Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பாதாள சாக்கடை திட்ட அதிகாõ‘கள் விளக்கம்

Print PDF

தினமலர் 01.04.2010

பாதாள சாக்கடை திட்ட அதிகாõ‘கள் விளக்கம்

விழுப்புரம் : பாதாள சாக்கடைப் பணிகள் குறித்த புகார்களுக்கு திட்ட அதிகாரிகள் பதிலளித்தனர்.

நகர் மன்ற கூட்டம் முடிந்தவுடன், பாதாள சாக்கடைத் திட்டத்தில் பைப் உடைவது, சிலாப் கள் தரமற்றதாகவும், பைப் சிறிய அளவில் உள் ளது. சாக்கடைப் பள்ளங்களில் வாகனங்கள் சிக்கும் நிலை உள்ளது. வேலை நடப்பதை அதிகாரிகள் பார்ப்பதில்லை என நிருபர்கள் பலர் சேர்மன் ஜனகராஜிடம் கேள்வி எழுப்பினர். புகார்கள் எழுவது குறித்து, அருகிலிருந்த திட்ட அதிகாரிகளிடம் சேர்மன் ஜனகராஜ் விளக் கம் கேட்டார்.

உடனே நிருபர்களிடம் பாதாள சாக்கடைத் திட்ட அதிகாரிகள் அமல்ராஜ், கனகராஜ் கூறியதாவது: திட்டப் பணிகள் 10 இடங்களில் பரவலாக நடக்கிறது. சுழற்சி முறையில் பார்வையிட்டு தரமாக செய்து வருகிறோம். வண்டிமேடுபோன்ற பகுதிகள் தாழ்வாக இருந்ததால் அங்கு சாலை உயரத்திற்கு கழிவுநீர் தொட்டி அமைக்கப்பட் டது. சாலை உயர்த்தப் பட்டதால் தாழ்வாக தெரிகிறது. அவைகள் உயர்த்தி சரி செய்யப்படும். நகராட்சி அதிகாரிகள் பணிகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கலாம்.

தற்போதைய மக்கள் தொகை பயன்பாட்டிற் கேற்ற வகையில் பாதாள சாக் கடை பைப் லைன் (8 அங்குலம்) அமைக்கப்படுகிறது. 30 ஆண்டுகள் வரை இவை நிலைத்து நிற்கும். எல்லா இடங்களில் சாதாரண நிலையில் கழிவு நீர் தாமாகவே செல் லும் வகையில் பைப் லைன் அமைக்கப் பட்டுள் ளது. ஆறு இடங்களில் பம்ப் அவுஸ் அமைத்து வெளியேற்றப் படும். 86 கிலோ மீட்டர் தொலைவு பைப் லைனில், 69 கிலோ மீட்டர் முடிக்கப்பட் டுள் ளது. 69 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது.

நிர்ணயித்துள்ள காலத் திற்குள் (அக்டோபர் மாதம்) திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். பைப் லைன் அமைத்த உடனே வாகனங்கள் செல்வதால் சேதம் ஏற்படுகிறது. ஒரு வாரத்திற்கு பின்னரே வாகனங்களை இயக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். ஆஞ்சநேயர் கோவில் விழா வருவதால் அந்த சாலையில் இடையூறின்றி விரைவில் பணிகளை முடித்துவிட வேண்டும் என அதிகாரிகளிடம் சேர்மன் ஜனகராஜ் அறிவுறுத்தினார்.

Last Updated on Thursday, 01 April 2010 07:05
 

மருத்துவ காப்பீட்டு அட்டை பயனாளிகளுக்கு வழங்கல்

Print PDF

தினமலர் 01.04.2010

மருத்துவ காப்பீட்டு அட்டை பயனாளிகளுக்கு வழங்கல்

வாணியம்பாடி:வாணியம்பாடி நகராட்சி பகுதியில் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையை பயனாளிகளிடம் அதிகாரிகள் வழங்கினர்.வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்த பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அம்பூர்பேட்டை பகுதியில் உதவும் உள்ளங்கள் அலுவலக வளாகத்தில் மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நகராட்சி கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், அலுவலர் அஜிஸ், துப்புரவு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை வழங்கினர்.ஒவ்வொரு வார்டிலும் 2 நாட்கள் அடையாள அட்டைகள் தொடர்ந்து வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:59
 

ஆடு அறுக்கும் இடம் மாறினால் ஆட்டை இழக்க வேண்டியது வரும் : பினாயில் மூலம் செக் வைக்க அதிரடி

Print PDF

தினமலர் 01.04.2010

ஆடு அறுக்கும் இடம் மாறினால் ஆட்டை இழக்க வேண்டியது வரும் : பினாயில் மூலம் செக் வைக்க அதிரடி

தூத்துக்குடி : காதாரமற்ற முறையில் மாநகராட்சி ஆடறுக்கும் இடத்தை தவிர வேறு இடத்தில் ஆடுகள் அறுக்கப்பட்டால் அதன் மேல் பினாயில் ஊற்றி அழிக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சுகாதாரமான முறையில் பொதுமக்களுக்கு உணவு பண்டங்கள் விற்பனை செய்ய வேண்டும். ஈ மொய்க்கும் அள விற்கு உணவு பண்டங்கø ள திறந்து வைக்க கூடாது. கண்ணாடி தாள் போட்டு மூடி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவ்வப்போது சோதனைகளும் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இந் நிலையில் மாநகராட்சி பகுதியில் சில இடங்களில் அனுமதி இல்லாமல் ஆடுகள் வெட்டப்பட்டு இறைச்சிகள் மக்கள் தெரியும் வகையில் அப்படியே கொண்டு செல்லப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து இதில் நடவடிக்கை மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது குறித்து கமிஷனர் குபேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் அறுக்கப்படும் ஆடுகளை மாநகராட்சி ஆடு அறுக்கப்படும் இடத்தில் தான் அறுக்க வேண்டும். அறுப்பதற்கு முன்பு கால்நடை ஆஸ்பத்திரி டாக்டரிடம் தகுதி சான்று பெற வேண்டும். ஆடுகளை அறுக்கும் பணி முடிந்தவுடன் விற்பனைக்காக எடுத்து செல்லப்படும் ஆட்டு இறைச்சியின் இடது தொடையில் மாநகராட்சியின் முத்திரை இடப்பட வேண்டும். விற்பனைக்காக எடுத்துச் செல்லும் இறைச்சியை பாதுகாப்பா ன கன்டெய்னரில் பொதுமக்கள் பார்வை படாதவாறு எடுத்துச் செல்ல வேண்டும். ஆடுகள் அறுக்கும் இ டம் தவிர வேறு இடங்களில் மாநகராட்சி அனுமதியின்றி ஆடுகள் அறுக்கப்பட்டால் அவை பினாயில் ஊற்றி அழிக்கப்படும். சுகாதாரமற்ற, நோய்வாய்பட்ட ஆடுகளையோ, வயிற்றில் குட்டியுடன் உள்ள ஆடுகளையோ அறுக்க கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:44
 


Page 305 of 519