Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ராமநாதபுரம், பரமக்குடி நகர மக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டுகோள்

Print PDF

தினமணி     24.05.2010

ராமநாதபுரம், பரமக்குடி நகர மக்கள் குடிநீரை காய்ச்சிக் குடிக்க வேண்டுகோள்

ராமநாதபுரம், மே 23: கோடை காலமாக இருப்பதால், தொற்று நோய்கள் பரவாமல் இருக்க விநியோகிக்கப்படும் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுமாறு ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான் சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராமநாதபுரம் நகராட்சிப் பகுதியில் ராமநாதபுரம் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்ட, மிகவும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது கோடை காலமாக இருப்பதால், எந்த விதமான தொற்றுநோய்களும் பரவி விடாமல் இருக்க விநியோகிக்கப்படும் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிப் பருகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ராமநாதபுரம் நகரில் தனியார் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் பாதுகாப்பற்ற குடிநீரை வாங்கிப் பருக வேண்டாம் எனவும் நகராட்சி ஆணையாளர் முஜ்புர் ரகுமான் கேட்டுக் கொண்டுள்ளார்.

பரமக்குடி: பரமக்குடி நகராட்சியைச் சேர்ந்த 36 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரைப் பருகவும்; சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறும் நகர்மன்றத் தலைவர் எம்.கீர்த்திகா முனியசாமி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பொதுமக்கள் தொற்று நோய்கள் வராமல் பாதுகாத்துக்கொள்ள குடிநீரை காய்ச்சி வடிகட்டி பருகவேண்டும்.

மேலும் வீட்டின் சுற்றுப்புரத்தைத் தூய்மையாகவும், தெருக்களில் பிளாஸ்டிக் பை மற்றும் குப்பைகளை கொட்டாமலும், வீட்டின் குப்பை மற்றும் கழிவுகளை நகராட் சியிலிருந்து குப்பை வாங்க வருபவர்களிடம் கொடுத்தோ அல்லது தெருக்களில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளிலோ கொட்ட வேண்டும்.

Last Updated on Tuesday, 25 May 2010 04:18
 

தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினகரன்     24.05.2010

தண்ணீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

திருப்பூர், மே 24: திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஜெயலட்சுமி விடுத்துள்ள அறிக்கை:

திருப்பூர் மாநகரின் பயன்பாட்டில் உள்ள மூன்று குடிநீர் திட்டங்களின் நீர் ஆதாரமான பவானி ஆறு மற்றும் காவேரி ஆற்றில் பருவமழைக் காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே மாநகரில் வழங்கப்படும் குடிநீரை காய்ச்சி உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், 23ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை குடிநீர் வினியோகப்பிரிவில் தலைமை நிலைய வடிகட்டும் படுகை, நீருந்தும் நிலையங்கள், பிரதான குழாய்கள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றில் சுத்தம் செய்யும் பணிகள் நடக்க உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்து, சிக்கனமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

காய்ச்சிய நீரை பருக வேண்டும்

Print PDF

தினகரன்       24.05.2010

காய்ச்சிய நீரை பருக வேண்டும்

ராமநாதபுரம். மே 24: நன்கு காய்ச்சிய நீரை பருக வேண்டும் என ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் வேண்டு கோள் விடுத்துள்ளார்.

ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் நகர் பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை ஒரு குடம் ரூ.3க்கு வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.

தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருவதால் ராமநாதபுரம் மாவட்ட சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் குளோரின் கலந்த சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து ராமநாதபுரம் நகராட்சி ஆணையாளர் முஜிபுர் ரகுமான் கூறியதாவது: ராமநாதபுரம் நகரில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நகர் பகுதிகளில் சிலர் தனியார் டேங்கர் லாரிகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி உபயோகிக்கின்றனர்.

தற்போது கோடைகாலம் என்பதால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் உஷ்ணம் தொடர் பான நோய்கள் பரவாமல் இருக்க காய்ச்சி, வடி கட்டிய குடிநீரை பொதுமக்கள் பருக வேண்டும். இதன் மூலம் தொற்றுநோய் பரவாமல் தடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 


Page 251 of 519