Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தூங்கா மதுரையைத் தூய்மையாக்கும் திட்டம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமணி   26.05.2010

தூங்கா மதுரையைத் தூய்மையாக்கும் திட்டம் : ஆட்சியர் துவக்கி வைத்தார்

மதுரை, மே 25: தூங்கா மதுரையை தூய்மையாக்கும் சிறப்புத் திட்டத்தின் கீழ் குப்பைகளை அகற்றும் சிறப்பு முகாமை மதுரை மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் செவ்வாய்க்கிழமை பீ.பி.குளத்திலும், திருமங்கலத்திலும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஜி.தேன்மொழி, ஆணையர் எஸ்.செபாஸ்டின் முன்னிலை வகித்தனர்.

இத்திட்டத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியர் சி.காமராஜ் பேசியதாவது:

மதுரை மாவட்டத்தை குப்பையில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதற்கட்டமாக செவ்வாய்க்கிழமை வடக்கு மண்டலத்தில் குப்பை அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கிழக்கு மண்டலத்திலும், வியாழக்கிழமை மேற்கு மண்டலத்திலும், வெள்ளிக்கிழமை தெற்கு மண்டலத்திலும் இப்பணி நடைபெறும்.

மாவட்ட அளவில் நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் இச்சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. முகாமில் சுகாதார ஊழியர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

பீ.பி.குளம் பகுதியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள குப்பை அகற்றும் பணியில், 2000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட டம்பர் பிளேஸர் லாரிகள், புல்டோசர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

மதுரையில் உள்ள பூங்கா, மருத்துவமனைகள், அரசு கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களிலும் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற உள்ளது. மாநகரை சுத்தம் செய்யும் பணியில் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் மண்டலத் தலைவர் இசக்கிமுத்து, துணை ஆணையர் க.தர்ப்பராஜ், தலைமைப் பொறியாளர் கே.சக்திவேல், நகர்நல அலுவலர் டாக்டர் சுப்பிரமணியன், உதவி ஆணையர்கள் எஸ்பி.ராஜகாந்தி, .தேவதாஸ், அங்கையற்கண்ணி, ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலத்திலும் குப்பைகளை அகற்றும் சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பணியை ஆட்சியர் தொடங்கி வைத்துப் பேசுகையில், திருமங்கலம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு 10 வார்டுகள் வீதம் மூன்று நாள்களில் அனைத்து வார்டுகளிலும் இப்பணி நடைபெறும்.

திருமங்கலம் நகரில் 4 குழுக்களாகப் பிரித்து ராஜாஜி சிலையில் இருந்து உசிலம்பட்டி பிரிவு வரை ஒரு குழுவும், உசிலம்பட்டி சாலையில் இருந்து விருதுநகர் சாலை வரை ஒரு குழுவும், அரசு பொதுமருத்துவமனை உள்ளே ஒரு குழுவும், மாநில நெடுஞ்சாலையில் உள்ள முக்கியச் சாலைகளில் ஒரு குழுவுமாக நான்கு குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

மேலும் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் நடைபெற்ற குப்பை அகற்றும் பணியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் நகராட்சி துணைத் தலைவர் ராஜேந்திரன், நகராட்சி ஆணையர் அக்ஷயா, லதா அதியமான் எம்எல்ஏ, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணாராம். மகளிர் திட்ட அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சத்தியில் காலாவதி பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்      26.05.2010

சத்தியில் காலாவதி பொருட்கள் அழிப்பு

சத்தியமங்கலம்: சத்தி நகராட்சி பகுதியில் உள்ள மளிகை கடை மற்றும் பேக்கரிகளில் காலாவதியான பொருட்களை கண்டுபிடித்து நகராட்சி அதிகாரிகள் அழித்தனர். சத்தி நகராட்சி 27 வார்டுகளில் உள்ள டீக்கடை, பேக்கரி மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி கமிஷனர் கணேசன், நகர்நல அலுவலர் செல்வம், சுகாதார அதிகாரி சக்திவேல் ஆகியோர் ஆய்வு செய்தனர். காலாவதியான பிஸ்கட், ரொட்டி, குளிர்பானம், பேரிட்சை பழம், மாவு பொருட்கள் உள்ளிட்டவைபறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

 

சுற்றுப்புற சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்

Print PDF

தினகரன்      25.05.2010

சுற்றுப்புற சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும்

ஆற்காடு, மே 25: சுற்றுப்புற சுகாதாரத்தை பொதுமக்கள் கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுரேஷ் வேண்டுகோள் விடுத்தார்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் சுகாதார துறை சார்பில் கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் ஜெ.எல். ஈஸ்வரப்பன் தலைமை தாங்கினார். ஆணையாளர் செ. பாரிஜாதம் முன்னிலை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுநர் கோபால ரத்தினம் வரவேற்றார்.

மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் டாக்டர். சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். அவா¢ பேசியது: ஒவ்வொரு நோய்க்கும் தேசிய அளவிலான திட்டங்கள் தற்போது செயல்படுத்தப்படுகிறது.

3000 வகை கொசுக்கள் உள்ளது. இந்தியாவில் 10 வகை கொசுக்கள் மட்டுமே மனிதனுக்கு தீங்கு ஏற்படுத்துகிறது. பிறந்து 30 நாட்களே வாழும் கொசுக்கள் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கிறது. வயல்வெளியில் உருவாகும் கொசுக்கள் ஏற்படுத்தும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய்க்கு திருவண்ணாமலை, தஞ்சாவூரில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வேலூர் மாவட்டத்திலும் விரைவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா நோய்களுக்கு இதுவரை மருந்தோ, மாத்திரையோ கண்டுப்பிடிக்கப்படவில்லை. வயிற்றுப்போக்கு, காய்ச்சல் இருந்தால் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுப்புற சுகாதாரத்தை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு வந்தால் மட்டுமே சுகாதாரத்தை ஏற்படுத்த முடியும். இந்தாண்டு தமிழக அரசு நகர் புற சுகாதார இயக்கம் ஏற்படுத்த உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கவுன்சிலர்கள் நந்தகுமார், சுந்தரம், செல்வம், பூங்காவனம், தயாளன், ஜீவமணி, புதுப்பாடி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் பரசுராமன், சுகாதார ஆய்வாளர் ஜி. ரவி உட்பட பலர் கலந்துகொண்டனர். துணை இயக்குநர் பேச்சு

 


Page 245 of 519