Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்

Print PDF

தினமணி 02.06.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்

திருத்தணி, ஜூன் 1: திருத்தணி நகராட்சியில் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி தலைவர் எஸ். பாமாசந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்தணி நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பெரியார் நகர், இந்திரா நகர், முருகப்பா நகர், சித்தூர் சாலையில் உள்ள நீர்நிலை தொட்டிகள், கிணறுகள் அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மழைக்காலத்தில் சுகாதார கேடுகளை தவிர்க்கவும், குடிநீர் வழியாக எவ்வித நோய், வயிற்றுப்போக்கு பிரச்னை வராமல் இருக்கவும் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.

 

மருத்துவப் பரிசோதனையின்றி அறுக்கப்படும் ஆடுகள்?

Print PDF

தினமணி 02.06.2010

மருத்துவப் பரிசோதனையின்றி அறுக்கப்படும் ஆடுகள்?

காரைக்கால், ஜூன் 1: காரைக்கால் நகரில் பல்வேறு இடங்களில் உரிய மருத்துவப் பரிசோதனை செய்யப்படாமலேயே ஆடுகள் அறுக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

÷காரைக்காலில் வார நாள்களில் சுமார் 100 ஆடுகளும், ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 600 ஆடுகளும் அறுக்கப்படுகின்றனவாம். இவை நகரில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இறைச்சி விற்பனை மையங்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன.

÷விற்பனைக்கு முன்னதாக, காரைக்காலில் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் இயங்கும் அவாதுறை என அழைக்கப்படும் ஆடு அறுக்கும் கூடத்துக்கு ஆடுகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு சுகாதார ஆய்வாளரால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்படும்.

÷சோதனையில், நோய்வாய்ப்பட்ட, மிகவும் இளம் ஆடுகளாக இருந்தால் நிராகரிப்பு செய்யப்படுவது வழக்கமாம்.

÷இந்நிலையில், குடியிருப்புகள் அதிகமாக உள்ள இடங்களில் ஆட்டிறைச்சி விற்பனை மையங்களை வைத்திருக்கும் சிலர் மட்டுமே காரைக்காலில் உள்ள பழைய ஆடு அறுக்கும் கூடத்துக்கு ஆடுகளைக் கொண்டு சென்று, பரிசோதனை செய்து, ஆடுகளை அறுக்கின்றனராம்.

÷ஆனால், பெரும்பாலானோர் தங்களுக்கு வசதியுள்ள இடங்களில் ஆடுகளை அறுத்து, நேரடியாகவே விற்பனைக்கு கொண்டு செல்கின்றனராம். ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாள்களில் வியாபாரிகள் இவ்வாறு செய்வதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

÷மருத்துவப் பரிசோதனை செய்யாத ஆடுகள் ஏதேனும் நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தால், அந்த இறைச்சியை சாப்பிடும் மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாக நேரிடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற வியாபாரிகளை அதிகாரிகள் கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்: ஆடுகள் உரிய மருத்துவப் சோதனைக்கு பின்னர் அறுக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட வேண்டும் என்பதில் நகராட்சி நிர்வாகத்தின் சுகாதார ஆய்வாளருக்கு முக்கியப் பொறுப்புண்டு. இவரே ஆடுகளைப் பரிசோதனை செய்து முத்திரையைக் குத்துவாராம்.

÷ஆனால், காரைக்கால் நகராட்சியில் இந்தப் பதவிக்குரிய பணியிடம் காலியாக உள்ளது. இது அதிகாரிகள் சிலருக்கும், இறைச்சி வியாபாரிகளுக்கும் மேலும் சாதகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

புதிய ஆடு அறுக்கும் கூடம் திறக்கப்படுமா: காரைக்காலில் பழைய ஆடு அறுக்கும் கூடமே செயல்பாட்டில் உள்ளது. தற்போது, ரூ.75 லட்சத்தில் புதிய ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டு, பணிகள் முடிந்துள்ளன. அங்கு மின் இணைப்புகள் தர வேண்டியது மட்டுமே மீதமுள்ள பணியாகும். என்ன பிரச்னையால் இந்தப் பணி தொடர்ந்து தாமதப்படுத்தப்படுகிறது எனத் தெரியவில்லை என்கின்றனர் நகர்மன்ற உறுப்பினர்கள்.

÷மேம்படுத்தப்பட்ட சுகாதார வசதிகளைச் செய்து தர வேண்டிய நகராட்சி நிர்வாகமே, ஆடுகளை அறுப்பதில் கவனக்குறைவாக இருப்பது பெரும் ஆபத்துக்கு கொண்டு சென்றுவிடும் என்கின்றனர் பொதுமக்கள்.

÷புதிய ஆடு அறுக்கும் கூடம் திறக்கப்பட்ட பின்னர், அறுக்கப்படும் ஆடுகள் அனைத்தையும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று எண்ணாமல், ஆடுகளைப் பரிசோதனைக்கு பின்னரே அறுக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

சுகாதாரத்தில் இந்திய அளவில் 6வது இடம்: மாநகராட்சி கோட்டத்தலைவருக்கு சந்தேகம்

Print PDF
தினமலர் 02.06.2010

சுகாதாரத்தில் இந்திய அளவில் 6வது இடம்: மாநகராட்சி கோட்டத்தலைவருக்கு சந்தேகம்

திருச்சி: ""திருச்சி மாநகராட்சியில் துப்புரவுப்பணியாளர் பற்றாக்குறை உள்ள நிலையில் சுகாதாரத்தில் அகில இந்திய அளவில் ஆறாவது இடம் கிடைத்தது எப்படி?'' என்று கோட்டத்தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் எழுப்பிய சந்தேகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது. இதில் மேயர் சுஜாதா, துணைமேயர் அன்பழகன், கமிஷனர் பால்சாமி மற்றும் கவுன்சிலர்களும், மாநகராட்சி அலுவலர்களும் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் வனிதா, சத்தியமூர்த்தி, அப்துல் நிசார், அறிவுடை நம்பி உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் பேசும்போது, "மாநகராட்சி சுகாதார அலுவலர் வார்டுகளில் "மாஸ்' கேம்ப் நடத்துவதாக கூறினார். ஆனால், நடக்கவில்லை. ஒவ்வொரு வார்டுகளிலிருந்தும் சிறப்பு பணி என்ற பெயரில் துப்புரவுப் பணியாளர்களை வேறு வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து கோட்டத்தலைவர்களிடமோ, கவுன்சிலர்களிடமோ கலந்து ஆலோசிக்கவில்லை' என்று ஒருசேர குற்றச்சாட்டி பேசினர். மேலும் சில கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் துப்புரவு பணியாளர் இடங்கள் காலியாக உள்ளது. அதை நிரப்ப உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்றும் பேசினர்.

அப்போது பேசிய அரியமங்கலம் கோட்டத்தலைவரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான ஜெரோம் ஆரோக்கியராஜ், "கவுன்சிலர்கள் பேசுவதைப் பார்க்கும் போது துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை மாநகராட்சியில் அதிகம் உள்ளது. இந்நிலையில், இந்திய அளவில் சுகாதாரமான மாநகராட்சிக்கான பட்டியலில் திருச்சி மாநகராட்சி ஆறாவது இடம் பிடித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதை மத்திய அரசின் அதிகாரிகள் எதைவைத்து தேர்வு செய்தனர் என்றும் தெரியவில்லை. ஏ.சி., ரூமில் உட்கார்ந்து கொண்டு அறிவித்து விட்டார்களா? என்று தெரியவில்லை' என்றார்.

அகில இந்திய அளவில் திருச்சி மாநகராட்சி பெருமை சேர்க்கும் விஷயமாக சுகாதாரத்தில் ஆறாவது இடம் கிடைத்ததை அனைவரும் கொண்டாடும் வேளையில், காங்கிரஸ் கோட்டத்தலைவர் இப்படி ஒரு சந்தேகத்தை எழுப்பியது கவுன்சிலர்களையும், மேயர், துணைமேயர், கமிஷனரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கு பதில் அளித்து மாநகராட்சி செயற்பொறியாளர் சந்திரன் பேசும்போது, "இந்த தேர்வுக்கு 22 அளவீடுகள் உள்ளது. அவைகளில் நம் மாநகராட்சி நல்ல மதிப்பெண்களை பெற்றதால் ஆறாவது இடம் கிடைத்துள்ளது. நம்மை விட மற்ற அனைத்து மாநகராட்சிகளும் மோசமாகத்தான் உள்ளது' என்று விளக்கமளித்தார். இந்த பதிலில் ஜெரோம் ஆரோக்கியராஜ் சமாதானம் அடைந்தாலும், அரைகுறை மனதுடன் அதிகாரியின் பதிலை ஒத்துக் கொண்டார்.

 


Page 236 of 519