Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்

Print PDF

தினமணி 03.05.2010

காலாவதியான உணவுப் பொருள் பறிமுதல்

கோவை, மே 2: கோவையில் காலாவதியான உணவுப் பொருள்கள் மாநகராட்சி அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

÷சென்னையில் காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்த 2 நபர்களை போலீஸôர் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து, காலாவதியான உணவுப் பொருள்களை வைத்திருந்த குடோனுக்கு "சீல்' வைக்கப்பட்டது.

÷இந்நிலையில், கோவையில் உள்ள ஹோட்டல்களிலும், கடைகளிலும் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. எனவே, மாநகராட்சி நகர்நல உதவி அலுவலர் அருணா தலைமையிலான அதிகாரிகள் கிராஸ்கட் சாலையில் உள்ள பேக்கரி, ஹோட்டல், மளிகை கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

÷அதில், 3 கடைகளில் காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும், பெரும்பாலான உணவுப் பண்டங்களில் தயாரிக்கப்பட்ட தேதியும் குறிப்பிடப்படவில்லை. சில உணவுப் பொருள்களில் காலாவதியாகும் தேதி திருத்தப்பட்டிருந்தது. அந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

÷இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:

÷பறிமுதல் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் அனைத்தும் ஆய்வகப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். ஆய்வு முடிவில் உணவுப் பொருள்கள் காலாவதியானது கண்டறியப்பட்டால், அவற்றை விற்பனை செய்த கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

 

பரிசோதிக்கப்பட்ட குடிநீரா... சிறுநீரகம் பாதிக்கும் அபாயம்

Print PDF

தினமலர் 03.05.2010

பரிசோதிக்கப்பட்ட குடிநீரா... சிறுநீரகம் பாதிக்கும் அபாயம்

அரக்கோணம் : அரக்கோணம் நகராட்சியில் வழங்கப்படும் குடிநீரால், சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக வார்டு கவுன்சிலர்கள், நகராட்சியில் புகார் செய்துள்ளனர்.

அரக்கோணத்தில் வழங்கப்படும் குடிநீரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்னையில் பரிசோதனை செய்து, சான்று பெற்ற பிறகே குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இந்த சான்றுகளை பெறாமல், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருவதாக புகார்கள் வந்துள்ளன. ஆனால், நகராட்சி நிர்வாகம் கடந்த மூன்று வருடமாக இதற்கான சான்றுகள் பெறாமல் குடிநீர் வழங்கி வருவதால், பொதுமக்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக வார்டு கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அரக்கோணம் நகராட்சித் தலைவராக விஜயராணி கன்னையன் இருந்து வருகிறார். இவர் தி.மு..,வை சேர்ந்தவர். நகராட்சிகளில் உள்ள வார்டுகளில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குடிநீர் சுத்தமானதாக வழங்கப்படுவதாக நகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.., வார்டு கவுன்சிலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நகராட்சியால் வழங்கப்படும் குடிநீரை ஆறு மாதத்திற்கு சென்னையில் பரிசோதனை செய்து, தரச்சான்று பெற வேண்டும்.

ஆனால், நகராட்சியில் குடிநீர் பரிசோதனை செய்யாமல் வினியோகம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் துரை சீனிவாசன், நகராட்சியில் புகார் செய்துள்ளார். நகராட்சி நிர்வாகம் சுத்தமான குடிநீர் வழங்கி வருவதாக பதிலளிக்கிறது. நகராட்சி நிர்வாகம் தரச்சான்று பெற்று உள்ளதோ, இல்லையோ, குடிநீரால் பொது மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

ஆலத்தம்பாடி கடைகளில் அயோடின் உப்பு சோதனை

Print PDF

தினமலர் 03.05.2010

ஆலத்தம்பாடி கடைகளில் அயோடின் உப்பு சோதனை

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலத்தம்பாடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் அயோடின் உப்பு சோதனை நடத்தப்பட்டது. கட்டிமேடு, அபிஷேக கட்டளை, பள்ளங்கோவில், நெடும்பலம், விளக்குடி, ஆலத்தம்பாடி, கச்சனம், திருத்தங்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மளிகைக்கடைகளில் உப்பில் அயோடின் கலந்துள்ளதா? என ஆலத்தம்பாடி வட்டார மருத்துவ அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. மருத்துவ அலுவலர்கள் புஷ்பா, தையல்நாயகி, தேவிகா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வராஜ், சுகாதார ஆய்வாளர்கள் மணிவண்ணன், பழனியப்பன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர

Last Updated on Monday, 03 May 2010 07:02
 


Page 281 of 519