Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை

Print PDF

தினகரன் 31.05.2010

குடிநீரை காய்ச்சி பருக அறிவுரை

சாத்தூர்: சாத்தூர் நகராட்சி கமிஷனர்(பொறுப்பு)கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: சாத்தூர் நகராட்சி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் சுத்தம் செய்து வழங்கினாலும், அதை நன்றாக காய்ச்சி வடிகட்டிய பின் உபயோகிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார

 

ரூ. 4.40 லட்சத்தில் நடமாடும் கழிப்பறைகள் வாங்க மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமணி     30.05.2010

ரூ. 4.40 லட்சத்தில் நடமாடும் கழிப்பறைகள் வாங்க மாநகராட்சி திட்டம்

திருப்பூர், மே 29: ரூ. 4.40 லட்சத்தில் 4 நடமாடும் கழிப்பறைகள் வாங்க, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இக் கழிப்பறைகளை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பொது நிகழ்ச்சிகளின்போது மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் போலியோ சொட்டு மருந்து முகாம், பொங்கல் விழா, சுதந்திர தின விழா, மருத்துவ முகாம், அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழா உள்ளிட்ட பொதுநிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இந் நிக ழ்ச்சிகள் சிலசமயங்களில் கழிப்பறை இல்லாத இடங்களில் நடத்தப்படும் போது அங்கு வரும் மக்கள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதற்காக, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக 4 நடமாடும் கழிப்பறைகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. ரூ. 4.40 லட்சம் உத்தேச மதிப்பில் வாங்கப்பட உள்ள இந்த நடமாடும் கழிப்பறைகள் மாநகராட்சி மற்றும் அரசு பொது நிகழ்ச்சிகளின்போது மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் திங்கள்கிழமை நடக்கும் மாமன்றக் கூட்டத்தில் ஒப்புதலுக்கு வைக்கப்பட உள்ளது.

 

உணவு பொருட்கள் பின்தேதியிட்டு தயாரிப்பு

Print PDF

தினகரன் 28.06.2010

உணவு பொருட்கள் பின்தேதியிட்டு தயாரிப்பு

கோவை, மே 28: காலாவதி, கலப்படம் தவிர்க்க எதிர்கால தேதியில் உணவு பொருள் தயாரிப்பது ரெய்டில் கண்டறியப்பட்டது.

கோவை மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறியதாவது;

கோவை நகரில் கலப்படம், காலாவதி உணவு பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டது. ரெய்டு நடத்தியதில் , பல்வேறு வகையான உணவு பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லெட், சிப்ஸ், பப்ஸ், பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட உணவு வகைகள் பறிமுதல் செய்து குப்பை மோட்டில் அழிக்கப்பட்டது. இந்த பொருட்கள் சிலவற்றின் மாதிரிகள், சென்னை கிங்ஸ் இன்ஸ்டியூட் மற்றும் சேலத்தில் உள்ள உணவு பொருள் பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கோவை நகரில், டவுன்ஹால், ராமநாதபுரம் உட்பட சில பகுதியில் எடுத்த டீத்தூள் ஆய்வு செய்து அதன் முடிவு பெறப்பட்டது. இதில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடலுக்கு கேடு ஏற்படுத்தும் வகையிலான கலப்பட வேதி பொருள் டீத்தூளில் கலக்கப்பட்டிருந்தது. இதேபோல், சிப்ஸ் உள்ளிட்ட கார வகைகளில் கலப்படம் இருந்தது ஆய்வு முடிவுகளின் மூலம் தெரியவந்தது.

கலப்பட உணவு பொருள் தயாரித்த நிறுவனம், கடைகளின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முயற்சி எடுத்து வருகிறோம். உணவு ஆய்வாளர்கள் மூலம், கோவை நகரில் கலப்பட உணவு பொருள் சோதனை அடிக்கடி நடக்கிறது. இதுவரை காலாவதி, கலப்பட உணவு பொருள் தான் கிடைத்தது. சுகாதார துறையினர் சோதனையில் உஷாரான சிலர், புது வகை மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உணவு பொருள் தயாரிக்கும் தேதியை போலியாக குறிப்பிடுகின்றனர். கோவை நகரில் பல இடங்களில் ரெய்டு நடத்தியதில் எதிர்கால தேதி குறிப்பிட்டு பொருட்களை உற்பத்தி செய்திருந்தனர். ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி தேதியை குறிப்பிட்டு தயாரித்த கார முறுக்கு, சிப்ஸ், பேக்கரி வகை பொருட்கள் தயாரிக்கப்பட்டிருந்தது. நுகர்வோர்களை ஏமாற்றும் வகையில் தயாரித்த இந்த உணவு பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது.

இவற்றை அழிக்க உத்தரவிட்டிருக்கிறோம். இதுபோல் தேதியை போலியாக குறிப்பிட்டு மோசடி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நகர்நல அதிகாரி எச்சரிக்கை

 


Page 240 of 519