Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரூ.1 லட்சம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி   14.05.2010

ரூ.1 லட்சம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

ஈரோடு, மே 13: ஈரோட்டில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதிப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாநகராட்சிக்கு உள்பட்ட ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், வெண்டிபாளையத்தில் புதைக்கப்பட்டன.

தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

சத்தியில் காலாவதி பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி   14.05.2010

சத்தியில் காலாவதி பொருள்கள் அழிப்பு

சத்தியமங்கலம்,மே 13: சத்தியமங்கலத்தில் காலாவதியான குடிநீர் பொருள்களை சுகாதார துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

சத்தியமங்கலம் நகராட்சியில் காலாவதியான பொருள்கள் விற்பனை குறித்து சோதனை நடத்துமாறு நகராட்சி நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டதன் பேரில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செல்வம், துப்புரவு அலுவலர் கே.சக்திவேல், துப்புரவு ஆய்வாளர்கள் ஆர்.ராமமூர்த்தி, ஈஸ்வரன், சத்தி தனி வருவாய் ஆய்வாளர் ரஜித்குமார் ஆகியோர் வியாழக்கிழமை மளிகைக்கடை, தேநீர், பேக்கரி, டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் ஆய்வு செய்தனர்.

தயாரிப்பு நாள் மற்றும் காலாவதி நாள் உள்ளிட்ட விவரங்கள் இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள், பாட்டில்கள், முறுக்கு, காரவகை மசாலா, மாவுப் பொருள்கள், பேரிட்சை மற்றும் சாயம் கலந்த இனிப்பு வகைகள், உணவு எண்ணெய் வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு, நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர்.

 

 

உசிலம்பட்டி உணவுக் கடைகளில் சோதனை

Print PDF

தினமணி     14.05.2010

உசிலம்பட்டி உணவுக் கடைகளில் சோதனை

உசிலம்பட்டி, மே 13: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சுகாதாரத் துறை துணை இயக்குநர் பழனிச்சாமி உத்தரவின் பேரில், தொட்டப்பநாயக்கனூர் வட்டார மருத்துவ அலுவலர் சபிதா தலைமையில், காவல் துறை சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் முன்னிலையில் காலாவதியான உணவுப் பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டன.

இதில் சுமார் 46 கடைகளில் சோதனை மேற்கொள்ளபட்டது. இதில் நகராட்சி உணவு ஆய்வாளர் சரவணபிரபு மற்றும் தொட்டப்பநாயக்கனூர் சுகாதார ஆய்வாளர்கள் அக்னி கணேசன், நாகராஜ், செல்வராஜ், ஜோதிவாசு, கருப்பசாமி ஆகியோர் சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக பான்பராக், குட்கா, தண்ணீர் பாக்கெட், பிஸ்கெட், புரூட் மிக்சர், ஜூஸ் தயாரிக்கப் பயன்படும் பவுடர் ஆகியன சோதனையிடப்பட்டன.

 


Page 263 of 519