Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கீழக்கரை பகுதிகளில் பவர் இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்படும்

Print PDF

தினமணி 29.04.2010

கீழக்கரை பகுதிகளில் பவர் இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றப்படும்

கீழக்கரை, ஏப். 28: கீழக்கரை பகுதிகளில் உள்ள குப்பைகள் பவர் இயந்திரம் மூலம் விரைவில் அகற்றப்படும் என்று நகராட்சி தலைவர் பஷீர் அஹமது தெரிவித்தார்.

குப்பைகளை அகற்றுவது தொடர்பாக நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு எஸ்.ஏ.ஹெச்.பஷீர் அஹமது தலைமை வகித்தார். ஆணையர் சுந்தரம், கீழக்கரை வர்த்தக சங்கத் தலைவர் சுல்தான் ஹமீது, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகராட்சித் தலைவர் கூறியது: நகராட்சியின் முக்கிய சாலைப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க வர்த்தகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். வர்த்தக நிறுவனங்கள், சிறு கடைகளில் சேரும் குப்பைகளை சேகரித்து நகராட்சியின் குப்பை ஏற்றும் வாகனங்கள் காலை 8 மணிக்கு வரும்போது அகற்ற வேண்டும்.

மாலையில் சேகரிக்கும் குப்பைகளை மாலையில் வரும் குப்பை வாகனங்களில் அகற்ற வேண்டும். இன்னும் ஒரு மாதத்தில் நகராட்சிப் பகுதிகளில் குப்பைகளை அகற்றுவதற்காக பவர் இயந்திரம் பொருத்திய (ஹைட்ராலிக்) வாகனம் வரவழைக்கப்படுகிறது.

இதன் மதிப்பு ரூ.18.5 லட்சம். இதன் மூலம் நகரின் பல பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 10 இடங்களில் குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு பவர் கிரெய்ன் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் குப்பைகள் நிறைந்த தொட்டிகள் தூக்கிச் செல்லப்பட்டு குப்பைகள் அப்புறப்படுத்தப்படும் என்றார்.

 

மளிகை கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 29.04.2010

மளிகை கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

தர்மபுரி: தர்மபுரியில் மளிகை கடைகளில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மளிகை கடைகளில் துவரம்பருப்பில் கலப்படம் இருப்பதாக சென்னை உணவு பொருள் வழங்கல் ஆணையகத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன. ஆர்.டி.., மணிவண்ணன் தலைமையில் மாவட்ட வழங்கல் அலுவலர் முருகேசன், சுகாதாரத்துறை இணை இயக்குனரகத்தை சேர்ந்த ராமநாதன், கணேசன், நகராட்சி கமிஷனர் அண்ணாதுரை, சுகாதார ஆய்வகளர்கள் முனிராஜ், மதனகோபால் உள்ளிட்ட அதிகாரிகள் தர்மபுரியில் உள்ள மளிகை கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.சோதனையின் போது துவரம்பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு நடந்தது. சில கடைகளில் மாதிரிக்கு துவரம் பருப்புகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதே போல் பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதியில் இந்த சோதனை நடந்தது. 'தரமான பருப்புகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்' என சோதனையின் போது வியாபாரிகளுக்கு வலியுறுத்தப்பட்டன.

* அரூர் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் அதிகாரிகள் உணவு பொருட்கள் தரம் குறித்து திடீர் சோதனை செய்தனர்.கலெக்டர் அமுதா உத்தரவுப்படி அரூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மளிகை கடைகளில் கேசரி பருப்பு விற்பனை செய்யப்படுகிறதா? என அதிரடி சோதனை நடந்தது. பருப்பு மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டது. இச்சோதனையில் ஆர்.டி.., மோயிசன், வட்ட வழங்கல் அலுவலர் மாறன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் லோக சுப்பிரமணியம், டவுன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Last Updated on Thursday, 29 April 2010 06:04
 

கள்ளழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி : மாநகராட்சி ஏற்பாடு

Print PDF

தினமணி 28.04.2010

கள்ளழகரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி : மாநகராட்சி ஏற்பாடு

மதுரை, ஏப். 27: அருள்மிகு கள்ளழகர் வைகையாற்றில் புதன்கிழமை எழுந்தருளும் நிகழ்ச்சியைக் காண வரும் பக்தர்களுக்கு குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடுகள் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவதற்கு இந்தாண்டு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனால் கள்ளழகர் இறங்கும் இடத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் 2 போர்வெல் போடப்பட்டு, அதிலிருந்து தண்ணீர் எடுத்து, 6 அடி அகலத்தில், 200 அடி நீளத்தில், 1.25 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட தொட்டியில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.

இத்தொட்டியில் புதன்கிழமை அதிகாலை பல வண்ண மலர்கள் தூவுவதற்காக மலர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நகரில் பக்தர்களின் குடிநீர்த் தேவைக்காக 100}க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதியும், அண்ணா நகர், புதூர், மதிச்சியம் உள்ளிட்ட 25}க்கும் மேற்பட்ட இடங்களில் சிண்டெக்ஸ் தொட்டி வைத்தும் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் நகரில் பக்தர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கழிப்பறை வசதிகளும், 5 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் வசதிகளையும் மாநகராட்சி நிர்வாகம் செய்துள்ளது. பக்தர்கள் வசதிக்காக 25}க்கும் மேற்பட்ட இடங்களில் குளியலறை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

கள்ளழகர் இறங்கும் வைகையாற்றுப் பகுதியில் இந்தாண்டு ஏராளமான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விழாவுக்குத் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

 


Page 284 of 519