Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குறுகலான தெருவில் தீவிர சுகாதார பணி அமைச்சர் நேரு உத்தரவு

Print PDF

தினகரன் 09.06.2010

குறுகலான தெருவில் தீவிர சுகாதார பணி அமைச்சர் நேரு உத்தரவு

திருச்சி, ஜூன் 9: குறுகலான தெருக்கள் மற்றும் சந்துகளில் சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி சுகாதார பிரிவுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

கோ.அபிஷேகபுரம் கோட்டம் 50 மற்றும் 60 வது வார்டு மக்களிடம் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் கே.என்.நேரு குறை கேட்டார். 50வது வார்டு அரவானூரில் திராவிட நகர் பகுதியில் சாலைகள் சீரமைப்பு, வாய்க்காலை தூர்வாரி தடுப்புச் சுவர் அமைத்தல், தெருக்களில் வடிகால்களை உயர்த்தி அமைத்தல் ஆகிய பணிகளை 15 நாளில் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

லிங்கம் நகரில் ரூ. 55 லட்சம் செலவில் 360 மீட்டர் சாலையை உயர்த்தி, சாலையின் இரு புறமும் மழைநீர் வடிகால் மற்றும் குடிநீர் குழாய் இணைப்புகள் தனித்தனியாக செல்ல ஏதுவாக தடுப்பு சுவர்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. குழுமணி சாலையில் குறுகலான பழைய காசிவிளங்கி பாலத்தினை ரூ. 75 லட்சம் செலவில் விரிவாக்கம் செய்யும் பணி நடந்த வருகிறது. இவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கல்நாயக்கன் தெரு எழில்நகர் பகுதியில் சாலை மற்றும் வடிகால்களை உயர் த்தி இதன் மூலம் ராமலிங்க நகர் மற்றும் கீழகல்நாயக்கன் தெருவில் மழைநீர் எளிதாக வடியுமாறு வடிகால்களை அமைக்குமாறு பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இங்கு சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கீழ கல்நாயக்கன் தெருவில் ஒரு லட்சம் செலவில் உடற்பயிற்சி மையம் அமைக்கவும் அமை ச்சர் உத்தரவிட்டார்.

50வது வார்டு கொரடாதோப்பு பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் எளிதாக வடிய ஏதுவாக சாலைகள், வடிகால்களை உயர்த்தும் பணியை உடனடியாக துவங்க பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார். மாநகராட்சி பகுதியில் குறுகலான தெருக்கள் மற்றும் சந்துப்பகுதியில் துப்புரவு மற்றும் சுகாதாரப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று நகர்நல அலுவலருக்கு அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கலெக்டர் (பொறுப்பு) தட்சிணாமூர்த்தி, துணைமேயர் அன்பழகன், நகரப் பொறியாளர் ராஜாமுகமது, செயற்பொறியாளர் சந்திரன், கோட்டத் தலைவர் அறிவுடைநம்பி, கவுன்சிலர்கள் திருநாவுக்கரசு, கண்ணன், உதவி செயற்பொறியாளர் நாகேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

மாம்பழ கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

Print PDF

தினகரன் 09.06.2010

மாம்பழ கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு

கோவில்பட்டி, ஜூன் 9:கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட்டில் மாம்பழ கடைகளில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.

கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள மாம்பழ கடைகளில் உணவு ஆய்வாளர்கள் முத்துகுமார், வெங்கடேசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? அல்லது ரசா யன முறையின் மூலம் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப் போது ரசா யண பொருள்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைக் காமல் இயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

மேலும் இந்த ஆய்வு பணி மாம்பழ சீசன் முடியும் வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரசாயண முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரியவந்தால் நகராட்சியில் உள்ள உணவு ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்கலாம். வியாபாரிகள் சுத்தமான, தரமான மாம்பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இயற்கைக்கு முரனாக மாம்பழம் வேதியியல் முறையில் தயார் செய்து விற்பனை செய்தால் உணவு கலப்பட தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.

 

பாளை. யில் பேக்கரி கடையில் திடீர் சோதனை காலாவதியான ரூ.12 ஆயிரம் கேக், பிஸ்கட் பறிமுதல்

Print PDF

தினமணி 09.06.2010

பாளை. யில் பேக்கரி கடையில் திடீர் சோதனை காலாவதியான ரூ.12 ஆயிரம் கேக், பிஸ்கட் பறிமுதல்

திருநெல்வேலி, ஜூன் 8: பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பிரபல பேக்கரி கடையில் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

இதில் அங்கு இருந்த காலாவதியான ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள கேக்,பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அந்த பேக்கரி கடையில், மாநகர உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம் தலைமையில் பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் பாலமுருகன்,ரத்னகுமார்,பாலபபிதா மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை காலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில் அங்கு வைக்கப்பட்டிருந்த கேக், பிரட், பிஸ்கட், முருக்கு, ரஸ்க் ஆகிய உணவு பொருள்களில் தயாரிப்பு தேதி, எந்த தேதி வரை பயன்படுத்த வேண்டும்,பொருளின் பெயர்,விலை ஆகியவை இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பொருள்களை மாநகராட்சி ஊழியர்கள் பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து அழித்தனர். அழிக்கப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.12 ஆயிரம் என கூறப்படுகிறது. அந்தக் கடை நிர்வாகிகளுக்கு, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இனி இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

 


Page 226 of 519