Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர்    14.05.2010

காலாவதி உணவு பொருட்கள் அழிப்பு

முசிறி: முசிறி அடுத்த தண்டலைப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் திருச்சி சுகாதாரத்துறை துணை இயக்குனர் வீரபாண்டியன் உத்திரவின் பேரில் முசிறி டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு காலாவதியான உணவு பொருள்களை அழித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சத்தியவதி ஆலோசனையின் பேரில் தண்டலைப்புத்தூர் மருத்துவ அலுவலர் டாக்டர் சந்திரசேகர் தலைமையில் உணவு ஆய்வாளர் கண்ணன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாந்தலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோவன், விஜயகுமார், சிங்காரவேலு, சாந்தி, டவுன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர் புவனேஸ்வரி, துப்புறவு மேற்பார்வையாளர் ரெங்கசாமி, சதாசிவம் ஆகியோர் அடங்கிய குழுவினர், மளிகைக்கடை மற்றும் குளிர்பானக்கடைகளில் காலாவதியான உணவுப்பொருள், குளிர்பானம், எண்ணெய் பொருள் ஆகியவை உள்ளதா என்று திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 1,200 ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப்பொருள்கள் மற்றும் குளிர்பானங்கள், பொதுமக்கள் முன்னிலையில் அழிக்கப்பட்டது.

 

சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வில் காலாவதி பொருட்கள் சிக்கியது

Print PDF

தினமலர்        14.05.2010

சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வில் காலாவதி பொருட்கள் சிக்கியது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்பட்ட உணவுப் பொருட்களில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.காஞ்சிபுரம் நகர்நல அலுவலர் பரணிதரன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ் குமார், அலி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வெங்கட்ராமன், காஞ்சிபுரம் குடிமைப் பொருள் தனி தாசில்தார் மோகன் ஆகியோர் காமராஜர் வீதியில் உள்ள சிங்கப்பூர் சீமாட்டி, வள்ளல் பச்சையப்பன் தெருவில் உள்ள காஞ்சி சூப்பர் மார்க்கெட், மேற்கு ராஜவீதியில் உள்ள மோர் சூப்பர் மார்க்கெட் ஆகியவற்றில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, வத்தல், அவல், பிஸ்தா, மீல்மேக்கர், கார்ன்ப்ளேக்ஸ், மக்ரோனி, மிட்டாய், நூடுல்ஸ், மணிலா பருப்பு போன்ற உணவுப் பொருள் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். 5,000 ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருள் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களை நகர்நல அலுவலர் எச்சரித்துள்ளார். இந்நிலை தொடர்ந்தால் போலீஸ் மற்றும் சுகாதாரத் துறை மூலம் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர்(பொறுப்பு) சிவராசு தெரிவித்துள்ளார்.

 

'கார்பைட்' மாம்பழம் பறிமுதல் : சோதனை நடத்த திடீர் சிக்கல்

Print PDF

தினமலர்     14.05.2010

'கார்பைட்' மாம்பழம் பறிமுதல் : சோதனை நடத்த திடீர் சிக்கல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியின் சுகாதார நடவடிக்கைகளில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதால், 'கார்பைட்' வைத்து பழுக்க வைத்த மாம்பழங்கள் பறிமுதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட காந்தி மார்க்கெட் பழக்குடோன் களில், மாங்காய்களை 'கார்பைட்' கல் வைத்து பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது.நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில் சுகாதாரத்துறையினர், அதிரடியாக ரெய்டு நடத்தினர். நான்கு கடைகள் மட்டும் ஆய்வு செய்த நிலையில், 'கார்பைட்' மூலம் பழுக்க வைத்த அனைத்து மாம்பழங்களையும் பறிமுதல் செய்யவில்லை.

இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: காந்தி மார்க்கெட் பழக் கடைகளில் ரெய்டு நடத்த துவங்கியதும், ஆளுங்கட்சியை சேர்ந்த ஒப்பந்ததாரருக்கும், பொள்ளாச்சியில் உள்ள ஆளுங்கட்சி முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் தகவல் சென்றது. முதல் கடையில் ரெய்டு நடத்தி அதிகாரிகள் வெளியேறியதும், சுகாதார ஆய்வாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஆளும் கட்சியின் முக்கிய நிர்வாகி போன் செய்தார்.'உலகம் முழுவதும் மாங்காயை பழுக்க வைக்க 'கார்பைட்' கல் வைக்கிறார்கள். பொள்ளாச்சியில் மட்டும் 'கார்பைட்' கல் வைப்பது போன்று ரெய்டு நடத்துகிறீர்கள். பறிமுதல் செய்த மாம்பழங்களை ஒப்படைத்து விட்டு, ரெய்டை உடனடியாக கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அமைச்சரிடம் பேசி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்' என்று எச்சரித்தார்.அதனால், வேறு வழியின்றி சோதனையை நிறைவு செய்து திரும்பி விட்டோம்.'கார்பைட்' கல் வைத்து பழுக்க வைத்த மாம்பழங்களை சாப்பிடுவதால் வாந்தி, பேதி, ஜீரணக் கோளாறு ஏற்படும். அதனால் அந்த மாம்பழ விற்பனையை தடுக்க ரெய்டு நடத்தப்படுகிறது. இதிலும், ஆளுங்கட்சி தலையீடு ஏற்பட்டால் மக்களின் சுகாதாரம் பாதிக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார

 


Page 265 of 519