Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கார்பைட் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் வாழை மண்டிகளில் அதிகாரி திடீர் சோதனை

Print PDF

தினமணி 05.05.2010

கார்பைட் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் வாழை மண்டிகளில் அதிகாரி திடீர் சோதனை

வேலூர், மே 4: வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வாழை மண்டிகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப் பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரியம்வதா தலைமையில், உணவு கட்டுப்பாடு அலுவலர் ஏ.கெüரிசுந்தர், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், லூர்துசாமி, ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை ஆபிசர்ஸ் லைன், இன்பேன்ட்ரி சாலை, தோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 வாழை மண்டிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

பொதுமக்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள 3 மண்டிகளில் கார்பைட் கற்கள் மூலம் வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக அந்த மண்டி உரிமையாளர்கள் மூவர் மீதும் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்நல அலுவலர் பிரியம்வதா தெரிவித்தார்.

பிற்பகல் மீன்மார்க்கெட் அருகில் உள்ள 4 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோதனை மேலும் தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை? சூப்பர் மார்க்கெட்டுகள் மீது நடவடிக்கை தேவை

Print PDF

தினமணி 05.05.2010

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை? சூப்பர் மார்க்கெட்டுகள் மீது நடவடிக்கை தேவை

சென்னை, மே. 4: காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட்டுகள் மீதும் சட்டம் பாய வேண்டும் என்று சட்டப் பேரவையில் பல்வேறு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன.

காலாவாதியான உணவுப் பொருள் விற்பனை குறித்து, பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதம்:

பி.கே.சேகர் பாபு (அதிமுக): காலாவதியான உணவுப் பொருள்களை குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை-எளிய மக்கள் வாங்கி பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்த காலாவதியான பொருள்களின் விற்பனையில் பல முன்னணி வணிக நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காலாவதி மருந்து-மாத்திரைகள் மட்டுமல்லாமல் இப்போது காலாவதி உணவுப் பொருள்களும் புழக்கத்துக்கு வந்துள்ளன.

இந்தப் பொருள்களை சாப்பிடுவதால் குடல் புண், மயக்கம், வாந்தி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதாக பொதுமக்களும் மருத்துவரிகளும் தெரிவிக்கின்றனர். காலாவதியான மருந்து மற்றும் உணவுப் பொருள்களை விற்பனை செய்யும் சமூக விரோதக் கூட்டத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான சட்டத்தை கடுமையாக்க வேண்டும். குற்றவாளிகளை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): மாநகரங்களில் உணவு பரிசோதகர்களும், நகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்களும் உள்ளனர். அவர்கள் பகுதி நேர பணியாளர்களாக இருந்து மட்டுமே பணியை மேற்கொள்கின்றனர். அனைவரையும் முழு நேர பணியாளர்களாக நியமிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே, மாநிலத்தில் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த தனியாக ஆணையரை நியமிக்க வேண்டும்.

காலாவதியான உணவுப் பொருள்கள் பிடிபடும் போது அதன் மீது யார் நடவடிக்கை எடுப்பது என்பதில் குழப்பம் நிலவுகிறது. எனவே, மருந்து மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தனியாக ஒரு அதிகார அமைப்பை உருவாக்க வேண்டும். நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு கடைகளை சோதனை செய்யும் அதிகாரத்தை வழங்க வேண்டும். காலாவதியான உணவுப் பொருள்களை சூப்பர் மார்க்கெட்டுகள் தான் அதிகளவு விற்பனை செய்கின்றன. அவர்கள் மீதும் சட்டம் பாய வேண்டும்.

 

காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

Print PDF
தினமணி 05.05.2010

காலாவதியான உணவுப் பொருள்களை விற்றால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு எச்சரிக்கை

சென்னை, மே.4: காலாவதியான உணவுப் பொருள்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் எ..வேலு எச்சரித்துள்ளார்.

காலாவதியான உணவுப் பொருள் விற்பனை குறித்து, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது சேகர்பாபு (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), மகேந்திரன் (மார்க்சிஸ்ட்), சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன்திருமலைக் குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர். இதற்கு, அமைச்சர் எ..வேலு அளித்த பதில்:

"சென்னை நகரில் வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் காலாவதியான உணவுப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதையடுத்து உணவுப் பொருள் வழங்கல் துறை இணை ஆணையாளர், குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி சுகாதாரத் துறை அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கடந்த 30-ம் தேதி சம்பந்தப்பட்ட கிடங்கை ஆய்வு செய்தனர். கிடங்கை வாடகைக்கு எடுத்துள்ள துரைப்பாண்டி என்பவர் ஆய்வு நடத்தப்பட்ட போது வரவில்லை. கிடங்கின் பூட்டு உடைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. காலாவதியான அரிசி, துவரம்பருப்பு, மிளகாய் ஆகிய உணவுப் பொருள்களும், டீத் தூள், புளி, சாக்லேட் மற்றும் சோப்பு பவுடர்கள், பிஸ்கெட், பேஸ்ட் போன்ற காலாவதியான பொருள்களும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது சோதனையின் போது கண்டறியப்பட்டது.

காலாவதியாகி உள்ள பொருள்களை துரைப்பாண்டி என்பவர் குறைந்த விலைக்கு வாங்கி அப்பகுதி மக்களிடம் சேதம் அடைந்த பொருள்கள் எனக் கூறி குறைவான விலையில் விற்பனை செய்துள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. பொது மக்கள் நலனுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் காலாவதியான பொருள்களை விற்பனை செய்து வந்த துரைப்பாண்டி மீது ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, ஜெகன், சுடலை ஈஸ்வரன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பிரச்னையில் தொடர்புடைய துரைப்பாண்டியை போலீஸôர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் காலாவதியான உணவுப் பொருள்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

நேரடியாக கண்டுபிடிக்க சாத்தியம் இல்லை: காலாவதியான உணவுப் பொருள்களை அரசே நேரடியாக கண்டுபிடிக்கும் சாத்தியம் இல்லை. கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் பொருள்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை.

மாணவர்களிடம் நுகர்வோர் நலன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் நுகர்வோர் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சட்டத்தைப் பொறுத்தவரை அது காவல் துறையின் கீழ் வருகிறது. ஆனாலும் எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் துறை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து வழக்கைப் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கை சுகாதாரத் துறை நடத்தும்.

காலாவதியான உணவுப் பொருள்களை விற்பவர்கள் மீதான சட்டம் இன்னும் கடுமையாக்கப்படும். நுகர்வோர் நலன் குறித்த விழிப்புணர்வை நுகர்வோர் சங்கங்களும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் எம்.எல்..க்களும் ஏற்படுத்த வேண்டும். அரசைப் பொறுத்தவரை அத்தகைய உணவுப் பொருள்களை விற்போர் மீது சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கும்' என்றார் எ..வேலு.

 


Page 276 of 519