Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெல்லையில் சுகாதாரமற்ற கேக், ரொட்டி தயாரிப்பு 21ம் தேதி நேரில் ஆஜராக மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினமலர் 15.04.2010

நெல்லையில் சுகாதாரமற்ற கேக், ரொட்டி தயாரிப்பு 21ம் தேதி நேரில் ஆஜராக மாநகராட்சி உத்தரவு

திருநெல்வேலி:நெல்லையில் சுகாதாரமற்ற முறையில் கேக், ரொட்டி தயாரித்தது தொடர்பாக வரும் 21ம் தேதி விசாரணை நடக்கிறது.நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் நடுத்தெருவில் அனுமதியின்றி நடந்து வரும் கேக், ரொட்டி தயார் செய்யும் இடம் ஆய்வு செய்யப்பட்டு பல்வேறு குறைபாடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் கண்டறியப்பட்டது.பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ள இக்கட்டடத்தின் தரை தளம் மோசமாக பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் காணப்படுகிறது. உணவு பொருள் தயாரிக்கும் இடத்தில் வெப்பக் காற்று புகை வெளியேற போதுமான வசதி செய்யப்படவில்லை. அண்டி தோடு எரிபொருளாக பயன்படுத்தும் நிலையில் புகை வெளியேறும் குழாயின் உயரம் போதுமானதாக இல்லாத நிலையில் இப்பகுதி மக்களுக்கு சுவாச கோளாறுகள், சுகாதார கேடு ஏற்படுவதாகவும் மாநகராட்சி குழுவினர் கண்டறிந்தனர்.

இந்த குறைபாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 21ம் தேதி நேரில் விசாரணையில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி சட்ட விதிகளின்படி உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார

Last Updated on Thursday, 15 April 2010 08:57
 

தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்:நகராட்சி அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 15.04.2010

தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்:நகராட்சி அதிகாரிகள் அதிரடி

கூடலூர் :கூடலூர் நகரிலுள்ள கடையில், நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதியான தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.கூடலூர் நகரமன்றக் கூட்டத்தில், கவுன்சிலர்களுக்கு வழங்கப்பட்ட பாட்டில் தண்ணீர் காலாவதியானது தெரியவந்த நிலையில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. செயல் அலுவலர் ரஜினி உத்தரவின் படி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் கக்கமல்லன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், பாட்டில் தண்ணீர் வினியோகித்த, கோழிக்கோடு சாலையில் உள்ள கடையில் ஆய்வு நடத்தினர்.விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீரை பாட்டில்களை பறிமுதல் செய்து 500 ரூபாய் அபராதம் விதித்தனர். 'விற்பனை செய்யப்படும் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறித்த விபரங்களை ஆய்வு செய்து விற்பனை செய்ய வேண்டும்; காலாவதியான பொருட்களை ஸ்டாக் வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் எச்சரித்தனர். கூடலூர் பகுதிகளில் உள்ள கடைகளில் இதுபோன்ற தண்ணீர் பாட்டில்கள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால், ஆய்வை விரிவுபடுத்தி, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Thursday, 15 April 2010 07:51
 

சென்னையில் காலரா இல்லை : மேயர் தகவல்

Print PDF

தினமலர் 15.04.2010

சென்னையில் காலரா இல்லை : மேயர் தகவல்

தண்டையார்பேட்டை : 'சென்னையில் காலரா பரவவில்லை' என்று மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.தண்டையார்பேட்டை, ..சி., நகர் மற்றும் மண்டலம்- 2ல் உள்ள ஆசீர்வாதபுரம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு உள்ளதா என ஆய்வு செய்து, தற்காப்பிற்காக குளோரின் மாத்திரைகள் மற்றும் உப்பு, சர்க்கரை கரைசல் பாக்கெட்டுக் களை மேயர் சுப்ரமணியன் நேற்று வழங்கினார்.அதன்பின், மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:சாலை ஓரங்களில் விற்கப்படும் சுகாதாரமற்ற உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் பாக் கெட்டுக்களால், வயிற்றுபோக்கு ஏற்பட வாய்ப் புள்ளது.சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள, 165 மருத்துவமனைகள் மூலம் பொதுமக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குளோரின் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.புறநகர் பகுதிகளான திருவொற்றியூர், மாதவரம், புழல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நோயாளிகளும், தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில், 175 பேர் வயிற்று போக்கினால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.மழைக்காலத்திலும், கடும்வெயில் காலத்திலும் தொற்று நோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவது வழக்கமான ஒன்று. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. சென்னை நகரில் காலரா இல்லை.இவ்வாறு மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மண்டல குழு தலைவர் டன்லப் ரவி, மன்ற உறுப்பினர்கள் சாமி, லதா, சுகாதார அலுவலர் குகானந்தம், தொற்றுநோய் மருத்துவமனை இயக்குனர் லட்சுமிதேவி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Thursday, 15 April 2010 07:35
 


Page 295 of 519