Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாட்டிறைச்சி பறிமுதல் செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

Print PDF

தினமணி 04.05.2010

மாட்டிறைச்சி பறிமுதல் செய்ய எதிர்ப்பு: அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர், மே 3: திருப்பூரிலுள்ள மாட்டிறைச்சிக் கடைகளில் மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் இறைச்சிகளை பறிமுதல் செய்யச் சென்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இறைச்சி விற்பனையாளர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூரில் 1,500-க்கு மேற்பட்ட இறைச்சிக் கடைகள் செயல்படுகின்றன. இந்த இறைச்சிக் கடைகளில் சுகாதரமற்ற முறையில் ஆடுகள் வெட்டி விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து, மாநகராட்சி நிர்வாகம் அண்மையில் ஆடுவதைக் கூடம் ஒன்றைத் திறந்தது. ஆனால், அக்கூடத்தில் ஆடுகள் வெட்ட கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதாகத் தெரிவித்து ஆட்டு இறைச்சி விற்பனையாளர்கள் ஆடுவதைக் கூடத்தை புறக்கணித்து வந்தனர்.

இதையடுத்து, மாநகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கடந்த சில தினங்களாக திருப்பூரிலுள்ள இறைச்சிக்கடைகளில் சோதனை நடத்தி ஆடுவதைக் கூடத்தில் வெட்டப்படாத இறைச்சிகளை பறிமுதல் செய்தனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை 300 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.

அதன்தொடர்ச்சியாக, திங்கள்கிழமை காலை இறைச்சிக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் பெரியகடைவீதி, நொய்யல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்த மாநகராட்சி அதிகாரிகள், அங்கு இருந்த மாட்டு இறைச்சிகளை பறிமுதல் செய்து லாரியின் ஏற்றினர்.

இதனால், ஆவேசமடைந்த விற்பனையாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி வாகனங்களை முற்றுகையிட்டனர். ஆட்டு இறைச்சிகளை மட்டுமே ஆடுவதைக் கூடத்தில் வெட்ட முடியும். மாட்டிறைச்சிகளை அங்கு வெட்ட முடியாது. அவ்வாறு இருக்கும் நிலையில் மாட்டிறைச்சிகளை பறிமுதல் செய்வதில் நியாயம் இல்லை என்று விற்பனையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதனால், அங்கு ஏற்பட்ட பரபரப்பை அடுத்து விரைந்து வந்த போலீஸôர், இப்பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையரிடம் வலியுறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினர். இதையடுத்து, மாநகராட்சிஆணையர் ஆர்.ஜெயலட்சுமியை சந்தித்து இறைச்சி விற்பனையாளர்கள் முறையிட்டனர்.

அப்போது, சுகாதாரமான முறையில் மாட்டிறைச்சிகள் வெட்டி விற்பனை செய்ய வேண்டும் என்றும், சுகாதாரமில்லாமல் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சிஆணையர் தெரிவித்தார். அதன்பிறகு மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் கலைந்து சென்றனர்.

 

48,000 மினரல் வாட்டர் நிறுவனத்தி பாக்கெட்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 04.05.2010

48,000 மினரல் வாட்டர் நிறுவனத்தி பாக்கெட்கள் பறிமுதல்

கோவை, மே 3: மினரல் வாட்டர் நிறுவனத்தில் விதிகளுக்கு மாறாக தயாரிக்கப்பட்ட 48 ஆயிரம் தண்ணீர் பாக்கெட்களை கோவை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.

÷ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள நேதாஜி நகரில் இயங்கும் மினரல் வாட்டர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை மாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

÷ஐ.எஸ்.ஐ. விதிகளுக்கு மாறாக தயாரிக்கப்பட்டிருந்த 48 ஆயிரம் வாட்டர் பாக்கெட்களை அதிகாரிகள் அங்கு பறிமுதல் செய்தனர். அவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், ஆய்வறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நகர்நல உதவி அலுவலர் அருணா தெரிவித்தார்.

÷அதேபோல பல்வேறு கடைகளில் ஆய்வு செய்தபோது அங்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான சிப்ஸ், காரக்கடலை, பச்சை பட்டாணி, முறுக்கு உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

உணவுக் கலப்பட தடைச் சட்ட விதி மீறல்: 3 பேர் மீது வழக்கு

Print PDF

தினமணி 04.05.2010

உணவுக் கலப்பட தடைச் சட்ட விதி மீறல்: 3 பேர் மீது வழக்கு

திருநெல்வேலி, மே 3: திருநெல்வேலியில் உணவுக் கலப்பட தடைச் சட்ட விதிமுறைகளை மீறி வாழைக்காய் சிப்ஸ் தயாரித்து விற்பனை செய்ததாக 3 பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதியப்பட்டது.

திருநெல்வேலி சந்திப்பு பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர் அ.ரா. சங்கரலிங்கம் மற்றும் அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இச் சோதனையில் ஓர் இனிப்புக் கடையில் இருந்த வாழைக்காய் சிப்ஸில் தயாரிப்பு தேதி, வரிசை எண் உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்படாமல் உணவுக் கலப்பட தடைச்சட்ட விதிமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிப்ஸ் தயாரிப்பாளர் அருண்குமார், அதை விற்பனை செய்த கடையின் உரிமையாளர் சரஸ்வதி, விற்பனையாளர் பாக்கியராஜ் ஆகியோர் மீது வழக்குத் தொடர தமிழக உணவுக் கலப்பட தடைச்சட்ட இணை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இப் பரிந்துரைக்கு உணவுக் கலப்பட தடைச் சட்ட இயக்குநர் அனுமதி அளித்தார். அதன்பேரில், திருநெல்வேலி 4-வது நீதித் துறை நடுவர் மன்றத்தில் அருண்குமார், சரஸ்வதி, பாக்கியராஜ் ஆகியோர் மீது உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் வழக்குத் தொடர்ந்தார்.

 


Page 279 of 519