Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பைகள் நிறைந்த இடம்"பளிச்' : அவஸ்தை பட்ட மக்களுக்கு விடிவு

Print PDF

தினமலர்   25.05.2010

குப்பைகள் நிறைந்த இடம்"பளிச்' : அவஸ்தை பட்ட மக்களுக்கு விடிவு

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் நிலையம் அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் தேங்கி இருந்த குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்திலேயே சிறப்பு நிலை அந்தஸ்தை கோத்தகிரி பேரூராட்சி பெற்றுள்ளது. ஆனால்,நகரில் போதிய கட்டமைப்பு வசதி இல்லை. குறிப்பாக, குப்பைகள் கொட்டுவதற்கு உகந்த இடம் இல்லாத நிலையில், நகரில் பல பகுதிகளில் சாலையோரத்திலும், மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களிலும் குப்பைகள் கொட்டுவது வழக்கமாக உள்ளது. பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளர் பணி காலியாக இருந்த நிலையில், மக்கள் அதிகளவில் வந்துசெல்லும் பஸ் நிலையம் பகுதியில் அன்றாட சேகரமாகும் குப்பைகள், அரசு மருத்துவமனை சாலையில் கொட்டப்பட்டது. இக்குறிப்பிட்ட சாலையில், மாதா கோயில், அரசு மாணவியர் விடுதி, பள்ளி மற்றும் அதிகளவில் குடியிருப்புகள் உள்ளதால், நாள்தோறும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவியர் உட்பட பொதுமக்கள் துர்நாற்றத்தில் சிரமங்களை சந்தித்துவந்தனர். இந்த குப்பைகளை அன்றாட அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், புதிய சுகாதார ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன் பொறுப்பேற்றப்பின், அவரது முதல் நடவடிக்கையாக குறிப்பிட்ட இடத்தில் தேங்கியிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. அந்த இடத்தில் கொசு தொல்லையை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. "குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என தகவல் பலகையும் குறிப்பிட்ட பகுதியில் வைக்கப்பட்டது. இந்த பகுதி சுத்தமானதால்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து...சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு

Print PDF

தினமலர்    25.05.2010

ஆடுதொட்டி சுகாதார சீர்கேட்டை கண்டித்து...சென்னையில் இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு

புளியந்தோப்பு : புளியந்தோப்பு ஆடுதொட்டியில், பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளாததை கண்டித்து, தொழிலாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சென்னையில், இறைச்சிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

புளியந்தோப்பு, அம்பேத்கர் கல்லூரி சாலையில், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆடு, மாடு அறுக்கும் கூடம் (தொட்டி) உள்ளது.இங்கு வார நாட்களில் 2,500 ஆடுகள், 300 மாடுகள் வரையிலும், இறைச்சிக்காக அறுக்கப் படுகிறது.விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமையில் மட்டும் 9,000 ஆடுகளும், 1,000 மாடுகளும் அறுக்கப் படுகிறது.இங்கு அறுக்கப்படும் ஆடு மற்றும் மாடுகள் நகரின் பல பகுதிகளிலுள்ள இறைச்சி கடைகள், மார்க்கெட்டுகளுக்கு விற் பனைக்காகவும், நட்சத்திர ஓட்டல்கள் முதல் சிறிய ஓட்டல் கள் வரை, உணவு தயாரிப்பிற் காக விற்பனை செய்யப்படுகிறது.சில மாதங்களாக, இங்கு முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத நிலை நீடிக்கிறது. அறுக்கப்பட்ட ஆடு மற்றும் மாடுகளின் கழிவு பொருட்கள் அகற்றப்படாமல் தேங்கிக்கிடந்தது. சமீபத்திய மழையில், அவை நனைந்து சகதியாக மாறியதால், ஆடுதொட்டி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியது.ஆடு மற்றும் மாடுகளை அறுத்து கழுவும் தொட்டிகளிலும், தண்ணீர் தேங்கியதால், அவற்றில் ஏராளமான புழுக்கள் உருவாகின. இதனால் அங்கு தொழிலாளர்கள் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

ஆடு, மாடுகளை அறுத்து, சுகாதாரமான முறையில் வெளியிடங்களுக்கு எடுத்து செல்ல முடியாத சூழ்நிலை உருவானது.இதுகுறித்து தொழிலாளர்கள் தரப்பில், பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் தெரிவித்தும், எந்த பயனும் ஏற்படவில்லை.இதனால், அதிருப்தியடைந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நேற்று காலை அம்பேத்கர் சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது ஆடுகளை பிடித்து வந்து, சாலையில் நிறுத்தினர். ஒரு சிலர் ஆடுகளை தோள் மீது சுமந்தபடி, மறியலில் ஈடுபட்டனர். அச்சாலையில் காலை 6 மணி முதல், ஒரு மணி நேரத்திற்கு, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த, ராயபுரம் உதவி கமிஷனர் நவீன் சந்திரன் நாகேஷ் தலைமையில், புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஆடு தொட்டி தொழிலாளர்களை, கலைந்து செல்லுமாறு கூறினர்.ஆனால் அவர்கள் அங் கிருந்து நகராமல் தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சார்லஸ் மற்றும் ஊழியர்கள் அங்கு வந்தனர்.ஆடுதொட்டியில், நிலவி வரும் குறைகளை சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.அதற்கு பிறகும் தொழிலாளர் கள் சாலை மறியலை கைவிடவில்லை. ஆடுதொட்டியில், உடனுக்குடன் பராமரிப்பு நடவடிக்கையை துவங்கினால் மட்டுமே, சாலை மறியலை கைவிடுவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆடுதொட்டியில், பராமரிப்பு நடவடிக்கைகள் துவங்கியது.சாலை மறியலை கைவிட்டு, தொழிலாளர்கள் கலைந்து சென் றனர். இதனால், நேற்று சென்னையில் இறைச்சி வகைகளுக்கு, கடும் தட்டுப்பாடு நிலவியது.

 

கலப்பட விழிப்புணர்வு பிரசார இயக்கம்

Print PDF

தினகரன்     24.05.2010

கலப்பட விழிப்புணர்வு பிரசார இயக்கம்

திருவாரூர், மே 24: திருவாரூர் ரயில் நிலையத்தில் கலப்பட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பிரசார இயக்கத்தை நகர £ட்சி தலைவர் தென்னன் துவக்கி வைத்தார்.

திருவாரூர் நகராட்சி மற்றும் திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் கலப்படம் செய்யப்பட்ட உணவு பொருட்களால் ஏற்படும் தீமைகள் பற்றிய பிரசார இயக்கம் திருவாரூர் ரயில் நிலையத்தில் நடத்தப்பட்டது. நகராட்சி தலைவர் தென்னன் துண்டு பிரசுரத்தை வெளியிட திருவாரூர் ஸ்டேசன் மாஸ்டர் தர்மன் பெற்றுக்கொண்டார். நகரா ட்சி ஆணையர் சரவணன், நகராட்சி துணை தலைவர் சங்கர், நுகர்வோர் அமைப்பு தலைவர் பிறை அறிவழகன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ரயில் நிலையத்திலிருந்த பயணிகளுக்கு துண்டு பிரசு ரம் விநியோகிக்கப்பட்டது. பாலில் சுகாதாரமற்ற தண் ணீரை கலப்பதால் வயிற்றுப்போக்கு ஏற்படும். உணவு எண்ணெயில் விளக்கெண் ணெய், ஆமணக்கு எண் ணெய், ஆர்ஜிமோன் எண் ணெய் மற்றும் இதர மாற்று எண்ணெய்களை கலப்பதன் மூலம் கண் குருடாதல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்படும் என்பன உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய உணவு பொருட் களை குறிப்பிட்டு அதில் கல க்கப்படும் கலப்படங்களால் ஏற்படும் தீமைகள் பற்றி அச்சிடப்பட்டிருந்தது.

Last Updated on Tuesday, 25 May 2010 04:17
 


Page 249 of 519