Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரூ.19.25 லட்சம் ஒதுக்கீடு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

Print PDF

தினகரன்      18.05.2010

ரூ.19.25 லட்சம் ஒதுக்கீடு டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுவை ஒழிக்க தீவிர நடவடிக்கை

புதுடெல்லி, மே 19: டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுவை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை இப்போதே எடுக்க வேண்டும்என்று டெல்லி மாநகராட்சி கமிஷனர் கே.எஸ்.மேஹ்ரா கூறினார். மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா நேற்று முன் தினம் இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறிருப்பதாவது:

காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்காக டெல்லி நகரை அழகுபடுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.விளையாட்டு போட்டிகள் நடக்கும் சமயம் கொசுக்கள் அதிகம் உற்பதியாகும் வாய்ப்பு உள்ளது. கொசு உற்பத்தி அதிகமாகனால், டங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. போட்டிகள் நடக்கும்போது டெங்கு காய்ச்சல் பரவினால் நமது நாட்டின் கவுரவம் பாதிக்கும். எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க கொசுக்களை ஒழிக்க வேண்டும்.

வீடுகள், தெருக்கள், சாலைகள் மற்றும் குடியிருப்புக்கள் அனைத்தையும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி மற்றும் மாநில அரசின் அதிகாரிகள், சுயாட்சி அமைப்புக்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வர்த்தக வளாகங்கள், சந்தை அமைப்புக்கள் இப்போதே எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மாநகராட்சியும் அரசும் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் மெஹ்ரா கூறியுள்ளார். டெல்லி மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு

 

தேனி மாவட்டத்தில் காலரா பரவுவதை தடுக்க நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினகரன்        18.05.2010

தேனி மாவட்டத்தில் காலரா பரவுவதை தடுக்க நடவடிக்கை தீவிரம்

உத்தமபாளையம், மே 19: தேனி மாவட்டத்தில் காலரா நோய் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம், சின்னமனூர், தேவாரம், கோம்பை பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலருக்கு வயிற்றுப்போக்கு நோய் பரவியுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 538 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 பேர் பரிதாபமாக பலியாயினர். மேலும் பலருக்கு காலரா அறிகுறி இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நோய் பாதிப்பால் இறந்த பவித்ரா, காலரா கிருமிகள் தாக்கியதால்தான் இறந்ததாக மருத்துவ அதிகாரிகள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால், காலரா அறிகுறி உள்ளவர்களின் மலம் மாதிரிகள் சென்னை கிண்டியிலுள்ள கிங்ஸ் இன்ஸ்டிடியுட், டெல்லியில் உள்ள தேசிய இடர்பாடுகள் ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

காலரா பாதித்த பகுதிகளை தேனி கலெக்டர் முத்துவீரன் பார்வையிட்டு, உறைகிணறுகள், மேல்நிலைத்தொட்டிகளை சுத்தம் செய்ய உத்தரவிட்டார். இப்பகுதியில் 25 டாக்டர்கள் குழுவினர் முகாமிட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

மருத்துவ உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டெல்லியில் உள்ள தேசிய இடர்பாடுகள் ஆய்வு மையத்தில் நடத்தப்படும் சோதனையில், காலரா நோய் கிருமி தாக்குதல் உறுதி செய்யப்பட்டால், அங்கிருந்து அதிகாரிகள் வந்து இப்பகுதியில் நோய் பரவுவதற்கான காரணங்களை ஆய்வு செய்வார்கள். தற்போது இப்பகுதியில் தீவிர நடவடிக்கைகள் மூலம் நோய் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுஎன்றார்.

 

கடையநல்லூரில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினகரன்     18.05.2010

கடையநல்லூரில் காலாவதி உணவு பொருட்கள் பறிமுதல்

கடையநல்லு£ர், மே 19: கடையநல்லு£ரில் கடைக ளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி காலாவதியான பொருட்ளை பறி முதல் செய்தனர்.

கடையநல்லு£ர் நக ராட்சி ஆணையாளர் அப்துல்லத்தீப், துப்புரவு அலுவலர் கணேசமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் கைலாசசுந்தரம், பிச்சையா பாஸ்கர் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் கடைகள் மற்றும் ஓட்டல் கள், பழக்கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் அழுகிய பழங்களை பறிமுதல் செய்தனர். பின்னர் அவை நகராட்சி உரக்கிடங்கில் தீயிட்டு அழிக்கப்பட்டன. கடையநல்லு£ரில் பழக்கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 


Page 256 of 519