Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உணவுப் பொருளில் கலப்படம்: கடைகளில் ஆய்வு

Print PDF

தினமணி     20.05.2010

உணவுப் பொருளில் கலப்படம்: கடைகளில் ஆய்வு

தேனி, மே 19: தேனியில் கடைகளில் கலப்பட உணவுப் பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள் விற்பனை நடைபெறுவது குறித்து, நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தி, மூன்று குளிர்பானக் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

தேனியில் கலப்பட உணவுப் பொருள் விற்பனை குறித்து, நகராட்சி ஆணையர் மோனி உத்தரவில், சுகாதார அலுவலர் தயாளன், உணவு ஆய்வாளர்கள் அறிவுச்செல்வம், முத்துக்கிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் சுருளிநாதன் ஆகியோர் சோதனை நடத்தினர்.

பஸ் நிலையத்தைச் சுற்றியுள்ள பழக்கடைகள், பழச்சாறு விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தியதில், மெழுகு பூசப்பட்ட வாஷிங்டன் ஆப்பிள்களை விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டறிந்து, 100 கிலோ ஆப்பிள்களை பறிமுதல் செய்தனர்.

குளிர்பான உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தியதில், பிரபல கம்பெனிகளின் லேபிள் உள்ள பாட்டில்களில் போலி குளிர்பானங்களை அடைத்து வைத்து விற்பனை செய்வதும், தரமற்ற முறையில் குளிர்பானங்களை உற்பத்தி செய்வதும் தெரியவந்தது.

சுகாதாரமற்ற முறையில் குளிர்பான உற்பத்தி செய்ததாக, கோட்டைக்களம் பகுதியில் உள்ள இரண்டு ஐஸ் கடைகள் மற்றும் அண்ணாநகரில் ஒரு கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

அதிகாரிகளின் சோதனை எதிரொலியாக, தேனியிலுள்ள கடைக்காரர்கள் சிலர் மதுரை சாலையில் உள்ள ராஜாக்குளம் பகுதியில் காலாவதியான பிஸ்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்களைக் கொட்டிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. இவற்றை போலீஸôர் பார்வையிட்டு நகராட்சிப் பணியாளர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.

 

தரமான குளோரின் வாங்க அதிகாரிகளுக்கு அறிவுரை

Print PDF

தினமலர்  20.05.2010

தரமான குளோரின் வாங்க அதிகாரிகளுக்கு அறிவுரை

கம்பம்:குடிநீரில் கலக்கும் குளோரின் தரமானதாக இருக்க வேண்டும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் தாலுகாவில் வயிற்றுப் போக்கினால் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீரில் தரமான குளோரின் போதிய அளவு கலக்காதது வயிற்று போக்கிற்கு காரணம் என சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் பரிசோதனை மையம் அறிக்கை தந்துள்ளது. இதன் அடிப்படையில் தரமான குளோரின் கொள்முதல் செய்ய வாரிய அதிகாரிகளுக்கு கலெக்டர் முத்துவீரன் உத்தரவிட் டுள்ளார். தற்போது வாங்கும் குளோரினை அரசு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி அதன் மூலப்பொருள்களை ஆய்வு செய்யவும் குடிநீர் பம்பிங் ஸ்டேஷன்களில் அதிகாரிகள் மேற் பார்வையில், குளோரின் கலக்கப்பட வேண் டும் என்றும் உத்தரவிட்டார்.

 

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

Print PDF

தினமலர்        20.05.2010

தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீர் வாய்க்காலை சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சுற்றுச் சுவர் ஓரத்தில் செல்லும் கழிவு நீர் கால்வாயில் ஏராளமான கழிவுகள் அடைத் துள்ளன. அங்கு தேங்கிய கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாய சூழல் நிலவுகிறது. கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் வரிசையாக சாலையோர கடைகள் உள்ளது.நகரின் முக்கிய சாலையான தேசிய நெடுஞ்சாலையில், வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள சாலையில் நோய் பரவும் அபாயத்துடன் காட்சி தரும் கழிவு நீர் கால் வாயை சுத்தம் செய்ய நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறப்பதற்கு முன் இதனை சரி செய்ய வேண்டியது அவசியம். தாமதம் செய்தால் மாணவ, மாணவிகளுக்கு நோய் பரவும் ஆபத்தும் உள்ளது.

 


Page 254 of 519