Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வயிற்றுப்போக்கு பாதிப்பு எதிரொலி சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

Print PDF

தினகரன் 01.06.2010

வயிற்றுப்போக்கு பாதிப்பு எதிரொலி சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் துவக்கம்

தேவாரம், ஜூன் 1: வயிற்றுப்போக்கு பாதிப்பை அடுத்து தேவாரம் பகுதியில் குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.

தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை ஆகிய பேரூராட்சி பகுதிகளுக்கு உத்தமபாளையம் முல்லைப் பெரியாற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக 13 கிமீ தொலைவிற்கு பூமிக்கடியில் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பெறப்படும் தண்ணீர் மேல்நிலை மற்றும் தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டு, பகுதி வாரியாக விநியோகம் செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டது. சிறுமி உட்பட 4 பேர் பலியாகினர். தேவாரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நோயின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீரில் கழிவுநீர் கலப்ப தால் நோய் ஏற்பட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து தேவாரம் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம், சுகாதாரத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் குழாய் உடைப்புகளை சரிசெய்யும் பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ளனர். குடிநீரில் முறையாக குளோரினேஷன் செய்யப்படுகிறதா, விநியோகம் முறையாக நடக்கிறதா என ஆய்வு செய்கின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் ஏற் பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேவாரத்தை சேர்ந்த ரகுபதி கூறுகையில், ``வயிற்றுப்போக்கு பாதிப்பை அடுத்து இப்பகுதியில் சுகாதார நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக குடிநீர் குழாய்களில் உடைப்புகள் சரிசெய்யப்படுகின்றன. தண்ணீர் விநியோகம் கண்காணிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை வரவேற்க தக்கதே என்றாலும், முன்கூட்டியே இப்பணியை செய்திருந்தால் நோய் பரவாமல் தடுத்திருக்கலாம்’’ என்றார்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ``குடிநீரில் கழிவுநீர் கலந்ததும், குளோரினேசன் சரியாக இல்லாததும் வயிற்றுப்போக்கு பரவ காரணமாகிவிட்டது. உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் இருந்து பூமிக்கடியில் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன. இதில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, உடைப்புகள் கணக்கெடுக்கப்பட்டு அதனை சீரமைக்கும் பணி நடக்கிறது.’’ என்றார். '

 

அல்லி கண்மாய் மயானப் பகுதியில் குப்பைகள் அகற்றம்

Print PDF

தினகரன் 01.06.2010

அல்லி கண்மாய் மயானப் பகுதியில் குப்பைகள் அகற்றம்

ராமநாதபுரம், ஜூன் 1: ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அல்லி கண்மாயில் உள்ள மயானப் பகுதியில் நேற்று குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.

இந்த மயானப் பகுதியில் சிலர் தள்ளுவண்டி மூலம் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இறந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்களும் புகார் கூறி வந்தனர். மயானத்தை சுத்தம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் லலிதகலாரத்தினம் மயானப்பகுதியை பார்வையிட்டார்.

குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

 

அரூர் பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

Print PDF

தினமலர் 01.06.2010

அரூர் பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை

அரூர்: அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.அரூர் டவுன் பஞ்சாயத்து சுகாதார பிரிவு அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் பழக்கடைகளில் "கார்பைட்' கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து திடீர் சோதனை செய்தனர். "கார்பைட்' கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர். இச்சோதனையில் அரூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஞானம், வட்டார சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சின்னமாரி, சாதிக்பாட்ஷா, ராஜேந்திரன், வடிவேல், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 237 of 519