Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு காய்ச்சலை தடுக்க குளோரின் மாத்திரை கலந்து குடிநீர் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தீர்மானம்

Print PDF

தமிழ் முரசு       31.10.2013

டெங்கு காய்ச்சலை தடுக்க குளோரின் மாத்திரை கலந்து குடிநீர் நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் தீர்மானம்

புழல்:நாரவாரிகுப்பம் பேரூராட்சி மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் விப்ரநாராயணன், நிர்வாக செயல் அலுவலர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் 6வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.காந்தி தெருவில் சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படும்.   அப்துல் வகாப் தெருவில் கால்வாயில் நீர் நிரம்பி வெளியேறுவதால் கால்வாயை உயரமாக கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் குடிநீரில் குளோரின் மாத்திரை கலந்து குடிநீர் வினியோகிக்கப்படும்.  சக்திகான் மேஸ்திரி, காசி விஸ்வநாதன் தெரு, நடேசன் தெரு, பெரியார் தெரு ஆகிய தெருக்களை புதுப் பிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

 

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருள் வழங்கல்

Print PDF

தினமணி         31.10.2013

துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பொருள் வழங்கல்

ரூ.1.77 லட்சம் மதிப்பிலான துப்புரவுப் பணி பாதுகாப்பு பொருள்கள் சிவகங்கை நகராட்சி பணியாளர்களுக்கு புதன்கிழமை வழங்கப்பட்டது.

  சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணியினை மேற்கொண்டு வரும் பணியாளர்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தலா ரூ.2,400 மதிப்பிலான சீருடை, பிரதிபலிபான் ஜாக்கெட், தலைகவசம், காலணி (கம்பூட்), முககவசம், கையுறை உள்ளிட்ட 7 பொருள்களை நகராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 74 துப்புரவு பணியாளர்களிடம் நகர்மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் கே.வி.சேகர், நகராட்சி ஆணையர் (பொ) எஸ்.வரதராஜன், மேலாளர் ஆர்.ராஜராஜேஸ்வரி, துப்புரவு அலுவலர் பி.ராஜமோகன், துப்புரவு ஆய்வாளர் பி.பாண்டிசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

டெங்குவை ஒழிக்க துரித நடவடிக்கை மேயர் தகவல்

Print PDF

தினகரன்           29.10.2013

டெங்குவை ஒழிக்க துரித நடவடிக்கை மேயர் தகவல்

திருச்சி, : திருச்சி மாநகரில் எங்கேனும் டெங்கு காய்ச்சல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் போர்க்கால அடிப்படையில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயர் ஜெயா கூறினார்.

திருச்சி மாநகராட்சியில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 15மனுக்கள் பெறப்பட்டன. திருச்சி மாநகராட்சியில் நலத்திட்டங்களை நிறைவேற்றும் வகையில், வாரம் தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்து வருகிறது. இதில் பொதுக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. மேயர் ஜெயா தலைமை வகித்து, பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பொது மக்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை மேம்பாடு செய்யவும், பழுதடைந்த தெருவிளக்குகளை சரி செய்யவும், கழிவறைகள் மற்றும் பூங்காக்கள் பராமரிக்க கோரியும் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 47வது வார்டு பகுதி பீமநகர் கூனி பஜார் பகுதியில் உள்ளது புனித செபஸ்தியார் கோயில். 120 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயிலில் தற்போது புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதை அப்பகுதியில் குடியிருக்கும் சிலர் தடுத்து வருகின்றனர். எனவே கோயில் திருப்பணி சிறப்பாக நடைபெற மாநகராட்சி ஒத்துழைப்பு தர வேண்டும் எனக்கூறி கவுன்சிலர் துர்காதேவி தலைமையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் மேயரிடம் புகார் மனு அளித்தனர். பின்னர் மேயர் ஜெயா பேசுகையில், மாநகர பகுதியில் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தெரிய வந்தால் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்ட உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கொசு ஒழிப்பு நடவடிக்கையில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றார். மாநகராட்சி ஆணையர் தண்டபாணி, துணை மேயர் மரியம் ஆசிக், நகர் நல அலுவலர் மாரியப்பன், செயற் பொறியாளர்கள் அருணாச்சலம், நாகேஸ், உதவி ஆணையர்கள் பாஸ்கர், பிரபுகுமார் ஜோசப், ரங்கராஜன், தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


Page 30 of 519