10: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் கலப்பட பாலை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பால் விற்பனையாளர்களிடம் நகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்தினர். நகராட்சி துப்புரவு அலுவலர் ஆர்.ராம்குமார், ஆய்வாளர்கள் ஏ.லோகநாதன், ஆர்.பாஸ்கரன், கே.பிரகாஷ் ஆகியோர் சோதனையிட்டனர்.

பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரியவந்தது. 9 வியாபாரிகளிடம் இருந்து 120 லிட்டர் பாலை பறிமுதல் செய்தனர். பால் விற்பனையாளர்கள் முறையாக உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தெரிவித்துள்ளார்

 


Page 224 of 519