Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர் 07.06.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி வேண்டுகோள்

செங்கல்பட்டு : பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு கூறியதாவது:செங்கல்பட்டு நகராட்சி குடிநீர் உபவிதிகளின்படி நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைத்தளத் தொட்டிகள் மற்றும் தலைமை நீரேற்று நிலைய தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.மேலும், குடிநீர் பகிர்மான முனையில் 0.20 பி.பி.எம்., முதல் 0.50 பி.பி.எம்., வரை குளோரின் அளவு பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

Print PDF

தினகரன் 04.06.2010

300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்

பழநி, ஜூன் 4: பழநியில் 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

பழநி நகராட்சி பகுதியில் காலாவதியான உணவு பொருட்கள் குறித்து அதிகாரிகள் கடைகள், ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நகர்மன்ற அலுவலர் பர்வீன்பானு தலைமையில் ஆணையர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேற்று சோதனை நடத்தினர். பழநி அடிவாரம், புது தாராபுரம் ரோடு, ஆர்.எப்.ரோடு, திண்டுக்கல் ரோடு, தேரடி பூங்கா தெரு, காந்தி ரோடு, மார்க்கெட் போன்ற பகுதிகளில் வியாபாரிகளிடம் இருந்து 300 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி அலுவலர் கூறுகையில், "எருமை பாலில் அதிகமாக தண்ணீர் கலந்து விற்பனை செய்வதாக பொதுமக்களிடம் இருந்து புகார் வந்ததின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. துருபிடித்த கேன்களில் சுகாதாரமற்ற முறையில் வியாபாரிகள் கொண்டு வருகின்றனர். பழநி பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் உரிமம் இல்லாமல் பால் வியாபாரம் செய்கின்றனர். உரிமம் பெறாத வியாபாரிகள் ஒரு வார காலத்திற்குள் நகராட்சியில் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாமல் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலப்பட விற்பனை செய்வது தெரியவந்தால் பொதுமக்கள் 98437&54133 என்ற செல்போனில் புகார் தெரிவிக்கலாம்Ó என்றார்

 

செம்மொழி மாநாடு கழிவு, காலி உணவு பாக்கெட்களை கொட்ட 660 குப்பை தொட்டிகள்

Print PDF

தினகரன் 04.06.2010

செம்மொழி மாநாடு கழிவு, காலி உணவு பாக்கெட்களை கொட்ட 660 குப்பை தொட்டிகள்

கோவை, ஜூன் 4: செம்மொழி மாநாட்டுக்காக 660 குப்பை தொட்டி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு கூடம், ஊர்வல பாதையில் இந்த குப்பை தொட்டி பயன்படுத்தப்படும்.

கோவையில் 23ம் தேதி உலக தமிழ் செம்மொழி மாநாடு துவங்குகிறது. 5 நாள் நடக்கும் மாநாட்டில் மதிய உணவு பாக்கெட் வழங்கப்படும். 5 நாள் மாநாடு நிகழ்வுகளில் சுமார் 5 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என தெரிகிறது. 5 லட்சம் பேருக்கு தேவையான உணவு தயாரித்து வழங்க மாநாடு குழுவினர் திட்டமிட்டுள்ளனர். உணவு வழங்க 464 உணவு மையம் அமைக்கப்படும். இப்பகுதியில், சாப்பிட்ட பிறகு மீதமான உணவு, பாக்கெட் போன்றவற்றை சேகரிக்க 660 குப்பை தொட்டி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 110 கிலோ, 90 கிலோ, 60 கிலோ கொள்ளளவு கொண்ட என மூன்று வகையான குப்பை தொட்டி வைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டியில் கருப்பு பேக் வைக்கப்படும். இதில் தான் உணவுகளை கொட்டவேண்டும். மதிய சாப்பாடு நேரம் முடிந்ததும், சேகரமான கழிவுகளை கருப்பு பேக் மூலம் சேகரித்து கன்டெய்னரில் கொட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த இடத்திலும் உணவு கழிவுகளை கீழே கொட்ட விடாமல் தடுக்க இந்த முயற்சியை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளது.

வாகன நிறுத்துமிடம், அவிநாசி ரோடு வ..சி பூங்கா முதல் கொடிசியா வளாகம் வரை 9 கி.மீ தூரத்திற்கு குப்பை தொட்டி வைக்கப்படும். ரோடு சந்திப்பு, போக்குவரத்து நெருக்கடி இல்லாத இடத்தில் குப்பை தொட்டி வைத்து குப்பைகள் சேகரிக்கப்படும். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் குரங்கு பொம்மை, வாய் திறந்த நீர் யானை, கங்காரு, பறவை, தபால் பெட்டி வடிவத்தில் பிளாஸ்டிக் குப்பை தொட்டி மாடல்கள் வந்துள்ளது. இவற்றில், 3 மாடல்களை மாநகராட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யவுள்ளனர். ஒரு வாரத்தில் குப்பை தொட்டிகள் பெறப்படும். இதற்கு தனி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கோவை மாநகராட்சியில் ஏற்கனவே பெறப்பட்ட நூற்றுக்கணக்கான குப்பை தொட்டிகளை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், மார்க்கெட் உள்ளிட்ட பகுதியில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 


Page 229 of 519