Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

இலுப்பூர் பகுதி கடைகளில் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு

Print PDF

தினமலர்       17.05.2010

இலுப்பூர் பகுதி கடைகளில் சுகாதாரத்துறை திடீர் ஆய்வு

இலுப்பூர் : இலுப்பூர் பகுதி கடைகளில் சுகாதாரத்துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பரம்பூர் வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் முகம்மது சுல்தான் சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர்கள் துரைராஜ், அண்ணாத்துரை, மாலதி, உணவுப்பொருட்கள் ஆய்வாளர் சிவமுருகன், இலுப்பூர் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், அன்னவாசல் பேரூராட்சி செயல் அலுவலர் கிறிஸ்டோபர்தாஸ் உட்பட பலர் ஆய்வில் கலந்து கொண்டனர

 

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

Print PDF

தினமலர்     17.05.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தல்

போடி:போடியில் கலங்கலான குடிநீர் சப்ளை செய்வதையொட்டி பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகுமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

போடியில் சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குரங்கனி மலைப்பகுதியிலிருந்து வரும் நீரை போடி பரமசிவன் கோயில் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு சுத்திகரிக்கப் பட்டு நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக குடிநீர் ஆதாரத்தில் கலங் களான குடிநீர் சப்ளை செய்யப்படுவதால் பருகும் பொதுமக்களுக்கு பல் வேறு வகையில் தொந்தரவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே குடிநீரை பொதுமக்கள் நன்கு காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

 

குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

Print PDF

தினமலர்       17.05.2010

குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தை ஒதுக்கி தர வேண்டும்: அரசுக்கு கோரிக்கை

பெரியதாழை, மே 17- சாத்தான்குளம் டவுன் பஞ்., பகுதியில் குவியும் குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நில த்தை ஒதுக்கி தர வேண்டும் என டவுன் பஞ்.,நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.டவுன் பஞ்.,ல் 15 வார்டுகள் உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதி மக்கள் குப்பைகளை தினசரி கண்டபடி தெருக்களில் கொட்டி வருகின்றனர். டவுன் பஞ்., குப்பைஅள்ளும் வாகனம் குப்பைகளை அள்ளி கொண்டு போகும் சிறிது நேரத்திலே பொதுமக்கள் மீண்டும் தெருக்களில் குப்பைகளை கொட்டுவதால் குப்பைகள் தினசரி குவிந்து கொண்டே போகிறது. இந்த குப்பைகளை கொட்டிட இடம் இல்லாமல் டவுன் பஞ்., நிர்வாகம் திணறிக் கொண்டு வருகிறது. மே லும் பொதுமக்கள் குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டக் கூடாது. குப்பை வண்டி வரும்போது அதில் கொட்டி சுகாதாரத்தை பேணுதல் வேண்டும் என டவுன் பஞ்., தலைவர் தங்கத்தாய் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் குவியும் குப்பைகளை கொட்டிட அரசு புறம்போக்கு நிலத்தில் இடம் ஒதுக்கி தரக் கோரி அரசு அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைப் போல் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார். 15 வார்டுகளிலும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக பொதுமக்களை திரட்டி பிளாஸ்டிக் பைக ளை ஒழிப்பது தொடர்பான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திடவும் டவுன் பஞ்., நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விழிப்புணர்வு கூட்டத்திற்கு பின்பும் பிளாஸ்டிக் பைகளை பொதுமக்கள் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டவுன் பஞ்., நிர்வாகம் எச்சரித்துள்ளது.

 


Page 260 of 519