Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியானபொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்     12.05.2010

காலாவதியானபொருட்கள் பறிமுதல்

பண்ருட்டி : பண்ருட்டி பஸ் நிலையம் பகுதி கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.பண்ருட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் கள் மணிகண்டன், சுதாகர், மேற் பார்வையாளர்கள் பாண்டியன், கொளஞ்சி உள்ளிட்டோர் பஸ் நிலைய பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, ஓட்டல்கள், பங்க் கடைகள் உள்ளிட்ட கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் காலாவதியான, பெயர் விலாசம், தயாரிப்பு நாட்கள் இல்லாத ஸ்வீட்கள், பேக்கரி பொருட்கள், பிஸ்கட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர

 

கெட்டுப்போன மீன், மாட்டிறைச்சி சிக்கியது! : 'குளுகுளு' கடைகளில் அதிரடி ரெய்டு

Print PDF

தினமலர்     12.05.2010

கெட்டுப்போன மீன், மாட்டிறைச்சி சிக்கியது! : 'குளுகுளு' கடைகளில் அதிரடி ரெய்டு

அம்பத்தூர் : சென்னை மேற்கு முகப்பேர் பகுதிகளில் குளுகுளு 'ஏசி' பொருத்தப்பட்ட பெரிய, பெரிய கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன், மாட் டிறைச்சி மற்றும் அழுகிய பழங் களை, அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் நகராட்சிக்குட் பட்ட கடைகள், சூப்பர் மார்க் கெட்களில் நகராட்சி சுகாதாரத் துறையினர், கடந்த இரண்டு நாட் களாக சோதனையிட்டு வருகின்றனர். நேற்று முகப்பேர் மேற்கு பகுதிகளில் உள்ள பிரஸ் அண்ட் பிரஸ், ஸ்பென்சர்ஸ், ரிலையன்ஸ், மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்கள், காய்கறி, இறைச்சி விற்பனை கடைகளில் நகர் நல அலுவலர் டாக்டர் மணிமாறன், உணவு ஆய்வாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட குழுவினர், அதிரடி சோதனை மேற்கொண்டனர். குளுகுளு 'ஏசி' பொருத்தப் பட்ட, அதிநவீன சூப்பர் மார்க் கெட்டுகளில் சோதனை நடத்திய சுகாதாரக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். விற்பனை பிரிவில் இருந்த மீன்களில் பல கெட்டுப் போய் துர்நாற்றம் அடித்தது. அதை கையால் எடுத்து சோதனை செய்ததில், 'பிசுபிசு'வென இருந்தன. மற்றொரு கடையில் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சியும் கெட்டுப் போய், துர்நாற்றம் வீசியது. கெட்டுப்போனது தெரியாமல் மறைக்க ஐஸ் கட்டிகளை நிரப்பியிருந்தனர். கெட்டுப்போன மீன் மற்றும் மாட்டு இறைச்சிகளை சுகாதாரக் குழுவினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், அழுகிப்போன காய்கறிகள், பழங்கள், காலாவதியான பிஸ்கட், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சுகாதாரக் குழுவினரின் சோதனையைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கிருந்த பிளேடு பாக்கெட்டை எடுத்துக் காட்டினார். அதில் கடந்த 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தது. இதையடுத்து, அந்த பாக்கெட் களையும் சுகாதாரக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.இந்த அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர

Last Updated on Wednesday, 12 May 2010 10:18
 

உஷார்: அழுகிய ஆப்பிளில் அட்டகாசமான ஜூஸ்; அதிகாரிகள் ரெய்டில் அம்பலம்; பறிமுதல்

Print PDF
தினமலர்     12.05.2010

உஷார்: அழுகிய ஆப்பிளில் அட்டகாசமான ஜூஸ்; அதிகாரிகள் ரெய்டில் அம்பலம்; பறிமுதல்

கோவை: கோவை நகரில் மாநகராட்சி நகர்நல அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஜூஸ் தயாரிக்க அழுகிய நிலையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 'காலாவதியான மற்றும் கலப்பட உணவு பொருட்களை விற்பனை செய்யக்கூடாது' என, கோவை மாநகராட்சி நகர்நலத்துறை எச்சரித்துள்ளது. இதை மீறி, நகரிலுள்ள பெரும்பாலான கடைகளில் காலாவதியான உணவு பொருட்கள் விற்கப்படுகின்றன. தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி உள்ளிட்ட விபரங்கள் இல்லாமலும் பொருட்கள் பேக்கிங் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

விற்பனை செய்யப்படும் பேக்கிங் பொருட்களின் மீது தயாரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, நிகர எடை, விலை விபரம், தயாரிப்பு பொருளில் கலக்கப்பட்டுள்ள பொருட்களின் விபரம் உள்ளிட்டவை 'தமிழ்நாடு பொட்டல பொருட்கள் சட்டம்- 1977'ன்படி அச்சிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இவ்விபரங்கள் இல்லாமலே எண்ணற்ற பொருட்கள் விற்கப்படுகின்றன. 'குடிசைத் தொழில்' என்ற பெயரில் தயாரிக்கப்படும் மிக்ஸர், முறுக்கு, காரக்கடலை, ஊறுகாய், இட்லி மாவு, ரவை பாக்கெட்கள் மீது மேற்கண்ட விபரங்கள் அச்சிடப்படுவதில்லை. இது போன்ற தயாரிப்புகள், கோவை நகரிலுள்ள செல்வபுரம், சொக்கம்புதூர், காந்திபார்க் பகுதிகளில் குடிசைத்தொழிலாக மேற்கொள்ளப்படுகின்றன. பாலிதீன் கவர்களில் பேக்கிங் செய்யப்படும் உணவுப்பொருட்கள் மற்றும் தின்பண்டங்கள் சப்ளையர்கள் மூலமாக சைக்கிள், பைக்குகளில் எடுத்துச் செல்லப்பட்டு கடைகளுக்கு விற்கப்படுகின்றன.

இவை, விற்கப்படாமல் மாதக்கணக்கில் கிடப்பில் இருந்தாலும், பலரும் வாங்கிச் செல்கின்றனர். கெட்டுப்போய் எண்ணெய் வாடை வீசினாலும், வேண்டா வெறுப்பாக உட்கொண்டு விடுகின்றனர். இதனால், வயிற்று உபாதைகள் ஏற்படுகின்றன. இது போன்ற தின்பண்டங்களின் தயாரிப்பு மற்றும் விற்பனையை முறைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிகாரிகள் ரெய்டு: பீளமேடு ஹோப் காலேஜ் பகுதியிலுள்ள இரு பேக்கரிகளில் மாநகராட்சி உணவு ஆய்வாளர் சந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். காலாவதியான பிஸ்கட், சிப்ஸ் பாக்கெட்டுகள், ஜூஸ் தயாரிக்க வைக்கப்பட்டிருந்த அழுகிய ஆப் பிள் உள்ளிட்ட பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாநகராட்சி உதவி நகர் நல அலுவலர் அருணா கூறுகையில், ''உணவுப்பொருளில் கலப்படம் செய்யாமல், வியாபாரிகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். உணவுப்பொருளை பேக்கிங் செய்யும் போது தயாரிப்பு தேதி, எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்ற விபரங்களையும் குறிப்பிட வேண்டும். ''இது குறித்து, வியாபாரிகள் மற்றும் குடிசைத்தொழில் செய்வோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்; மீறினால், சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

Last Updated on Wednesday, 12 May 2010 10:16
 


Page 269 of 519