Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குடிநீரினால் வயிற்றுப்போக்கு பரவவில்லை: ஆணையர்

Print PDF

தினமணி    12.05.2010

குடிநீரினால் வயிற்றுப்போக்கு பரவவில்லை: ஆணையர்

போடி, மே 11: போடியில் குடிநீரினால் வயிற்றுப்போக்குப் பரவவில்லை என ஆணையர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார். போடியில் வயிற்றுப்போக்கினால் கடந்த சில தினங்களாக பலர் பாதிக்கப்பட்டு, வெளி நோயாளிகளாகவும், அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். பலர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். செவ்வாய்க்கிழமை, வயிற்றுப்போக்கு, வாந்தியினால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகளில் போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பாலுச்சாமி, நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், மெர்லி வர்கீஸ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது பழைய ஆஸ்பத்திரி தெருவில் இறந்த மாட்டிறைச்சி சில தினங்களாக இருப்பு வைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அழித்தனர். இப் பகுதியில் விநியோகிக்கப்படும் குடிநீரையும் சோதனை செய்தனர்.

மேலும், பொதுமக்களிடம் கொட்டகுடி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. எனவே, தண்ணீரைக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். இறந்த மாட்டிறைச்சியை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறித்தினர்.

இதுகுறித்து ஆணையர் சரவணக்குமார் கூறியது:

போடி நகராட்சியில் குடிநீர் குளோரினேசன் முறைப்படி செய்து விநியோகம் செய்து வருகிறோம். தற்போது மலைப் பகுதியில் மழை பெய்ததால், தண்ணீர் கலங்கலாக வருகிறது. வயிற்றுப்போக்கு பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ததில், அவர்களில் சிலர் இறந்த மாட்டிறைச்சியைச் சாப்பிட்டதும், சுகாதாரக் கேடான குளிர்பானங்களைச் சாப்பிட்டதும் காரணம் எனத் தெரிய வருகிறது.

போடி நகரில் விநியோகிக்கப்படும் குடிநீரை தூய்மையாக வழங்கி வருகிறோம். குடிநீர்ப் பிரச்னையினால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், ஒரே பகுதியில் பலரை பாதிக்கும்.

எனவே, போடி பகுதியில் குடிநீரினால் வயிற்றுப்போக்கு ஏற்பட வாய்ப்பில்லை. வயிற்றுப்போக்கு பாதித்த பகுதிகளில் சுண்ணாம்பு தூள் தெளித்தல், சாக்கடை தூர்வாருதல், வீடுகளில் சென்று தடுப்பு மருந்துகள் அளித்தல் போன்ற பணிகள் மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார்.

 

50 ஆயிரம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி 12.05.2010

50 ஆயிரம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

திருத்தணி,மே 11: திருத்தணியில் ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பில் காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.

÷திருத்தணி கந்தசாமி தெரு, மபொசி சாலை, அரக்கோணம் சாலை உள்ளிட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் கண்டுப்பிடித்து அழித்தனர்.

÷செவ்வாய்க்கிழமை திருத்தணி நகராட்சி ஆணையர் செண்பகராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கருப்பைய்யா, மேற்பார்வையாளர் சாமுவேல் ஆகியோர் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அரக்கோணம் ரோட்டில் உள்ள மளிகைக் கடை, பேக்கரி, டீக்கடைகள், டிபார்ட்மென்டல் ஸ்டோர் உள்ளிட்ட கடைகளில் திடீரென ஆய்வு நடத்தினர்.

÷அப்போது காலாவதியான உணவுப் பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ÷சாக்லெட், பேரிச்சை பழம், சத்துமாவு, அப்பளம் உள்ளிட்ட உணவுப் பொருள்களை நகராட்சி ஊழியர்கள் அழித்தனர். திருத்தணி நகராட்சி பகுதியில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காலாவதியான உணவுப் பொருள்கள் கண்டுப்பிடித்து அழிக்கப்பட்டன.

÷தொடர்ந்து சோதனை நடத்தப்படும். காலாவதி பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் கருப்பைய்யா தெரிவித்தார்

Last Updated on Wednesday, 12 May 2010 11:17
 

ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

Print PDF

தினமணி  12.05.2010

ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு

திருத்துறைப்பூண்டி, மே 11: திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றின் கரையில் கிடந்த ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை அழித்தனர்.

திருத்துறைப்பூண்டியில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து திருவாரூர் சாலையில் உள்ள பல்வேறு கடைகளிலும் நகராட்சி ஆணையர் திருமலைவாசன், துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் செவóவாய்க்கிழமை சோதனை நடத்தினர். இதில் காலாவதியான குளிர்பானங்கள், பால் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனிடையே, வேளூர் கிராமத்தில் அடப்பாற்றின் கரையில் காலாவதி பொருள்கள் கொட்டப்பட்டிருப்பதாக நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் வந்தது. இதன்பேரில், அலுவலர்கள் அங்கு சென்றபோது, அந்தப் பொருள்களை பொதுமக்கள் எடுத்து செல்ல முற்பட்டனராம். அவர்களை தடுத்து நிறுத்திய அலுவலர்கள், அந்தப் பொருள்களை எடுத்து சென்று தீயிட்டு அழித்தனர். இதைத்தொடர்ந்து, காலாவதியான உணவுப் பொருள்கள் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்று நகராட்சி ஆணையர் திருமலைவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Page 266 of 519