Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பாக்கெட் நீர் குடிக்காதீர் நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினகரன்       24.05.2010

பாக்கெட் நீர் குடிக்காதீர் நகராட்சி வேண்டுகோள்

சிவகங்கை, மே 24: சிவகங் கை நகராட்சி தலைவர் நாகராஜன், ஆணையாளர் விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை நகராட்சி பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை குடிக்க வேண்டும். வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கடைகளில் விற்கும் பாக் கெட் குடிநீரை வாங்கி குடிக்க வேண்டாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஈரோடு நகரில் காலாவதி பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்    24.05.2010

ஈரோடு நகரில் காலாவதி பொருட்கள் அழிப்பு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 1030 கிலோ, எடையுள்ள காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈரோடு மாநகராட்சி பகுதியில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. சென்ற 21ம் தேதி காலை முதல் மதியம் வரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பிரப் சாலை, நேதாஜி சாலை, ஆர்.கே.வி., சாலை, மணிக்கூண்டு, புதுமஜித் வீதி, தியேட்டர் கேன்டின்கள், மரப்பாலம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அழுகிய பழங்கள், காலாவதியான பழச்சாறு வகைகள், குளிர் பானங்கள், பால் பாக்கெட்டுகள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாக்கெட்டுகள், குழந்தைகளுக்கான மிட்டாய்கள், இனிப்பு, கார வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் மாவு பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. 77 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,030 கிலோ எடையுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. காலாவதி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாநகர பகுதிகள் முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவு

Print PDF
தினமலர்    24.05.2010

ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீர் வழங்க உத்தரவு

கீழக்கரை: ஓட்டல்களில் காய்ச்சிய குடிநீரை வழங்க வேண்டும் என நகராட்சி கமிஷனர் சுந்தரம் உத்தர விட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்ட சுகாதார துறையின் அறிவுறுத்தலின்படி கீழக்கரை பகுதிகளில் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கீழக்கரையில் வினியோகம் செய்யப்படும் குடிநீரில் குளோரின் கலக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

வயிற்று போக்கு தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் குடிநீரைகொதிக்க வைத்து குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்டல்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும். திறந்த நிலையில் உணவு பொருட்களை வைக்கக்கூடாது, என கூறியுள்ளார்.

 


Page 252 of 519