Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தரமற்ற உணவுகளை தயாரித்த கடைகள் அகற்றம்!: கோயம்பேடு நடைப்பாதை கடைகள் மீது அதிரடி

Print PDF

தினமலர் 13.04.2010

தரமற்ற உணவுகளை தயாரித்த கடைகள் அகற்றம்!: கோயம்பேடு நடைப்பாதை கடைகள் மீது அதிரடி

கோயம்பேடு: கோயம்பேடு மார்க் கெட்டைச் சுற்றி, தரமற்ற உணவு மற்றும் குளிர் பானம் விற்கும் நடைபாதை கடைகளை, நேற்று மாநகராட்சி சுகாதாரத் துறையினர் அதிரடியாக அகற்றினர்.கோயம்பேடு மார்க் கெட்டிற்கு பூ, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட் களை மொத்தமாக வாங்குவதற்காக, நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் வந்துச் செல்கின்றனர்.இவர்களை குறி வைத்து, மார்க்கெட்டைச் சுற்றியுள்ள சாலையோரங் களில், 100க்கும் மேற்பட்ட நடைபாதைகள் இயங்குகின்றன.குறிப்பாக இவர்கள் கொடுக்கும் தரமற்ற உணவுகளை, மார்க்கெட் டிற்கு வந்து செல்பவர்கள் சாப்பிட்டு வருகின்றனர்.தற்போது கோடைக் காலம் தொடங்கி விட்டதால், தரமற்ற பழச்சாறு கடைகள் நடைபாதை முழுவதும் அதிகமாக முளைத்து விட்டன.இதனை தடுக்கும் விதமாக, தரமற்ற உணவுகளை வழங்கும் கடைகளை அகற்ற மாநகராட்சி சுகாதாரத்துறையின் நடவடிக்கையில் இறங்கினர்.

நேற்று மதியம் 12 மணிக்கு துவங்கி, இரண்டு மணி நேரம் நடந்த நடவடிக்கையில் மார்க் கெட்டைச் சுற்றி இயங்கிய தரமற்ற உணவு மற்றும் பழச்சாறு விற்கும் 18 கடைகளை அப்புறப்படுத் தினர்.அவர்களிடமிருந்து தரமற்ற நிலையில் இருந்த பிரியாணி, பழச்சாறு, பழங்கள் உள்ளிட்டவை பெறப்பட்டது. இக்கடைகளை நடத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட தள்ளுவண்டிகள், பாத்திரங்கள், பொருட்கள் உள்ளிட்டவைகளை லாரிகள் மூலம் கொண்டு சென்றனர்.மாநகராட்சி துப்புரவு அலுவலர் மற்றும் உணவு ஆய்வாளர் சதாசிவம், உணவு ஆய்வாளர் மணிமாறன், சுகாதார ஆய் வாளர் முருகன் ஆகியோர் தலைமையிலான குழு வினர், கடைகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

Last Updated on Tuesday, 13 April 2010 06:13
 

காலாவதியான உப்பு பாக்கெட் விற்க அதிகாரிகள் தடை:தினமலர் செய்தி எதிரொலி

Print PDF

தினமலர் 12.04.2010

காலாவதியான உப்பு பாக்கெட் விற்க அதிகாரிகள் தடை:தினமலர் செய்தி எதிரொலி

ஸ்ரீவைகுண்டம்: தென்திருப்பேரையில் காலாவதியான உப்பு பாக்கெட்டுகள் தினமலர் செய்தி எதிரொலியால் திருப்பி அனுப்பபட்டது.தென்திருப்பேரை அமுதம் ரேஷன் கடையில் 2008 ஆம் ஆண்டு 11வது மாதம் உள்ள உப்பு பாக்கெட்டுகள் நிர்ணயிக்கபட்ட 12 மாதங்களைவிட 5 மாதங்கள் கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. இது குறித்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது, இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் மாவட்ட நுகர்பொருள் வாணிபகழக அதிகாரிகள், திருச்செந்தூர் தாலுகா வழங்கள் அதிகாரிகள் எடுத்த நேரடி நடவடிக்கையின் பேரில் உப்பு பாக்கெட்டுகள் திருப்பி குடோனுக்கு அனுப்பபட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாரி மோதி முதியவர் பலிகுளத்தூர், ஏப்.12- குளத்தூரில் ரோட்டை கடக்க முயன்ற முதியவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது;குளத்தூர் அண்ணாநகரைச் சேர்ந்தவர் வேதமுத்து (75). சம்பவத்தன்று இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக மணல் ஏற்றிக் கொண்டு வந்த லாரி வேதமுத்து மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்ததும் குளத்தூர் இன்ஸ்பெக்டர் குமரன் விரைந்து சென்று வேதமுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். ரோட்டை கடக்க முயன்ற முதியவர் இறந்த சம்பவத்தால் நேற்று அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Monday, 12 April 2010 06:51
 

சுகாதாரம் பாதுகாப்பு கமிஷனருக்கு மனு

Print PDF

தினமலர் 12.04.2010

சுகாதாரம் பாதுகாப்பு கமிஷனருக்கு மனு

ஊட்டி : ஊட்டி மெயின் பஜார் பகுதியில், சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.ஊட்டி இந்து முன்னணி அமைப்பாளர் ஹரிகுமார், நகராட்சி கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனு: ஊட்டி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா, தற்போது நடந்து வருகிறது. தேர் ஊர்வலம், லோயர் பஜார், மின்வாரிய அலுவலகம், மெயின் பஜார், ஐந்துலாந்தர், கமர்சியல் சாலை வழியாக மீண்டும் கோவிலை அடையும். தேர்பவனி வரும் வீதிகளில், குப்பை மற்றும் சாலையோரம் இறைச்சிக் கழிவு கொட்டப்படுகிறது. மெயின்பஜார் சாலையோரம் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, இங்கு குப்பைத் தொட்டிகள் வைப்பதுடன், சுகாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, ஹரிகுமார் கூறியுள்ளார்.

Last Updated on Monday, 12 April 2010 06:18
 


Page 297 of 519