Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலார எச்சரிக்கை குடிநீரை காய்ச்சி குடிக்க யோசனை

Print PDF

தினமலர்    24.05.2010

தேனியை தொடர்ந்து பொது மக்களுக்கு காலார எச்சரிக்கை குடிநீரை காய்ச்சி குடிக்க யோசனை

ராமநாதபுரம்: தேனி மாவட்டத்தில் பரவிய காலாரவை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் காலார எச்சரிக்கை விடப்பட்டு பொது மக்கள் பாதுகாப்பான குடிநீரை பருகும்படி அறிவுருத்தப்பட்டு வருகிறது.தேனி மாவட்டத்தில் வயிற்று போக்கு காலாராவாக மாறி உயிரிழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மற்ற மாவட்டங்களில் பொது மக்கள் பாதுகாப்பாக இருக்க சுகாதார துறை தலைமையிடத்திலிருந்து ஒவ்வொரு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

தற்போது சுகாதார துறையின் அறிவுறுத் தலின்படி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகளில் குளோரின் கலந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக் கப்படுகிறது. மேலும் வயிற்று போக்கு தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீடுகளில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். ஓட்டல்களில் காய்ச்சிய நீரை வழங்க வேண்டும்.

திறந்த நிலையில் உணவு பொருட்களை வைக்கக்கூடாது. குறிப்பாக தனியார் லாரிகளில் பாதுகாப்பின்றி கொண்டு வரும் குடிநீரை பொது மக்கள் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் சுகாதார துறையினர் தங்களது பகுதிகளில் யாருக்கேனும் வயிற்று போக்கு லேசாக ஏற்பட்டால் உடனடியாக அவர்களை கண்காணித்து தகுந்த சிகிச்சை அளிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளனர்.

Last Updated on Monday, 24 May 2010 05:57
 

கோலியனூரான் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றம்

Print PDF

தினமலர்    24.05.2010

கோலியனூரான் வாய்க்காலில் தேங்கியுள்ள கழிவுகள் அகற்றம்

விழுப்புரம் : விழுப்புரத்தில் நக ராட்சி பொக்லைன் மூலம் கால்வாய் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது.விழுப்புரத்தில் கால் வாய்களில் தேங்கும் குப் பைகளையும், பிளாஸ்டிக் கழிவுகளையும் நகராட்சி ஊழியர்கள் அகற்றி வந்தனர். கழிவுப் பணியில் ஆட் கள் இருப்பதை தவிர்க்க பொக்லைன் மூலம் கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொக்லைனில் பயன்படுத்த 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாங்கிய பிரத் யேக பக்கெட் மூலம் கால் வாய் கழிவுகள் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. முதற் கட்டமாக கோலியனூரான் வாய்க்காலில் கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது.நேற்று கலெக்டர் அலுவலகம் பின் புறம் துவங்கி திருச்சி நெடுஞ்சாலை, ரங் கநாத ரோடு, கே.கே.ரோடு வரை செல்லும் கோலியனூரான் வாய்க் காலில் அடைபட்டிருந்த பிளாஸ் டிக் கழிவுகள், குப்பைகள் அகற்றி டிராக்டர் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன.

 

பணகுடி பகுதியில் கைப்பற்றப்பட்ட காலாவதியான பொருட்கள் தீ வைத்து அழிப்பு

Print PDF

தினகரன்     21.05.2010

பணகுடி பகுதியில் கைப்பற்றப்பட்ட காலாவதியான பொருட்கள் தீ வைத்து அழிப்பு

பணகுடி, மே 21: மாவட்ட சுகாதார அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து பணகுடி பகுதியிலுள்ள கடைகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது காலாவதியான பிஸ்கட், சாக்லேட், ஐஸ்கிரீம், மாவு பொருட்கள், எண்ணெய் மற்றும் குளிர்பானம் என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கைப்பற்றி பணகுடி ஆரம்ப சுகாதார மருத்துவமனையின் பின்புறம் தீயிட்டு அழித்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைகாரர்களுக்கு காலாவதியான பொருட்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

இதுகுறித்து மருத்துவ அலுவலர் சிவக்குமார் கூறுகையில், ‘பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கும் போது அதில் தயாரிக்கப்பட்ட தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை சரிபார்த்து வாங்கவேண்டும். காலாவதியான பொருட்களை வாங்கி உண்பதால் வயிற்று போக்கு, வாந்தி மற்றும் பல்வேறு உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே விழிப்புணர்வுடன் பொருட்களை வாங்கவேண்டும்.

கடைக்காரர் காலாவதியான பொருட்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் கொடுத்து உடனடியாக மாற்றிக்கொள்ளவேண்டும். இதுபோன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் துறை வாரியான நீதிமன்ற நடவடிக்கை மற்றும் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்என்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் பாலசந்தர், சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, மோரீஸ், சந்திரசேகரன், ராமகிருஷ்ணன், ராஜன், பாலசுப்பிரமணியன், தங்கமாரியப்பன், பணகுடி துப்புரவு மேற்பார்வையாளர் கலைக்குமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

 


Page 253 of 519