Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு: உணவு பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 22.04.2010

சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு: உணவு பொருட்கள் பறிமுதல்

திண்டிவனம் : திண்டிவனத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காலாவதியான உணவுப் பொருட் களை நகராட்சி பொதுசுகாதாரக்குழுவினர் பறிமுதல் செய்து அழித்தனர்.விழுப்புரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக் டர் கிருஷ்ணராஜ், திண்டிவனம் நகராட்சி கமிஷனர் முருகேசன் ஆகியோர் உத்தரவின் பேரில் நகராட்சி பொதுசுகாதார குழுவினர் திண்டிவனம் பகுதியில் நேற்று ஆய்வு மேற் கொண்டனர். செஞ்சி சாலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிக்கு பின்புறம் ஜெயராமன் என்பவருக் குச் சொந்தமான குடோனில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது.அவர் தான் நடத்தி வந்த ரைஸ் மில்லை குடோனாக மாற்றி, அதில் பல்வேறு உணவுப் பொருட்களை இருப்பு வைத்து வந் துள்ளார். இதில் காலாவதியான 30 மூட்டை சிப்ஸ் வகைகள், 25 மூட்டை கோதுமை மாவு, குளிர் பானங்கள், டொமோட்டோ சாஸ், தக்காளி ஜாம் உட்பட 50 ஆயிரம் ரூபாய் மதிப் புள்ள உணவுப் பொருட் களை அதிகாரிகள் குழுவினர் கண்டறிந்தனர். அவற்றை நகராட்சியின் துப்புரவு அலுவலர் பாலசந்தர், துப்புரவு ஆய் வாளர்கள் ராஜரத்தினம், சரவணன், ஜோதிபாசு உள்ளிட்ட குழுவினர் பறிமுதல் செய்து, பொதுசுகாதாரச் சட்டம்112ன் படி பறிமுதல் செய்து அழித்தனர்.

Last Updated on Thursday, 22 April 2010 07:08
 

கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை: சட்டம் விரைவில் அமல்

Print PDF

தினமணி 21.04.2010

கலப்படம் செய்வோருக்கு ஆயுள் தண்டனை: சட்டம் விரைவில் அமல்

புது தில்லி, ஏப்.20: உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வோர் மீது ஆயுள் தண்டனை விதிக்கும் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆஸôத் தெரிவித்தார்.உணவுப் பொருளில் கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை அபராதத்துடன் ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அவர் அளித்த பதில்: உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் 2006-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் அமல்படுத்தப்படும். இந்த சட்டம் பன்முக தன்மைகளைக் கொண்டது. இதில் உணவு சார்ந்த பல சட்டங்கள் உள்ளன. இதில் உணவு பாதுகாப்பு, தரம், நாடு முழுவதும் ஒரே சீரான லைசென்ஸ் வழங்கும் நடைமுறை ஆகியன உள்ளன.இதில் 101-வது சட்டப் பிரிவின்கீழ் இதுவரை 43 இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள அனைத்து சட்டப் பிரிவுகளும் விரைவில் வெளியிடப்பட்டும்.

இந்த சட்டப் பிரிவு குறித்த விவரம் வெளியிடுவதில் ஏற்பட்ட கால தாமதத்திற்கு முக்கியக் காரணமே, இவற்றில் பல சுகாதாரத்துறையின் கீழ் வராததே ஆகும். பொது நலன் கருதி இதை வெளியிட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக இந்திய உணவு தரம் மற்றும் உணவு பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்துறையில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் பணி மாற்றம் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் இந்த சட்டம் அமலாகும்.

இப்புதிய சட்டத்தின்படி கலப்பட உணவுப் பொருள் உற்பத்தியாளர்கள் மீது கலப்படப் பொருளின் தன்மைக்கேற்ப ரூ. 1 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை அபராதம் விதிக்கலாம். மாவட்ட துணை ஆட்சியர் அந்தஸ்திலான அதிகாரி இந்த அபராதத்தை நிர்ணயிக்கலாம். இதற்குமுன்னர் அபராதத் தொகையை நீதிமன்றமே தீர்மானித்தது. தற்போது அதிகாரிகளே அபராதத்தை தீர்மானிக்கலாம். சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தலாம்.கலப்படம் செய்வோருக்கு குறைந்தது 6 மாதம் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்க புதிய சட்டம் வகை செய்துள்ளது.

கலப்படமற்ற சுகாதாரமான உணவுப் பொருள்கள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த சட்டம் அமல்படுத்தப்படுகிறது. அத்துடன் கலப்படமற்ற பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வு தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு இருக்க வேண்டும். இதற்காகவே கடுமையான சட்டம் கொண்டுவரப்படுகிறது. மேலும் இந்த சட்டத்தில் வழக்குகள் விரைவில் தீர்க்கப்படுவதற்கான அம்சங்களும் உள்ளன.இந்த சட்டத்தை அமல்படுத்துவதில் மாநில அரசுகள் முழு வேகம் காட்டும் என நம்புவதாகக் குறிப்பிட்ட ஆஸôத், இதன் மூலம் உணவுக் கலப்படத்தை பெருமளவு கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறினார்.தற்போது 7.21 சதவீத அளவுக்கு கலப்பட பொருள்கள் விற்பனையாவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last Updated on Wednesday, 21 April 2010 09:33
 

31 மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு

Print PDF

தினமணி 21.04.2010

31 மாவட்டங்களில் யோகா மகப்பேறு பிரிவு

சென்னை, ஏப். 20: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு மருத்துவப்பிரிவு தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார்.பேரவையில் தனது துறையின் மானியக் கோரிக்கை விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதில் அளித்தபோது இது தொடர்பாக அவர் கூறியதாவது:

""சுகப் பிரசவத்துக்கு யோகா மருத்துவ முறை சிறந்ததாக விளங்குகிறது. தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தில் ரூ.59.19 லட்சம் செலவில் 31 மாவட்டங்களில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் மகப்பேறு பிரிவு தொடங்கப்படும்.

சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு சித்த மருந்துப் பெட்டகம்: சிக்குன்குன்யா காய்ச்சல் நிவாரணத்துக்கு சித்த மருந்துகளைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. சிக்குன்குன்யா காய்ச்சலுக்கான நான்கு சிறந்த சித்த மருந்துகளைக் கொண்ட மருந்துப் பெட்டகத்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.இந்தப் பெட்டகங்கள் டாம்ப்கால் விற்பனை மையங்களிலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளிலும் மருத்துவர் ஆலோசனைப்படி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

13 மூலிகைகள் கொண்ட இருமல் மருந்து: பொது மக்களின் தேவைக்கேற்ப இருமல், சளி மற்றும் பொதுவான நோய்களுக்கு டாம்ப்கால் நிறுவனம் மருந்து தயாரித்து வருகிறது. இந்த மருந்துகள் பொது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன.இதையடுத்து 13 மூலிகைகள் கொண்ட புதிய இருமல் மருந்தை டாம்ப்கால் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த மருந்து 100 மில்லி லிட்டர் அளவுள்ள கையடக்க புட்டிகளில் விநியோகிக்கப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு மொத்தமாக விற்பனை செய்யப்படும்.
திருச்சி, சேலம், கோவையில் ஹோமியோபதி பிரிவு: ஹோமியோபதி மருந்துகள் பக்க விளைவுகள் அற்றதும், மலிவான விலையில் கிடைக்கக் கூடியதும் ஆகும். ஹோமியோபதி மருத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மருத்துவமனைகள், வட்டம் மற்றும் வட்டம் சாரா மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார மையங்களில் இப்போது 38 ஹோமியோபதி மருத்துவப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் திருச்சி, சேலம், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.28.05 லட்சம் செலவில் ஹோமியோபதி மருத்துவப் பிரிவு தொடங்கப்படும்.

இந்திய மருந்து ஆய்வுக்கு தனி மையம்: இப்போது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் டாம்ப்கால் நிறுவனம், பல வகையான சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி மருந்துகளை சாஸ்திர முறைப்படியும் புதிய கலப்பு முறைப்படியும் தயாரித்து வருகிறது.தற்கால தேவைக்கு ஏற்ப, புதிய கலப்பு மருந்துகளை நல்ல தரத்தில் தயாரிக்கும் நோக்கத்தில் டாம்ப்கால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு என ஒரு தனி மையம் நடப்பாண்டில் உருவாக்கப்படும்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில்... இப்போது டாம்ப்கால் நிறுவன விற்பனைப் பிரிவு சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு
வருகிறது. இந்த நிறுவனம் கடந்த 25 ஆண்டுகளாக 65 வகையான மருந்துகளைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்த நிறுவனத்தின் மருந்துகளுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளதால், வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒரு விற்பனைப் பிரிவு தொடங்கப்படும்'' என்றார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.

Last Updated on Wednesday, 21 April 2010 09:30
 


Page 289 of 519