Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Print PDF

தினமணி 14.05.2010

காலாவதியான பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

விழுப்புரம், மே 13: காலாவதியான பொருள்களை இருப்பு வைத்திருந்தாலோ, விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர். பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

""உற்பத்தி தேதி, அதிகபட்ச விற்பனை விலை, எடை, உற்பத்தியாளர் பெயர், முகவர் ஆகியவை குறிப்பிடாத பொட்டலப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் மற்றும் கடை நிர்வாகிகள் கடைகளிலிருந்தும் கிடங்குகளிலிருந்தும் காலாவதியான பொட்டலப் பொருள்களை அகற்றி, அழித்துவிட வேண்டும். மாறாக, சில இடங்களில் சட்ட விரோதமாக சிறு வணிகர்களிடம் விற்றுவிடுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. இது சட்டவிரோதமானது.

உற்பத்தி தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்படாத, பொட்டலமிடப்பட்ட பொருள்கள் விற்கப்பட்டால் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

தரக் குறைவான அல்லது காலாவதியான பொட்டலப் பொருள்கள் விற்கப்படுவதாக பொதுமக்கள் அல்லது நுகர்வோர் அமைப்புகள் தகவல் அறிந்தால், மாவட்ட ஆட்சியரிடமோ, மாநில நுகர்வோர் சேவை மையத்தை 044-28592828 என்ற தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டோ புகார் அளிக்கலாம். மேலும், schtamilnadugmail.com, www.consumer.tn.gov.in என்ற இணைய தளங்களில் புகார்களைப் பதிவு செய்யலாம்.''

 

 

கோயம்பேடு பஸ் நிலையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதி பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி     14.05.2010

கோயம்பேடு பஸ் நிலையத்தில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதி பொருள்கள் பறிமுதல்

சென்னை, மே 13: சென்னை கோயம்பேடு பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 225 கிலோ எடையுள்ள காலாவதி உணவுப் பொருள்களை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

கோயம்பேடு பஸ்நிலையத்தில் உள்ள கடைகளில், பொருள்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், காலாவதியான பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் அங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கடைகளில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதில் 12 கடைகளில் வைக்கப்பட்டிருந்த 75 கிலோ ஐஸ்கிரீம்கள் உருகிய நிலையில் சுகாதார சீர்கேட்டுடன் இருப்பது தெரியவந்தது.

மேலும், ரொட்டி, சிப்ஸ், கார வகைகள் உள்பட 150 கிலோ எடைகொண்ட காலாவதி பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

தரமற்ற உணவு விற்ற ஓட்டல்கள் மூடல்

Print PDF

தினமலர்      14.05.2010

தரமற்ற உணவு விற்ற ஓட்டல்கள் மூடல்

தேனி : வீரபாண்டி திருவிழாவில் தரமற்ற உணவு, குடிநீர், போலி குளிர்பானம் விற்ற ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டு தற்காலிக ஓட்டல்கள் மூடப்பட்டன.

தேனி மாவட்டத்தில் வயிற்றுப்போக்கு பரவியதை தொடர்ந்து வீரபாண்டியில் கலெக்டர் முத்துவீரன் தலைமையில் அதிகாரிகள் ஓட்டல்கள், குளிர்பானங்கள் விற்கும் கடைகளை சோதனையிட்டனர். இதில் தற்காலிகமாக அமைக்கப்படிருந்த ஓட்டல்களில் உணவு, குடிநீர் தரம் மோசமாக இருந் தது. இவற்றை பறிமுதல் செய்து ஓட்டலை மூட உத்தரவிடப்பட்டது. தற்போதுள்ள 250 துப்புரவு பணியாளர்களுக்கு துணையாக மேலும் 100 துப்புரவு பணியாளர்களை நியமித்து பணி மேற்கொள்ள உத்தரவிட்டார்.

ஆர்.டி..,சுப்பிரமணியன் தலைமையில், தாசில் தார், பேரூராட்சி உதவி இயக்குனர், கோயில் நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட சுகாதாரக்குழு அமைத்து, விழா முடியும் வரை வீரபாண்டியில் தங்கி துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

 


Page 264 of 519