Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்படம் செய்து விற்ற 120 லிட்டர் பால் பறிமுதல்

Print PDF

தினமலர் 11.06.2010

கலப்படம் செய்து விற்ற 120 லிட்டர் பால் பறிமுதல்

ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சியில் விற்பனை செய்யப்பட்ட 120 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர் ராம்குமார் தலைமையில், ஆய்வாளர்கள் லோகநாதன், பாஸ்கரன், பிரகாஷ் ஆகியோர் நகராட்சி பகுதியில் உரிமம் பெறமால் பால் விற்பனை செய்வோர் குறித்து ஆய்வு செய்தனர். ஒன்பது பால் வியாபாரிகளிடம் நடத்திய ஆய்வில், 120 லிட்டர் பாலில் தண்ணீர் கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. "நகராட்சியில் உரிய உரிமம் பெறாமல் பால் வியாபாரம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நகராட்சி கமிஷனர் தனலட்சுமி எச்சரித்துள்ளார்.

 

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 10.06.2010

காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூன் 9: விருதுநகரில் உள்ள பலசரக்குக் கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனை மேற்கொண்ட நகராட்சி ஊழியர்கள், காலாவதியான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் விருதுநகரில் நடத்தப்பட்ட சோதனையில் பல கடைகளிலிருந்து ஏராளமான காலாவதியான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. அந்த சோதனையின் போது பலர் கடைகளை பூட்டிவிட்டு சென்று விட்டனர். அவ்வாறு பூட்டப்பட்ட கடைகளை நகராட்சி ஊழியர்கள் சோதனையிட்டனர்.

சுகாதார ஆய்வாளர்கள் மோகன்குமார், வெங்கடேஷ்வரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் இந்த சோதனையை மேற்கொண்டனர்.

மெயின் பஜாரில் உள்ள பலசரக்குக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில் காலாவதியான நெய், மைதா, டீத்தூள், உப்பு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. பழைய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள இரு ஹோட்டல்களில் இருந்த கெட்டுப்போன உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது: காலாவதியான பொருள்கள் நகரின் பல கடைகளில் விற்கப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து தினசரி தகவல்கள் வருகின்றன. நகரில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்கும் கடைகளில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும்.

உணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்கள், சுவைக்கான கெமிக்கல்கள் மற்றும் நாட்கள் கடந்த மாமிச உணவுகள் விற்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

 

மும்பையில் 8 வார்டுகளில் மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினகரன் 09.06.2010

மும்பையில் 8 வார்டுகளில் மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

மும்பை, ஜூன் 9: மும்பை யில் எட்டு வார்டுகளில் மலேரியாவிற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

மும்பையில் சில இடங்களில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எந்த பகுதியில் அதிக அளவு மலேரியாவின் தாக்கம் இருக்கிறது என்பது குறித்து மாநகராட்சியின் சுகாதாரத்துறை கணக் கெடுப்பு நடத்தியது. இதில் எப்’&வடக்கு,‘எப்’&தெற்கு, ‘ஜி’&வடக்கு, ‘ஜி’&வடக்கு, ‘எல்வார்டு, ‘எச்’&மேற்கு, ‘கே’&கிழக்கு மற்றும் போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளில் மலேரியா பாதித்தவர்களை அடை யாளம் காண்பதற்கு சுகாதாரத்துறை ஊழி யர்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அனுப்பி இருக்கிறது. அதிக அளவு கட்டுமான பணிகள் நடந்து வரு வதாலும் குடிநீர் பற்றாக் குறை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்றி குடிநீரை சேமித்து வைப்பதாலும் மலேரியா காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


Page 225 of 519