Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

நெடுஞ்சாலை ஓட்டல்களுக்கு சிக்கல் : தரமற்ற உணவு விற்றால் 'சீல்'

Print PDF

தினமலர் 06.04.2010

நெடுஞ்சாலை ஓட்டல்களுக்கு சிக்கல் : தரமற்ற உணவு விற்றால் 'சீல்'

சிவகங்கை : பழைய, காலாவதியான உணவு பண்டங்களை விற்கும், நெடுஞ்சாலை ஓட்டல்களை (மோட்டல்) 'சீல்' வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் காலாவதி, போலி மருந்துகளை விற்ற ஒரு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் மருந்து கடைகள், மொத்த விற்பனை மையங்களில் திடீர் ஆய்வு நடந்து வருகிறது.

புகார்: மருந்து கடைகளில் சோதனை நடப்பது ஒருபுறம் இருக்க, ஓட்டல், உணவு பண்டம் விற்கும் கடைகள் மீது சுகாதார துறையின் பார்வை திரும்பியுள்ளது. நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல், டீ கடைகளில் சுகாதாரமற்ற உணவு பண்டம் விற்பதாக புகார்கள் சென்றுள்ளன. இதனால், இக்கடைகளில் உணவு கலப்பட தடுப்பு பிரிவு ஆய்வாளர்கள் சோதனை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

'சீல்': நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டல்களில் சோதனை நடத்தி, சுகாதாரமற்ற முறையில் உணவு பண்டங்களை விற்றால், 'சீல்' வைக்கவும்; கடை உரிமையாளர்கள் மீது குற்ற வழக்கு தொடரவும் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 06 April 2010 06:19
 

குடிநீர் பாக்கெட்டுகள் மெரீனாவில் பறிமுதல்

Print PDF

தினமலர் 06.04.2010

குடிநீர் பாக்கெட்டுகள் மெரீனாவில் பறிமுதல்

சென்னை : மெரீனா கடற்கரையில் விற்க தடை செய்யப்பட்ட குடிநீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.மெரீனா கடற்கரையில் மாசு ஏற்படுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பிளாஸ்டிக் பொருள்களை உபயோகிப்பதற்கும், விற்பதற்கும் தடை செய்தது. இதனால் மெரீனாவில் குடிநீர் பாக்கெட்டுகள் விற்பது தடைசெய்யப்பட்டது. திருவல்லிக்கேணி மாநகராட்சி அதிகாரிகள் மெரீனாவில் குடிநீர் பாக்கெட் விற்பனை நடப்பது குறித்து அடிக்கடி சோதனை செய்து வந்தனர். இந்நிலையில், மீண்டும் மெரீனாவில் குடிநீர் பாக்கெட்டுகள் மறைத்து வைத்து விற்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. அதைத் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் 40 க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை மெரீனாவில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 60 மூட்டை குடிநீர் பாக்கெட்டுகள் பதுக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். அதில் இருந்த ஆறாயிரம் பாக்கெட்டுகளை அழித்தனர்.

பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை கடைகளுக்கு வெளியில் போட்டதாக எட்டு கடைக்காரர்களிடம் தலா 100 ரூபாய் வீதம் 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. மெரீனா கடற்கரை சர்வீஸ் சாலையில், சுகாதாரமற்ற முறையில் விற்க வைக்கப்பட்டிருந்த 250 கிலோ எடையுள்ள இட்லி, பொங்கல், போன்ற சிற்றுண்டிகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. அதோடு நடைபாதையில் ஆக்கிரமிப்பு செய்து வைக்கப்பட்டிருந்த 20 கடைகளை மாநகராட்சியினர் அகற்றினர். இது போன்ற சோதனை இனி காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து நடக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Tuesday, 06 April 2010 06:04
 

பொது இடங்களில் புகை பிடிக்க தடை : விளம்பரப்படுத்த காஞ்சி நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 05.05.2010

பொது இடங்களில் புகை பிடிக்க தடை : விளம்பரப்படுத்த காஞ்சி நகராட்சி முடிவு

காஞ்சிபுரம் : பொது இடங்களில் புகை பிடிப்பதை தடை செய்யும் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி முடிவு செய்துள்ளது.மத்திய அரசு, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்துள்ளது. பொது அலுவலகங் கள், மருத்துவமனை கட்டடங்கள், நல நிறுவன கட்டடங்கள், கேளிக்கை இடங்கள், உணவு விடுதிகள், சிற்றுண்டி விடுதிகள், பொது அலுவலகம், நிதித்துறை கட்டடம், கல்வி கட்டடங்கள், நூலகங்கள், பொது கழிப்பிடங்கள், விளையாட்டு மைதானங்கள், ரயில் நிலையம், பஸ் நிலையம், தொழிற்கூடங்கள், கடைகள், சினிமா அரங்கம், ஆடலரங்கம், மதுக்கடைகள், விமான நிலையம், மக்கள் அமருமிடம் ஆகியவை பொது இடங்களாகும்.

பொது இடங்களில் புகை பிடிப்பவரிடம் 200 ரூபாய் வரை தண்டனை வரி வாங்கப்படும். கட் டட நிறுவன உரிமையாளரான மேல் அதிகாரிகள், கண்காணிப்பாளர் ஆகியோர், பொது இடங் களில் யாரும் புகைப்பதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். எங்கும் சிகரெட் சாம்பல் கொட்ட தட்டு, தீப்பெட்டி வைக்கக் கூடாது. விதிமுறைகளை பின்பற்றாதவர்களை தண்டிக்க வேண்டும்.

கல்வி நிலையங்களைச் சுற்றி 100 அடி தூரத்திற்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருட் கள் விற்பனை செய்யக்கூடாது. 18 வயதிற் குட்பட்டவர்களுக்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக்கூடாது.இவ்விவரங்களை நோட்டீசாக அச்சிட்டு வினியோகம் செய்வது, விளம்பர பேனர்கள் வைப்பது என நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரம் ரூபாய் ஒதுக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் போது பேசிய பா..., கவுன்சிலர் உமாபதி, 'புகை பிடிப்பதை தடுக்கவும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒரு லட்சம் ரூபாய் வரை நிதி ஒதுக்கலாம்' என்றார்.

Last Updated on Monday, 05 April 2010 06:34
 


Page 303 of 519