Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லையில் சுகாதார சீர்கேட்டைத் தடுக்க பன்றிகளைப் பிடிக்கத் திட்டம்: வளர்ப்போர் பட்டியல் தயாராகிறது

Print PDF

தினமணி 19.04.2010

நெல்லையில் சுகாதார சீர்கேட்டைத் தடுக்க பன்றிகளைப் பிடிக்கத் திட்டம்: வளர்ப்போர் பட்டியல் தயாராகிறது

திருநெல்வேலி,ஏப்.18: திருநெல்வேலி மாநகர்ப் பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி திட்டமிட்டு வருகிறது.

பன்றி வளர்ப்போர் பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கும் மாநகராட்சி ஆலோசனை செய்து வருகிறது.

இம் மாநகர் பகுதியில் மிகுந்த சுகாதார சீர்கேடு நிலவுவதாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, அவ்வப்போது மூளைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சிக்குன்குனியா, டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை போன்ற தொற்று நோய்கள் பரவுகின்றன.

கடந்த மழைகாலத்தின்போது பரவிய சிக்குன்குனியா காய்ச்சலின் தாக்கம், மாநகரின் பல பகுதிகளில் இன்னும் இருந்து கொண்டு இருக்கிறது. சுகாதார சீர்கேடு அதிகமாக ஏற்படுவதற்கு போதிய துப்புரவுப் பணியாளர்கள் இல்லாமல் இருப்பதுதான் முக்கிய காரணம் என மாநகராட்சி சார்பில் அப்போது கூறப்பட்டது. இதன் காரணமாக துப்புரவுப் பணி, ஒரு சில பகுதிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாநகரில் பெரும் சுகாரதார சீர்கேட்டை ஏற்படுத்தும் பன்றிகளைப் பிடிக்க மாநகராட்சி திட்டமிட்டது. முதல்கட்டமாக மாநகரில் சுமார் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம் பன்றிகள் வரை இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன் இப் பன்றிகளை பிடிப்பதற்கு, மதுரையில் இருந்து சுமார் 20 பேரை மாநகராட்சி அழைத்து வந்தது. இவர்கள் பாளையங்கோட்டை இந்திராநகர், பெரியார் நகர், வண்ணார்பேட்டை பேராச்சியம்மன் கோயில் பகுதி, சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதிகளில் பன்றிகளைப் பிடித்தனர். மொத்தம் 120 பன்றிகள் பிடிக்கப்பட்டு, மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதில், பன்றி பிடித்தவர்களுக்கு மாநகராட்சி ஊதியம் வழங்காமல், பிடிக்கப்படும் பன்றிகளை அவர்களே எடுத்துச் செல்லலாம் என்று அறிவித்து இருந்தது. மேலும் பன்றி பிடிக்கும்போது கடந்த ஆண்டு ஏற்பட்டதுபோல மோதல் ஏற்படாமல் இருப்பதற்கு, மாநகர போலீஸôர் பாதுகாப்புடனே பன்றிகள் பிடிக்கப்பட்டன.

பிடிக்கப்பட்ட பன்றிகளும் மதுரை வரை போலீஸ் பாதுகாப்புடனே கொண்டு செல்லப்பட்டன. மாநகரில் பாளையங்கோட்டையில் பன்றி பிடிக்கும்போதே, அந்தத் தகவல் பிற பகுதியில் பன்றி வளர்ப்போருக்கு தெரிந்ததால், அவர்கள் பன்றிகளை வெளியே விடாமல் அடைத்து வைத்துக் கொண்டனராம். இதனால் பன்றிகளை அதிக அளவில் பிடிக்க முடியாமல் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மாநகராட்சி, இன்னும் சில நாள்களில் மீண்டும் பன்றிகளைப் பிடிப்பதற்கு திட்டமிட்டு வருகிறது. இதற்காக முன்பு போல இல்லாமல், முழுமையான திட்டமிடலோடு செயல்படுவதற்கு சுகாதாரத்துறை பல விவரங்களை சேகரித்து வருகிறது. இதில் பேட்டை, சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதிகளில் அதிகமாக பன்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் இந்த தீவிர நடவடிக்கை, பன்றி வளர்ப்போரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சிலர் தங்களது பன்றிகளை வேறு ஊர்களுக்கு அனுப்பி வருகின்றனராம்.

அடுத்தக் கட்ட நடவடிக்கையாக, பன்றி வளர்ப்போர் பட்டியலை தயார் செய்து வருகிறது. இந்த பட்டியலின் அடிப்படையில், அவர்கள் மீது குற்றவியல் வழக்குத் தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர்.இந் நடவடிக்கைகள் மூலம் மாநகரத்தில் பன்றிகளை முழுமையாக ஒழித்துவிடலாம் என மாநகராட்சி கணித்துள்ளது. இதன் காரணமாக தொற்று நோய்கள் பரவுவது ஓரளவு கட்டுப்படுத்தப்படும் என சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 19 April 2010 10:47
 

அதிரையில் கலப்பட பொருட்கள் அழிப்பு

Print PDF

தினமலர் 19.04.2010

அதிரையில் கலப்பட பொருட்கள் அழிப்பு

பட்டுக்கோட்டை: அதிராம்பட்டினம் பேரூ ராட்சி பகுதியில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப் பட்டு நடவடிக்கை எடுக் கப்பட்டது.அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதியில் டீத்தூள், மளிகைப் பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற் றில் கலப்படம் செய்யப் பட்டு விற்பதாக தகவல் கிடைத்தது.இதை ஒட்டி சுகாதார ஆய்வாளர்கள் பாம்பன், காசிநாதன், சந்திரசேகரன், கண்ணன், துப்புரவு பணியாளர் ஸ்ரீதரன் ஆகியோர் பேரூராட்சியில் உள்ள அனைத்து கடைகளிலும் சோதனையிட்டனர். அப்போது சந்தேகப் படும் படியாக உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் கைப் பற்றி அழித்தனர்.

சுகாதாரக் கேடான உணவு விடுதி, குளிர்பானக் கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அழுகிய பழங்கள் மற்றும் ஐ.எஸ். . முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகள் அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் வைத்து அழிக்கப் பட்டது. கலப்பட உணவுப் பொருள், ஈ மொய்க்கும் பண்டங்கள், திறந்த வெளியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்கள், தயாரிப்பு தேதி இல்லாத உணவுப் பொருட்கள், கடை லைசென்ஸ் இல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறை அறிவுறுத்தி உள்ளது.

Last Updated on Monday, 19 April 2010 06:24
 

தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள், கேன்கள் பறிமுதல்

Print PDF

தினமலர் 19.04.2010

தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள், கேன்கள் பறிமுதல்

சென்னை : சென்னையில் விற்கப்படும் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் மாநகராட்சி சுகாதாரத்துறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டு வருகின்றன.இது குறித்த மாநகராட்சி செய்திக் குறிப்பு: மயிலாப்பூரில் ஆர்.கே.மடம் சாலை, செயின்ட் மேரீஸ் சாலை, லஸ் கார்னர், ஆர்..புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட 10 ஆயிரம் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகள் நேற்று பறிமுதல் செய்யப் பட்டு, அழிக்கப்பட்டன. மேலும், மயிலாப்பூரில் ஒரு லாரியில் 273 கேன்களில் தரமற்ற குடிநீர் அடைக்கப்பட்டிருந்ததை மாநகராட்சி சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து, அழித்தனர். இந்த குடிநீர் கேன்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட நாள் மற்றும் 'பேட்ச்' எண்கள் இல்லாததும் கண்டறியப்பட்டது. பொதுமக்கள் தரமற்ற குடிநீர் பாக்கெட்டுகளை வாங்கி பருக வேண்டாம் என கேட்டுக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு மாநகராட்சி செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 292 of 519