Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வயிற்றுப்போக்கு பரவுவதை தடுக்க காய்ச்சிய நீரை குடிக்கணும்: கலெக்டர்

Print PDF

தினமலர்      15.05.2010

வயிற்றுப்போக்கு பரவுவதை தடுக்க காய்ச்சிய நீரை குடிக்கணும்: கலெக்டர்

திருச்சி: 'வயிற்றுப்போக்கு நோயை தடுக்க நன்கு காய்ச்சிய குடிநீரையே குடி க்க வேண்டும்' என திருச்சி மாவட்ட கலெக்டர் சவுண்டையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் காரணமாக பல்வேறு விதமான நோய்கள் பரவுகின்றன. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வயிற்றுப்போக்கு நோய் இருப்பதாக தெரிகிறது. திருச்சி மாவட்டத்தில் முன்னேற்பாடு நடவடிக்கையாக சுகாதார ஆய்வாளர்கள் மூலமாக அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் நோய் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நோயின் பாதிப்பு தெரியவந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், நகர்நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நோய்கட்டுப்பாடு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோய் கண்காணிப்பு பணியும் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் குறிப்பிட்ட காலங்களில் தொற்றுநீக்கம் செய்யப்பட்டு, குடிநீரில் எஞ்சிய குளோரின் அளவு சரியாக இருக்கிறதா? என சுகாதார ஆய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோடை காலத்தில் வயிற்றுப்போக்கு வராமல் தடுக்க பொதுமக்கள் அனைவரும் கீழ்கண்ட நடவடிக்கைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

* சுற்றுப்புற சுகாதாரத்தை பராமரித்தல் மற்றும் மேம்படுத்த வேண்டும்.

* நன்கு காய்ச்சிய குடிநீர் மற்றும் கு ளோரினேஷன் செய்யப்பட்ட பாதுகாக்க ப்பட்ட குடிநீரையே அருந்த வேண்டும்.

* அழுகிய பொருட்கள், பழைய சாத ம், ஈ மொய்த்த திண்டபண்டங்கள் மற்று ம் திறந்தவெளியில் விற்கப்படும் திண்பண்டங்களை தவிர்த்திடுதல் வேண்டும்.

* வயிற்றுப்போக்கிற்கான அறிகுறி தென்படுமாயின் உடன் அருகாமையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களையோ, அரசு மருத்துவமனையையோ அணுகி சிகிச்சைப் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

தரமற்ற உணவுப் பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்     15.05.2010

தரமற்ற   உணவுப் பொருட்கள் அழிப்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தரமற்ற உணவுப் பொருட்களை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ராஜேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் சம்பத், உணவு ஆய்வாளர்கள் பிரபாகர், சிவக்குமார், முருகன் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பையன் உட்பட 15 பேர் அடங்கிய குழுவினர் நேற்று திருத்தணியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையம், அரக்கோணம் சாலை, .பொ.சி., சாலை உட்பட பல பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், இனிப்பு கடைகள், டீக்கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். தரமற்ற குளிர்பானங்கள், இனிப்பு வகைகள், டீத்தூள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

பள்ளிப்பட்டு: இதேபோல் ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம் அரசு மருத்துவர்கள் காந்திமதி, பாலன் ஆகியோர் தலைமையில் ஆர்.கே.பேட்டை, சராத்தூர், ராஜாநகரம், அம்மையார்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், குளிர்பான கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். சோதனையில் தரமற்ற குளிர்பானங்கள், உணவுப்பொருட்கள், குடிநீர் பாக்கெட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனர்.

Last Updated on Wednesday, 19 May 2010 06:29
 

நல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

Print PDF

தினமலர்    15.05.2010

நல்லூர் நகராட்சி பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

திருப்பூர் : நல்லூர் நகராட்சி மற்றும் வீரபாண்டி ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறையினர் நேற்று மேற் கொண்ட ஆய்வில், 36 கிலோ காலாவதி உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.காலாவதியான மருந்து மற்றும் உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகராட்சி மற்றும் 15 வேலம்பாளையம் நகராட்சி பகுதியில் ஏற்கனவே ஆய்வு நடத்தப்பட்டது.நல்லூர் நகராட்சி, வீரபாண்டி ஊராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் நேற்று ஆய்வு நடந்தது. மங்கலம் சுகாதார மருத்துவ அலுவலர் ரமேஷ் தலைமை வகித்தார். பேக்கரி, ஓட்டல், மளிகை கடைகள் என, ஒன்பது இடங்களில் ஆய்வு நடந்தது.வீரபாண்டியில் ஒரு இடத்திலும், நல்லூரில் எட்டு இடங்களிலும் ஆய்வு செய்யப்பட்டது. 4.5 லிட்டர் எண்ணெய் பொருட்கள், 15 ரொட்டி பாக்கெட், 36 கிலோ இதர உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்டன.

இவற்றின் மதிப்பு 3,790 ரூபாய். பொது இடங்களில் புகைபிடித்த ஐந்து நபர்களுக்கு, தலா 100 ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. உடனடியாக ரசீது வழங்கப்பட்டு, அபராதம் வசூலிக்கப்பட்டது; வரும் நாட்களில் அடிக்கடி ஆய்வுகள் நடக்கும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.ஆய்வில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்ரமணியம், முதல்நிலை சுகாதார ஆய்வாளர் ராஜூ, சுகாதார ஆய்வாளர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர

 


Page 258 of 519