Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நல்லூர் பகுதியில் ஆய்வு அவசியம்

Print PDF

தினமலர் 06.05.2010

நல்லூர் பகுதியில் ஆய்வு அவசியம்

திருப்பூர் : நல்லூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மற் றும் ஓட்டல்களில் ஆய்வு நடத்த, மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

காலாவதியான மருந்துகள் மற்றும் உணவு பண்டங்களின் பிரச்னை, தமிழகம் முழு வதும் உள்ளது. திருப்பூரில் சுகாதாரத் துறையினர், மாநகராட்சி யோடு இணைந்து நேற்று பல மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினர். நல்லூர் நகராட்சியில் 11 ஆயிரம் குடும்பங் கள் வசிக்கின்றன. நக ராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் 500க் கும் மேற்பட்ட ஓட்டல் கள், பேக்கரிகள், மருந்து கடைகள் செயல்பட்டு வருகின்றன. மாலை நேரங்களில் ரோட் டோர கடைகளும் முளைக்கின்றன.

திருப்பூருக்கு அடுத்த படியாக அதிகளவி லான நிறுவனங்கள் செயல்படுகின்றன; பல ஆயிரம் தொழிலாளர் கள் தங்கியுள்ளனர். இவர்களது அன்றாட வாழ்வாதாரம், கடை களையும், ஓட்டல் களையும் சார்ந்திருக் கின்றன. இக்கடைகளில் வினி யோகிக்கப்படும் உணவு, சுகாதாரமாக இருப்பதில்லை. எனவே, நல்லூர் நக ராட்சி பகுதியிலும் சுகா தாரத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Last Updated on Thursday, 06 May 2010 06:52
 

'உவ்வே' ஓட்டல்களை களையெடுக்குமா சுகாதாரத்துறை?

Print PDF

தினமலர் 06.05.2010

'உவ்வே' ஓட்டல்களை களையெடுக்குமா சுகாதாரத்துறை?

திருப்பூர் : திருப்பூரில் உள்ள பல ஓட்டல்கள் சுகாதாரமின்றி செயல்படுகின்றன; மாநகராட்சி சுகாதாரத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

மதுரையில் நேற்று முன்தினம் சுகாதாரமற்ற ஒரு ஓட்டலில், பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சுகாதாரமற்ற ஓட்டல்களுக்கு 'சீல்' வைத்து நடவடிக்கை எடுத்தனர். திருப்பூரில் பல ஓட்டல்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வருகின்றன. உணவு சமைக்கப்படும் சமையல் அறைகளில், எவ்வித சுகாதாரமான முறைகளும் பின்பற்றபடுவது இல்லை.

சிக்கன், மட்டன், மீன் போன்ற அசைவ வகைகள், சுகாதாரமாக பாதுகாக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுவது இல்லை. ஈக்கள், கொசுக்கள், பல்லிகள், கரப்பான் பூச்சிகள் மொய்க்கும் பகுதிகளில், உணவு வகைகள் திறந்தவெளியில் வைத்து, பரிமாறப்படுகின்றன.

பலகாரங்களில், நிறத்துக்காக, உடல் நலத்துக்கு கேடான ரசாயனப்பொடி வகைகள் கலக்கப்படுகின்றன. போலி டீத்தூள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உணவுக்காக பயன்படுத்தப்படும் பல பொருட்களை, குறைந்த விலையில் மலிவாக பெறுவதால், தரமில்லாத பொருட்களை கொண்டே பல ஓட்டல்களில் உணவு தயாரிக்கப்படுகிறது.

உரிமம் புதுப்பிக்கப்படாமலும், உரிமம் பெறாமலும் திருப்பூரில் பல உணவகங்கள் இயங்குகின்றன. புகார்கள் வரும்போது மட்டும், பெயரளவுக்கு சில ஓட்டல்களில் மாநகராட்சி சுகாதாரத்துறை 'ரெய்டு' நடத்துகிறது; மற்ற நேரங்களில் 'தூங்கி' வழிகிறது. நகரில் உள்ள சுகாதாரக்கேடுகளை தடுப்பதிலும், தவிர்ப்பதிலும் சுகாதாரத்துறை தரப்பில் முனைப்பான நடவடிக்கை எதுவும் இல்லை.

இனியாவது மாநகராட்சி சுகாதாரத்துறை அக்கறையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டல்களில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும். உணவு பொருட்கள் மற்றும் உணவு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து, சுகாதாரமற்ற முறையில் இயங்கும் ஓட்டல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

 

மளிகை கடைகளில் திடீர் 'ரெய்டு' : காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் : திருப்பூர் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 06.05.2010

மளிகை கடைகளில் திடீர் 'ரெய்டு' : காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் : திருப்பூர் சுகாதாரத்துறை அதிரடி நடவடிக்கை

திருப்பூர் : திருப்பூரில் உள்ள மளிகை கடைகளில் சுகாதாரத் துறையினர் நேற்று திடீரென சோதனையிட்டனர். தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியுடன் கூடிய உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூர் தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள மளிகை கடைகள் மற்றும் மொத்த விற்பனை மையங் களில் நேற்று திடீர் ஆய்வு நடத்தப் பட்டது. சுகாதாரத்துறை துணை இயக்குனர் (சுகாதார பணி) விஜய லட்சுமி, நகர் நல அலுவலர் ஜவஹர் லால் உள்ளிட்டோர் மளிகை கடை களில் ஆய்வு மேற்கொண்டனர். பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள 30க்கும் அதிகமான மளிகை மற்றும் எண்ணெய் கடைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது.

அக்கடைகளில், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாத பொருட்கள் இருந்தன. மைசூர் துவரம் பருப்பு, துவரம் பருப்பு, 'சிப்ஸ்' வகைகள், காபித்தூள், டீத்தூள், நெய், எண்ணெய் பாக் கெட்டுகள், பிஸ்கட், கார வகைகள், மசாலா பொருட்கள், மிட்டாய் மற்றும் இனிப்பு வகைகள், வர்க்கிகள் என, தேதி குறிப்பிடாத பல்வேறு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மளிகை கடைகளில் விற்கப்பட்ட மாத்திரை வகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமம் இல்லாமல் மாத்திரை விற்றால், மருந்து கட்டுப் பாட்டு அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கடை உரிமையாளர் எச்சரிக்கப்பட்டார்.

குறிப்பாக, கலர் சேர்க்கப்பட் டிருந்த, கலர் மிட்டாய் வகைகள், பச்சை பட்டானி, பாக்கு வகைகள் முழுமையாக பறிமுதல் செய்யப் பட்டன. பல்லடம் ரோட்டில் ஆய்வு நடத்திய போது, டிபார்ட்மென்டல் ஸ்டோர் ஒன்றில், தேதியில்லாத உணவு பொருட்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும், சொந்த மாக பொருட்களை வாங்கி, பாக் கெட் செய்வதும் கண்டு பிடிக்கப்பட்டது.

'சொந்தமாக பாக்கெட் செய்வ தற்கு முன்னதாக, நகர் நல அலுவல கத்தில் உரிமம் பெற வேண்டும். உணவு பொருட்களை பாக்கெட் செய்யும் போது, தயாரிப்பு மற்றும் காலாவதியாகும் தேதிகள் கட்டாயம் குறிப்பிட வேண்டும்' என, எச்சரிக்கப்பட்டது.

தாசில்தார் பாலசுப்ரமணியம், தெற்கு வருவாய் ஆய்வாளர் பாபு ஆகியோர் முன்னிலையில், 'பறிமுதல் செய்யப்பட்ட உணவு பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்' என, ஊழியர்களுக்கு உத்தரவிடப் பட்டது. ஆய்வின் போது, உணவு ஆய்வாளர்கள் தங்கவேல், வெங்க டேஷ், முருகேசன், ராமசாமி, சண்முக சுந்தரம் ஆகிய உணவு ஆய்வாளர்கள் கடைகளில் சோதனை நடத்தினர்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயலட்சுமி கூறியதாவது: திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஆய்வு பணி துவங்கியுள்ளது; தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு கடைக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தேதியில்லாத பொருட் கள் அனைத்தும் பறிமுதல் செய்து அழிக்கப்படும். கடைகளில் நடத்தப் பட்ட ஆய்வில், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தேதியில்லாத உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படும் போது, காலாவதியான பொருட்கள் விற்பனை தானாக குறைந்து விடும். உணவு பொருட்களை வாங்கும் போது, தயா ரிப்பு தேதி, காலாவதியாகும் தேதி, அளவு, மூலப்பொருட்கள், கலோரி அளவு உள்ளிட்ட அனைத்து விபரங் களையும் சரிபார்த்து வாங்க வேண்டும்.

சாதாரண உப்பு வாங்கும்போது கூட, 15 பி.பி.எம்., அளவுள்ள அயோ டின் கலந்த உப்புக்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். தற்போது நடத்தப்படும் சோதனைகளில்கூட, 49 சதவீதம் பேர் அயோடின் இல்லாத உப்புகளை வாங்கி பயன்படுத்துவது தெரியவந்தது.

சாதாரண உப்பு என்று நினைக்க வேண்டாம். அயோடின் கலக்காத உப்பை பயன்படுத்தும்போது, குழந்தை பேறின்மை, மூளை வளர்ச்சியின்மை, முன் கழுத்து கழலை நோய், தைராய்டு உள்ளிட்ட நோய் தாக்கம் ஏற்படும். அனைத்து நிறுவனங்களிலும், காலா வதியான பொருட்கள் தனியாக பாது காத்து, திருப்பி அனுப்ப வேண்டும். இல்லாதபட்சத்தில், 'புட் செல்' அதிகாரிகள் மூலமாக மேல் நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

அதன்பின், அரிசிக்கடை வீதியில் உள்ள குழந்தைகள் உணவுப்பொருள் மையத்தை சோதனை செய்து, அங் குள்ள பதிவேடுகளை சரிபார்த்தனர்.

அவிநாசியிலும் அதிரடி: திருப்பூர் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) பாண்டிப்பெருமாள் தலைமையில், தாசில்தார் சென்னியப்பன், ஆர்.., பழனிசாமி, டி.எஸ்.., சண்முகவடி வேல், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராமச் சந்திரன் ஆகியோர் அவிநாசியில் நேற்று உணவு பொருட்கள் விற்கும் கடைகளில் 'ரெய்டு' நடத்தினர். மொத்தம் 16 கடைகளில் நடந்த சோதனையில், காலாவதியான முறுக்கு, பிஸ்கட், சாக்லெட் உள்ளிட்ட 110 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது.

அவிநாசி வட்டார உணவு ஆய்வாளர் துரைராஜ் கூறுகையில், ''காலாவதியான உணவு பொருட் களை விற்பனை செய்தால், சட்ட நடவடிக்கை குறித்து வியாபாரி களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து விற்பனை செய்தால், கடை யின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறிவுறுத்தப்பட்டது,'' என்றார்.

பல்லடத்தில் எச்சரிக்கை: பல் லடம் தாசில்தார் குலோத்துங்கன், நகராட்சி செயல் அலுவலர் பெஞ்சமின் குணசிங், உணவு ஆய்வாளர் விஜய ராஜா, வட்ட வழங்கல் அலுவலர் தாஸ் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அடங் கிய குழுவினர், பல்லடம் பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் சோதனை நடத்தினர்.

பல கடைகளில் ரவை மற்றும் பெருங்காய பவுடர் காலாவதியாகி இருப்பதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இனி, இதுபோல் காலா வதியான உணவுப்பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். சுல்தான்பேட்டை, செஞ்சேரி பகுதி களில் உள்ள கடைகளில், சுகாதார ஆய்வாளர்கள் வெள்ளிங்கிரி, ரவிச் சந்திரன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து, 855 ரூபாய் மதிப்புள்ள காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில், 82 ஆயிரத்து 699 ரூபாய் மதிப்புள்ள, 1,316 கிலோ காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதோடு, காலாவதியான 21 லிட்டர் குடிநீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.5,000 அபராதம்! மாநகராட்சி பகுதியில், 20 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருட்கள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்லடம் ரோடு பகுதியில் உள்ள கடையில் ஆய்வு செய்த போது, தடை செய்யப்பட்ட 'பிளாஸ்டிக் ஒன்யூஸ்' டம்ளர் கள் அதிகம் இருந்தன. அதை கைப்பற்றிய அதிகாரிகள், அக் கடை உரிமையாளருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

ஓட்டம்! வழக்கம்போல், அதிகாரிகள் வந்து மிரட்டுவர் என்று நினைத்து, தினசரி மார்க்கெட் வியாபாரிகள் தைரியமாக இருந் தனர். தேதி இல்லாத பொருட் களை பறிமுதல் செய்ததால், அவசர அவசரமாக கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் எடுத்தனர்.

Last Updated on Thursday, 06 May 2010 06:26
 


Page 274 of 519