Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஒட்டன்சத்திரத்தில் மூன்று வார்டுகளில் கழிப்பிட வசதி

Print PDF

தினமலர் 04.05.2010

ஒட்டன்சத்திரத்தில் மூன்று வார்டுகளில் கழிப்பிட வசதி

ஒட்டன்சத்திரம் : காந்திநகர்,வினோபாநகர் ஆகிய இடங்களுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் மூலம் விரைவில் கழிப்பிட வசதி செய் யப்படும் என்று ஒட்டன் சத்திரம் பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரம் பேரூராட்சிக்குட்பட்ட காந்திநகர், விநோபாநகர் (வார்டுகள் 5,6,7) ஆகிய இடங்களில் கழிப்பிட வசதி செய்து தர வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. செயல் அலுவலர் ஜெயக்கொடி பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து பேரூராட்சி தலைவர் உமாமகேஸ்வரி கூறுகையில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விரைவில் அந்த வார்டுகளில் கழிப் பிட வசதி செய்து தரப்படும், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Last Updated on Tuesday, 04 May 2010 07:53
 

தரமற்ற தேயிலைத் தூள் பரிசோதனை 828 இடங்களில் நடந்தது ஆய்வு! வாரிய செயல் இயக்குனர் பெருமிதம்

Print PDF

தினமலர் 04.05.2010

தரமற்ற தேயிலைத் தூள் பரிசோதனை 828 இடங்களில் நடந்தது ஆய்வு! வாரிய செயல் இயக்குனர் பெருமிதம்

குன்னூர்: ''கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும், மாநிலம் முழுவதும் 828 இடங்களில் கலப்பட, தரமற்ற தேயிலைத் தூள் விற்பனை குறித்த ஆய்வு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது,'' என, குன்னூர் தேயிலை வாரிய அதிகாரி கூறினார். நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது தேயிலை. கடந்த பல ஆண்டுகளுக்கு முன் கலப்பட தேயிலைத் தூள் வெளிச்சத்துக்கு வந்ததால், விலை வீழ்ச்சி ஏற்பட்டது. தேயிலை வாரியத்தின் அதிரடி நடவடிக்கையால், கலப்பட தேயிலைத் தூள் பிரச்னை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; இருப்பினும், மாவட்டம் மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல பகுதிகளிலும் கலப்பட தேயிலைத் தூள் விற்பனை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் 828 இடங்களில் ஆய்வு, சோதனை நடத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னூர் தேயிலை வாரிய செயல் இயக்குனர் நசீம் கூறியதாவது: நீலகிரியில் தேயிலைத் தொழிலை மேம்படுத்த, தேயிலை தர மேம்பாட்டு திட்டம் கடந்த பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. பசுந்தேயிலை பறிப்பது முதல் தேயிலை தூள் தயாரித்து, அவற்றை விற்பனை செய்வது வரை, தரத்தை பேணி காப்பது அவசியமாக உள்ளது. தரத்தை முதன்மைப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு கட்டமாக, கலப்பட, தரமற்ற தேயிலைத் தூள் விற்பனையை கட்டுப்படுத்த, தேயிலை வாரியம் முனைப்பு காட்டியது. கடந்த 5 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 828 இடங்களில் அதிரடி ரெய்டு, பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தேநீர் கடை, தேயிலை தூள் மொத்த விற்பனையாளர், குடோன், தொழிற்சாலை என பல மட்டத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.

தரமற்ற 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ தேயிலைத் தூள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. உணவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் 73 தொழிற்சாலைகள், கலப்பட தேயிலைத் தூள் தயாரிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; 50 தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் இருந்து தரமற்ற பசுந்தேயிலையை வாங்கி, உற்பத்திக்கு வழங்கிய ஏஜன்ட்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தூளில் கலப்படம் செய்வதற்காக, அரிசி உமி, தேயிலைக் கழிவு உட்பட பொருட்களை ஏற்றி வந்த லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல முறை எச்சரித்தும், கலப்பட தூள் தயாரிப்பை நிறுத்தாத இரு தொழிற்சாலைகள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது; 18 தொழிற்சாலைகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சாயம் சேர்க்கப்பட்ட தூள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில், 19 மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. தேநீர் கடைகள், தேயிலைத் தூள் மொத்த வியாபாரிகள், மொத்தமாக வாங்கி பாக்கெட் செய்பவர்கள், தேயிலைத் தூள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இருந்த தூள் பரிசோதிக்கப்பட்டன. சாயம் கலந்த தூளை விற்ற பல வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, நசீம் கூறினார்.

'நீலகிரியில் பரவாயில்லை' தேயிலை வாரிய செயல் இயக்குனர் நசீம் கூறுகையில், ''சுற்றுலா ஸ்தலங்களில், தேயிலைத் தூளில் சாயம் கலந்து விற்கும் வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற புகாரை தொடர்ந்து, கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊட்டி, குன்னூரில் உள்ள தேநீர் கடைகள், தேயிலைத் தூள் விற்பனை செய்யும் கடைகள், குடோன்களில் சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டது. 20 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 3 இடங்களில் மட்டுமே சாயம் கலந்த தேயிலைத் தூள் விற்பது தெரிய வந்துள்ளது; பறிமுதல் செய்யப்பட்ட தேயிலைத் தூள், ஆய்வுக் கூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; முடிவு வந்த பின் தான், அந்த கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:37
 

இறைச்சி பறிமுதல் நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து கமிஷனரிடம் விற்பனையாளர்கள் முறையீடு

Print PDF

தினமலர் 04.05.2010

இறைச்சி பறிமுதல் நடவடிக்கையில் மாநகராட்சி சுகாதாரத்துறை எதிர்ப்பு தெரிவித்து கமிஷனரிடம் விற்பனையாளர்கள் முறையீடு

திருப்பூர்: சுகாதாரமற்ற முறையில் ஆடு, மாடுகளை வதைத்து இறைச்சி விற்பனை செய்வதாகக்கூறி, மாநகராட்சி சுகாதாரப்பிரிவு அதி காரிகள் 'ரெய்டு' நடத்தி, பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள் ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாட்டிறைச்சி விற்பனையாளர் கள், மாநகராட்சி லாரியை நேற்று சிறைப்பிடித்தனர். இதுகுறித்து கமிஷனரிடமும் முறையிட்டுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதியில் இயங்கும் ஆட்டிறைச்சி விற்பனையாளர் களுக்காக, மாநகராட்சி தரப்பில் ஆடுவதைக்கூடம் அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், 'ஆடு வதைக்கான கட்டணம் 50 ரூபா யாக உள்ளது. இதர மாநகராட்சி களில் அதிகபட்சம் 10 ரூபாய்; திருப்பூரில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணம் பல மடங்கு அதிகம்' எனக்கூறி, ஆட்டிறைச்சி விற்பனை யாளர்கள் ஆடுவதைக்கூடத்தை பயன்படுத்துவதை தவிர்த்தனர்.மாநகராட்சி நிர்வாகம், இதன் எதிர்நடவடிக்கையாக, சுகாதார மற்ற முறையில் இயங்கும் ஆட் டிறைச்சி விற்பனை கடைகளில் திடீர் ரெய்டு நடத்தி, இறைச்சி களை பறிமுதல் செய்து அழித்து வருகிறது. நேற்று காலை நொய்யல் வீதி பகுதியில் மாட்டிறைச்சி விற்பனை கடை களில் திடீர் 'ரெய்டு' நடத்திய சுகாதாரப்பிரிவினர் ஓரிரு கடை களில் இறைச்சியை பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி, பயன் படுத்த முடியாதபடி செய்தனர். 'மாடுவதைக் கூடம் இல்லாத நிலையில், எங்கு கொண்டு சென்று மாடுகளை அறுப்பது; மாநகராட்சி நிர்வாகம் முன்னறி விப்பு, நோட்டீஸ் இல்லாமல் 'ரெய்டு' நடத்தி இறைச்சியை பறி முதல் செய்வது கண்டிக்கத்தக்கது' எனக்கூறி, மாட்டிறைச்சி விற்பனை யாளர்கள், பறிமுதல் செய்யப் பட்ட இறைச்சியை அள்ளிச் சென்ற லாரியை சிறைப்பிடித்தனர். இதனால், நொய்யல் வீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் மற்றும் போலீசார், இறைச்சி விற்பனையாளர்களிடம் பேச்சு நடத்தினர்.

அதேசமயம் பறிமுதல் செய்த இறைச்சியை திரும்ப ஒப்படைக்க வில்லை. கமிஷனரிடம் புகார் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டதால், லாரி விடுவிக்கப்பட்டது. 41வது வார்டு கவுன்சிலர் ஷாஜகான் தலைமை யில் கமிஷனர் ஜெயலட்சுமியிடம் மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் முறையிட்டனர். மாநகராட்சி தரப்பில், 'ஆட்டிறைச்சி விற்பனையாளர்கள் கட்டண விபரம் குறித்து, குத்தகை தாரரிடம் பேச்சு மூலம் தீர்வு காண்பது. மாட்டிறைச்சி விற்பனை யாளர்கள் சுகாதாரமான முறையில் மாடுகளை வதை செய்து, இறைச்சி விற்பனை செய்ய வேண்டும்' என, அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. கவுன்சிலர் ஷாஜகான் கூறியதாவது: மற்ற மாநகராட்சிப் பகுதிகளில் ஐந்து ரூபாய், ஏழு, 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக செலுத்து கின்றனர். இங்கு மட்டுமே 50 ரூபாய் கேட்கின்றனர். இதுகுறித்து மேயரிடம் முறையிட்ட போது, 'குத்தகைதாரருடன் பேசி நல்ல முடிவு எடுங்கள்' என தெரிவித் துள்ளார். ஆனால், மாநகராட்சி அதி காரிகள் 'ரெய்டு' நடத்தி மிரட்டி உள்ளனர். இன்று (3ம்தேதி) நடந்த 'ரெய்டு' தொடர்பாக கமிஷனர் ஜெயலட்சுமி, மேயர் செல்வராஜ் முன்னிலையில் பேச்சு நடத்தி னோம். குத்தகைதாரருடன் பேச்சு நடத்தி முடிவு காணச் சொல்லி உள்ளனர். இறைச்சி விற்பனை யாளர்கள் கூடிப்பேசி சுமூக முடிவு எடுப்பர், என்றார். கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்ட போது, ''மாநகராட்சி பகுதியில் வதை செய்யப்படும் மாடுகளின் எண்ணிக்கையைப் பொருத்தே, வதைக்கூடம் அமைக்க முடியும். தற்போதைக்கு மாடுவதைக்கூடம் அமைக்க முடியாது. சுகாதாரமான முறை யில் வதை செய்துதான் இறைச்சி விற்பனை செய்ய வேண்டும். இதில் சமரசத்துக்கு இடமில்லை. ''சுகாதாரமற்ற முறையில் வதை செய்து, இறைச்சி விற்பனை செய்யப்பட்டால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். ஆடு வதைக் கூடத்தை பொருத்தவரை, மாநகராட்சியால் நிர்ணயிக்கப் பட்ட கட்டணமே வசூலிக்கப் படுகிறது. இதில், மாறுதலுக்கு இடமில்லை,'' என்றார்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:09
 


Page 280 of 519