Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்'

Print PDF

தினகரன்       27.05.2010

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்'

திருப்பூர்: திருப்பூரில் கடந்த இரு வாரங்களாக, காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், புதிய நோய்கள் பரவுகின்றன. எனவே, குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்,'' என சுகாதாரத் துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறினார்.கடந்த வாரம், ஆந்திராவை தாக்கிய "லைலா' புயலால், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. சில இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருப்பூர், பல்லடம், பொங்கலூர், அவிநாசி, ஊத்துக்குளி, காங்கயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இப்புயலால், இரண்டு வாரமாக பருவநிலையில் மாறுதல் நிலவியது. இதனால், கடந்த 15 மற்றும் 23ம் தேதிகளில் திருப்பூரில் லேசான தூறல் மழை பெய்தது.

மாறி வரும் பருவநிலை தொடர்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஜயலட்சுமி கூறுகையில், தற்போதுள்ள பருவ நிலையால் குழந்தைகள், வயதானவர்களுக்கு சளி, காய்ச்சல், உடல் சோர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் மீது பெற்றோர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். விளையாடி முடித்த பின் குழந்தைகளுக்கு குளிர்ந்த ஆகாரங்கள் கொடுக்க வேண்டும்.

மதிய வேளை தவிர, காலை மற்றும் மாலை வேளைகளில் குடிநீரை முடிந்த அளவு காய்ச்சி கொடுக்க வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிப்பதன் மூலமே பலவிதமான நோய் வராமல் தடுக்க முடியும். சில உடல் உபாதைகள், உடலில் வெப்பநிலை மாற்றங்கள், சோர்வு ஏற்படும் போது, டாக்டரிடம் ஆலோசனை பெற வேண்டும்,'' என்றார்.

Last Updated on Thursday, 27 May 2010 05:57
 

செங்கம் புதிய பஸ்நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் விரைவில் திறக்க வேண்டும்

Print PDF

தினகரன்           26.05.2010

செங்கம் புதிய பஸ்நிலையத்தில் நவீன கட்டண கழிப்பிடம் விரைவில் திறக்க வேண்டும்

செங்கம், மே26: செங்கம் புதிய பஸ் நிலையத்தில் கட்டப்பட்ட நவீன கட்டண கழிப்பிடம் விரைவில் திறக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

செங்கம் துக்காபேட்டையில் புதிய பஸ் நிலையம் உள்ளது. பேரூராட்சிக்கு சொந்தமான இந்த பஸ் நிலையத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னா¢ கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டு ஏலத்தில் விடப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில் அதிகரித்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களின் தேவையினை கருதி பேரூராட்சி நி£¢வாகம் சா£¢பில் சுமா£¢ ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் நவீன கட்டண கழிப்பிடம் கட்டப்பட்டது. இது கட்டப்பட்டு 6 மாத காலம் கடந்தும் இன்னும் இந்த கழிப்பிடம் திறக்கப்படவில்லை.

தற்போது உள்ள கழிப்பிடம் ஒரே நேரத்தில் இருநபா¢களுக்கு மேல் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. மேலும் அடிக்கடி தண்ணீ£¢ இல்லாமல் அந்த கழிப்பிடத்தினை மூடியும் விடுகிறார்கள். இதனால் வெளியூ£¢ பயணிகள் குறிப்பாக பெண்கள், குழந்தைகள், முதியவா¢கள் பொ¤தும் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பஸ் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள நவீன கட்டண கழிப்பிடத்தை உடனே திறக்கவேண்டும் என்பது பயணிகளின் எதி£¢பா£¢ப்பாகும்.

 

நாகையில் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்

Print PDF

தினகரன்      26.05.2010

நாகையில் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்

நாகை, மே 26: நாகையில் குடிநீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வட்டத்தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் எம்.ஆர்.சுப்பிரமணியன் வேலை அறிக்கை, பொருளாளர் முருகேசன் நிதி நிலை அறிக்கை வாசித்தனர். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் தனசேகரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், வட்டத்தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வேலு பேசினர்.

கூட்டத்தில், நாகை நகராட்சியில் குடிநீரை சுத்திகரித்து வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை உயர்த்தி கட்ட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வேதாரண்யம் வட்டத்தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.

 


Page 244 of 519