Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மன நோயாளிகளுக்கு உதவி: மாநகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 28.04.2010

மன நோயாளிகளுக்கு உதவி: மாநகராட்சி திட்டம்

சென்னை: சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் மன நோயாளிகளை பாதுகாக்க, மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களிலும் சாலைகள், நடைபாதைகளில் எந்தவித ஆதரவும், பாதுகாப்பும் இல்லாத நிலையில் பல மனநோயாளிகள் படுத்து உறங்கியும், சுற்றித் திரிந்தும் வருகின்றனர். சென்னை மாநகராட்சி பொதுத் துறை சார்பில் இதுபோல் மன நலம் குன்றி சாலைகளில் திரிபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முடி திருத்தி, உடல் சுத்தம் செய்து, புத்தாடை மற்றும் சிறப்பு சிகிச்சை வழங்கப்படும்.பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் மன நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று மருத்துவமனையில் சேர்த்த பின், மன நல ஆற்றுப்படுத்துனர்கள் ஆலோசனை பெற்று மன நல மருத்துவ, காவல் துறை மற்றும் நீதித் துறை சான்று பெற்று, சம்பந்தப்பட்டவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்டவர் நல்வாழ்வு பெறும் வகையில் சிறப்பான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

இதுபோல் மன நலம் குன்றி, சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் பற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குகாநந் தத்துக்கு மொபைலில் 9445190744 என்ற எண் ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மன நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரிகளுக்கும் மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Last Updated on Wednesday, 28 April 2010 06:14
 

கலப்படமான கடலை மாவு விற்பனை ரூ.9 ஆயிரம் அபராதம் விதிப்பு : நெல்லை கோர்ட் தீர்ப்பு

Print PDF

தினமலர் 26.04.2010

கலப்படமான கடலை மாவு விற்பனை ரூ.9 ஆயிரம் அபராதம் விதிப்பு : நெல்லை கோர்ட் தீர்ப்பு

திருநெல்வேலி : நெல்லையில் கலப்படமான கடலை மாவு விற்பனை செய்தவர், தயாரிப்பாளருக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும், கோர்ட் கலையும் வரை தண்டனையும் விதிக்கப்பட்டது.நெல்லை மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் ஆலோசனையின் பேரில் உணவு ஆய்வாளர் காளிமுத்து, மேலப்பாளையம் ரெட்டியார்பட்டி ரோட்டிலுள்ள பலசரக்கு கடையை ஆய்வு செய்து, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கடலை மாவு பாக்கெட்டுகளை சந்தேகத்தின் பேரில் உணவு மாதிரியாக எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பிவைத்தார். இதில் அதில் கலப்படம் இருப்பதும், உணவு கலப்பட தடை விதிகளுக்கு முறணாக பாக்கெட் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து கலப்படமான கடலை மாவு விற்பனை செய்த கடையின் உரிமையாளர் நவமணி மீதும், அதை தயாரித்த மதுரை கம்பெனி மீதும் வழக்கு தொடர அனுமதி கேட்டு சென்னை உணவு கலப்பட தடைச் சட்ட இணை இயக்குனர் கண்ணனுக்கு பரிந்துரை செய்தார். பரிந்துரையின் படி கலப்படமான கடலை மாவு விற்பனையாளர், தயாரிப்பாளர் மீது வழக்கு தொடர நெல்லை ஜே.எம்.5 கோர்ட்டில் மாநகராட்சி வழக்கு தொடரப்பட்டது. வழக்கை நீதிபதி ஹேமா, விற்பனையாளர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு ரூ.9 ஆயிரம் அபராதமும், கோர்ட் கலையும் வரை தண்டனையும் வழங்கினார்.

 

Last Updated on Tuesday, 27 April 2010 07:10
 

விழிப்புணர்வு முகாம்

Print PDF

தினமலர் 26.04.2010

விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : மம்சாபுரத்தில் உணவு கலப்பட தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பேரூராட்சி தலைவர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட சுகாதார துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து கலப்பட உணவால் ஏற்படும் நோய்கள், தரமான உணவு பொருளை மக்களுக்கு வழங்க வேண்டியதின் அவசியத்தை பற்றியும் பேசினார். செயல் அலுவலர் சாம்ராஜ், உணவு பொருள் ஆய்வாளர் கருப்பையா, சுகாதார ஆய்வாளர் வேலு, வணிகர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கவுன்சிலர் அய்யனார் நன்றி கூறினார்.

Last Updated on Tuesday, 27 April 2010 06:16
 


Page 285 of 519