Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

வேதிப் பொருள் கலந்த சீன மிட்டாய்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 08.04.2010

வேதிப் பொருள் கலந்த சீன மிட்டாய்கள் பறிமுதல்

வேதாரண்யம்
, ஏப். 7: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வேதிப் பொருள் கலக்கப்பட்ட சீன மிட்டாய்கள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சீனாவில் தயாரிக்கப்படும் இந்த மிட்டாய்கள் வேதாரண்யம் பகுதியில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக பொது சுகாதாரத் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, இப் பகுதியில் உள்ள 46 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சீனத் தயாரிப்பிலான மிட்டாய்கள் சிக்கின.

இந்த மிட்டாய்கள் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வித போதை போன்ற தடை செய்யப்பட்ட வேதிப் பொருள் சேர்க்கப்படுவதால் அது மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அஞ்சப்படுகிறது. எனவே, இந்த மிட்டாய் விற்பனை செய்வது தெரிய வந்தால், வணிகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது உணவு ஆய்வாளர்கள் க.கோதண்டபாணி, நா.பிச்சமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மீனாட்சி சுந்தரம், பிச்சமுத்து , அழகிரிபாலன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:59
 

உலக சுகாதார தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி 08.04.2010

உலக சுகாதார தினம்: கோவையில் விழிப்புணர்வு பேரணி

கோவை, ஏப். 7: உலக சுகாதார தினத்தை ஒட்டி, கோவை மாநகராட்சியில் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது (படம்).

÷வடக்கு மண்டல அலுவலகத்தில் இருந்து துவங்கிய இப்பேரணியை மேயர் ஆர்.வெங்கடாசலம் கொடியசைத்து துவக்கிவைத்தார். துணை மேயர் நா.கார்த்திக், சுகாதாரக்குழுத் தலைவர் நாச்சிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷..சி.பூங்கா வரை பேரணி நடைபெற்றது. பேரணியில் பங்கேற்ற செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.

÷துணை ஆணையர் வே.சாந்தா, கவுன்சிலர்கள் மெகர்நிசா, சாந்தகுமாரி, விஜயலட்சுமி, ஹேமலதா, நகர்நல உதவி அலுவலர் ஆர்.சுமதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 08 April 2010 09:29
 

அயோடின் கலக்காத உப்பு பறிமுதல்

Print PDF

தினமணி 08.04.2010

அயோடின் கலக்காத உப்பு பறிமுதல்

வேதாரண்யம்
, ஏப். 7: நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அயோடின் கலக்காத போலி உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேதாரண்யத்தில் அயோடின் உப்பு உற்பத்தி நடைபெறும் பகுதியில் நாகை மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ப.வைரமணி தலைமயில் சுகாதாரத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பறிமுதல் செய்யப்பட்ட உப்பு வேதாரண்யம் நகராட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள் முன் பரிசோதனை செய்யப்பட்டபோது அவற்றில் அயோடின் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நகர்மன்றத் தலைவர் மா.மீனாட்சிசுந்தரம், நகராட்சி செயல் அலுவலர் மு. வெங்கடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில் இவை அழிக்கப்பட்டன.

இதுகுறித்து துணை இயக்குநர் வைரமணி கூறியது: முதல் கட்டமாக எச்சரிக்கை செய்யப்படுகிறது. இனிமேலும் இது தொடர்ந்தால் காவல் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அயோடின் உள்ளதா என்பதை பரிசோதித்து கடைகாரர்கள் விற்பனைக்கு வாங்க வேண்டும். தவறினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

 

Last Updated on Thursday, 08 April 2010 09:20
 


Page 300 of 519