Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

Print PDF

தினமணி 08.04.2010

காலாவதியான குளிர்பானம் பறிமுதல்

விருத்தாசலம், ஏப். 7: விருத்தாசலத்தில் காலாவதியான குளிர்பானங்களை நகராட்சி சுகாதார அலுவலர்கள் புதன்கிழமை மாலை பறிமுதல் செய்தனர்.

÷விருத்தாசலம் பஸ் நிலையம், ஜங்ஷன் சாலை ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருக்கிறதா என்பது குறித்து நகராட்சி துப்புரவு அலுவலர் பரமசிவம் தலைமையில், ஆய்வாளர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சிவப்பிரகாசம், மேற்பார்வையாளர்கள் முத்தமிழன், ஆறுமுகம், செல்வம் மற்றும் சுப்பிரமணியன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

÷அப்போது பல்வேறு கடைகளில் காலாவதியான குளிர்பானங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன.

Last Updated on Thursday, 08 April 2010 09:15
 

அயோடின் கலக்காத உப்பு பாக்கெட் கடைகளில் கண்டுபிடித்து அழிப்பு

Print PDF

தினமலர் 08.04.2010

அயோடின் கலக்காத உப்பு பாக்கெட் கடைகளில் கண்டுபிடித்து அழிப்பு

வேதாரண்யம்: அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்களை சுகாதாரத்துறையினர் கைப்பற்றி அழித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பில் குறிப்பிட்ட சதவீதம் அயோடின் கலந்து விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான உப்பு உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் பொருட்படுத்துவதில்லை. அயோடின் கலந்த உப்பு என பெயரிடப்பட்ட பாலித்தீன் பைகளில் அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்கின்றனர். இந்த உப்பை பயன்படுத்தும் பொதுமக்கள் தைராய்டு சுரப்பியில் பாதிப்பு ஏற்பட்டு பல நோய் தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தமிழகத்தில் முன்னணி உப்பு உற்பத்தி பகுதியான தூத்துக்குடியில் இருந்து தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு வரும் உப்பு பாக்கெட்களில் போலி லேபிள் ஒட்டப்பட்டுள்ளது. வேதாரண்யம் பகுதியில் விற்பனைக்கு வந்த அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்களை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்து, அதை அழித்து வருகின்றனர்.

இதுபற்றி, நாகை மாவட்ட சுகாதார துணை இயக்குனர் வைரமணி கூறுகையில், ''நாகை கலெக்டர் (பொறுப்பு) அண்ணாதுரை உத்தரவுப்படி வேதாரண்யம் பகுதியில் அயோடின் உப்பு தயாரிப்பு நடக்கும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தவறான லேபிள்கள் ஒட்டப்பட்டு அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது. அயோடின் கலக்கப்படாத உப்பு பாக்கெட்களை போலீஸார் துணையுடன் பறிமுதல் செய்யப்படும். இந்த அயோடின் கலக்காத உப்புகளை ஏற்றிச் செல்லும் லாரிகளும் பறிமுதல் செய்யப்படும். அயோடின் கலந்த உப்புகளை ஆய்வு செய்வதற்காக கடை விற்பனையாளர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி ஆய்வு செய்து, வியாபாரிகள் அயோடின் கலந்த உப்பை மட்டும் வாங்கி விற்பனை செய்ய வேண்டும். அப்போதுதான், அயோடின் கலக்காத உப்பை விற்பனை செய்வதை தடை செய்ய முடியும்,'' என்றார்.

வேதாரண்யம் பகுதியில் கைப்பற்றிய உப்பு பாக்கெட்களை நகராட்சி தலைவர் மீனாட்சிசுந்தரம் தலைமையில் அழித்தனர். உணவு கலப்பட தடைச்சட்டப்படி ஒவ்வொரு கடையிலும் தொடர்ந்து உணவு மாதிரி எடுக்கப்பட்டு தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகிறது. இப்பணியில் நகராட்சி செயல் அலுவலர் வெங்கடேஸ்வரன், உணவு ஆய்வாளர் கோதண்டபாணி, துப்புரவு ஆய்வாளர் பிச்சைமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், அழகிரிபாலன், மற்றொரு பிச்சைமுத்து ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

Last Updated on Thursday, 08 April 2010 06:49
 

பாப்பான்கால்வாயில் கழிவுநீர் விடுவதை தவிர்க்க வேண்டும்: நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

Print PDF

தினமலர் 08.04.2010

பாப்பான்கால்வாயில் கழிவுநீர் விடுவதை தவிர்க்க வேண்டும்: நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தல்

கடையநல்லூர்: கடையநல்லூர் பாப்பான் கால்வாயில் கழிப்பறை கழிவுகளை கால்வாயில் விடுவதை தவிர்க்க வேண்டுமென நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையர் அப்துல் லத்தீப் கூறியிருப்பதாவது:- கடையநல்லூர் கருப்பாநதி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் செல்லும் பாப்பான் கால்வாய் நகராட்சி பகுதியில் மையமாக அமைந்துள்ளது. சுமார் 3 கி.மீ நீளத்தில் அமைந்துள்ள இக்கால்வாய் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகளவில் வேகமாக பரவிய மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் ஆய்வு குழுக்கள் நகர் பகுதியை ஆய்வு செய்தது.இதனையடுத்து ஆய்வு குழுக்கள் பாப்பான்கால்வாய் பகுதியினை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் இருந்து கழிப்பறை கழிவுகள் நேரடியாக கால்வாயில் விடுவதை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தின. அதனடிப்படையில் கால்வாய் பகுதியினை ஒட்டி அமைந்துள்ள வீடுகளில் ஆய்வு செய்ததில் கழிப்பறை கழிவுநீர் செப்டிக் டேங்கில் சேகரிக்காமல் நேரடியாக பாப்பான்கால்வாயில் விடுவது தெரியவந்ததை அடுத்து சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உடனடியாக செப்டிக் டேங்க் அமைக்கவும், கழிவுநீரை பாப்பான்கால்வாயில் விடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. செப்டிக் டேங்க் அமைக்காத வீட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே பொதுமக்கள் 15 தினங்களுக்குள் தங்கள் வீட்டிலுள்ள கழிப்பறை கழிவுகள் செப்டிக் டேங்கில் விடுவதற்கு தேவையான நடவடிக்கையை காலதாமதமின்றி அமைத்திட வேண்டும். நகரின் பொது சுகாதாரத்தில் பொதுமக்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் கடமையை உணர்ந்து எதிர்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்த வீடுகளில் அமைந்துள்ள கழிப்பறை கழிவுகள் செப்டிக் டேங்குகள் அமைத்து அதில் விடுமாறு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் கழிவறையின் கழிவுநீர் குழாய்கள் அப்புறப்படுத்தப்படுவதுடன் கழிவறைகளை நகராட்சி நிர்வாகத்தில் இடித்து அப்புறப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார

Last Updated on Thursday, 08 April 2010 06:31
 


Page 301 of 519