Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் மே 12 முதல் உணவகங்களில் சோதனை

Print PDF

தினமணி 06.05.2010

சிவகாசி சுகாதார மாவட்டத்தில் மே 12 முதல் உணவகங்களில் சோதனை

சிவகாசி, மே 5: சிவகாசி சுகாதார மாவட்டத்தில் உள்ள சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய வட்டங்களில் உள்ள உணவகங்களில் மே 12-ம் தேதி முதல் சோதனை மேற் கொள்ளப்படும் என சிவகாசி சுகாதார மாவட்ட இணை இயக்குநர் பாலசுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நகராட்சிப் பகுதியில் உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார அலுவலர் 5 பேர் அடங்கிய குழுவினர் உணவகங்களில் சோதனை நடத்த உள்ளனர்.

கிராமபுறத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட குழுவினர் சோதனை செய்வார்கள். பேரூராட்சி பகுதிகளில் செயல்அலுவலர் மற்றும் உணவு ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்துவர். இவர்கள் காலாவதியான பொருள்கள் இருந்தால் பறிமுதல் செய்வார்கள்.

உணவு விடுதி மற்றும் மளிகைக் கடை, ஸ்டேஷ்னரி கடைகளிலும் சோதனை நடத்தப்படும். குறைபாடுகள் இருந்தால் பொது சுகாதார சட்டப்படி இயங்க அறிவுரை கூறுவோம்.

உணவங்களில் செயற்கை இலைகளை உபயோகிக்க கூடாது. உணவின் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்புவோம். ஏற்கனவே பல டீக்கடைகளில் சோதனை நடத்தியுள்ளோம். அங்கு மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். உணவகங்களில் சமையல் செய்பவர்கள், பரிமாறுபவர்கள் மருத்துவச் சான்று பெற வேண்டும். இலவசமாக பரிசோதனை செய்து சான்று அளிக்கப்படும். சான்றிதழ் இல்லாமல் பணிபுரிவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திறந்த வெளியில் உணவுப் பொருளை வைத்திருக்கக் கூடாது. இதனால் ஈ மொய்த்து பல வியாதிகள் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் இது குறித்து விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்றார் பாலசுப்பிரமணியன்.

 

கோவில்பட்டி உணவு விடுதிகளில் சுகாதார அலுவலர்கள் "திடீர்' ஆய்வு

Print PDF

தினமணி 06.05.2010

கோவில்பட்டி உணவு விடுதிகளில் சுகாதார அலுவலர்கள் "திடீர்' ஆய்வு

கோவில்பட்டி, மே 5: கோவில்பட்டி நகராட்சிப் பகுதியிலுள்ள உணவு விடுதி மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களில் சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

உணவு விடுதி மற்றும் உணவுப் பொருள் விற்பனை நிலையங்களிலுள்ள பொருள்கள் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளதா, காலாவதியான பொருள்களை விற்பனை செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய நகராட்சி ஆணையர் விஜயராகவன், சுகாதார அலுவலருக்கு உத்தரவிட்டார்.

அதன்பேரில், கோவில்பட்டி நகராட்சி சுகாதார அலுவலர் ராஜசேகரன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் வெங்கடேஷ், முத்துக்குமார் மற்றும் சுகாதார ஊழியர்கள் கோவில்பட்டி - எட்டையபுரம் சாலை, பசுவந்தனை சாலை மற்றும் பிரதான சாலையிலுள்ள உணவு விடுதி மற்றும் உணவு பொருள் விற்பனை நிலையங்களுக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கடைகளில் வைக்கப்பட்டுள்ள குளிர்பானம் பாட்டில்கள், தேயிலை பாக்கெட், கடலை மாவு, சேமியா, நெய் மற்றும் மஞ்சள்பொடி ஆகிய பாக்கெட்களை சோதனையிட்டபோது, தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது, எந்த தேதியும் குறிப்பிடாமல் வைக்கப்பட்டுள்ள தேயிலை, கடலை மாவு, சேமியா பாக்கெட்களை சுகாதாரத் துறையினர் கைப்பற்றி அழித்தனர்.

மேலும், உணவு விடுதிகளுக்குச் சென்று தயாரித்த பொருள்களை பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டுள்ளதா, தரமான பொருள்களை கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தனர்.பணியாளர்கள் சுத்தமாக இருக்கும்படியும் அறிவுரை வழங்கினர்.

இதுகுறித்து, சுகாதார அலுவலர் ராஜசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாக்கெட்டிலுள்ள பொருள்கள் எப்போது தயார் செய்யப்பட்டுள்ளது. முதிர்வு தேதி ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதா என்றும், உணவுப் பொருள்கள் முறையாக தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு செய்தோம். உரிமையாளர்களிடம் காலாவதியான பொருள்களை பயன்படுத்தக் கூடாதுஎன்றும், தயாரிப்பு மற்றும் முதிர்வு தேதி அல்லாத பாக்கெட் பொருள்களை விற்பனைக்கு வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

மாநகராட்சி பகுதியில் இறைச்சி விற்கத் தடை

Print PDF

தினமணி 06.05.2010

மாநகராட்சி பகுதியில் இறைச்சி விற்கத் தடை

மதுரை, ஏப். 26: புத்த பூர்ணிமா விழா அனுசரிக்கப்பட உள்ளதால் வருகிற 28}ம் தேதி மாநகராட்சிப் பகுதியில் இறைச்சிகள் விற்பனைக்குத் தடை விதித்துள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) .தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சிப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி வதைச் செய்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் வதை செய்யும் இடங்களுக்கு மாநகராட்சி விடுமுறை அறிவித்துள்ளது. எனவே அன்றைய தினம் ஆடு, மாடு வதை செய்வது சட்டப்படி குற்றம் ஆகும். இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, இறைச்சிகளும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.

 


Page 271 of 519