Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

அனைத்து வார்டுகளிலும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் : தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினமலர் 01.04.2010

அனைத்து வார்டுகளிலும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் : தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்

தஞ்சாவூர் : தஞ்சை நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது என்று தஞ்சை நகராட்சித் தலைவர் தேன்மொழி கூறினார்.தஞ்சை நகராட்சி சார்பில் கூட்டுறவு காலனியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நகராட்சி ஆணையர் நடராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் சண்ராமநாதன் தலைமை வகித்தார்.

நகராட்சித் தலைவர் தேன்மொழி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: ஏற்கனவே இருமுறை வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை நடத்தி உள்ளோம். இப்போது 36வது வார்டு முதல் 40வது வார்டு வரையில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.முகாமில் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, .சி.ஜி, ஸ்கேன், பொதுமருத்துவம், பல் சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது. இதைத்தவிர பெண்களுக்கான நோய்களுக்கு பரிசோதனைகளும் நடந்தன.முகாமில் பங்கேற்போருக்கு மேல் சிகிச்சை தேவை என்றால் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாம் படிப்படியாக நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.முகாமில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 5 வார்டுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.

Last Updated on Thursday, 01 April 2010 06:34
 

புதுகை நகராட்சியில் ஆடுவதை சாலை நவீன மயம்

Print PDF

தினமலர் 01.04.2010

புதுகை நகராட்சியில் ஆடுவதை சாலை நவீன மயம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அம்பாள்புரம் 4ம்வீதியில் ஆடுவதை சாலை நவீனமயமாக்கப்பட்டுள்ளது.நகராட்சி ஆணையர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுகை அம்பாள்புரம் 4ம்வீதியில் இயங்கி வந்த ஆடுவதை சாலை தற்போது நவீனமயமாக மாற்றப்பட்டு வரும் ஏப்ரல் 1ம்தேதி முதல் இயங்குகிறது. எனவே நகரிலுள்ள அனைத்து ஆட்டு இறைச்சி கடைகளின் உரிமையாளர்களும் ஆடுவதை சாலையில் மட்டுமே ஆடுகளை அறுத்து நகராட்சி முத்திரை இடப்பட்ட பின்னரே விற்பனை செய்ய வேண்டும். நகராட்சி முத்திரை இல்லாமல் விற்பனை செய்யப்படும் இறைச்சிகள் நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 01 April 2010 06:32
 

மரப்பேட்டை கழிவு நீர் ஓடையில் சுத்தம் செய்தது சுகாதாரப்பிரிவு

Print PDF

தினமலர் 31.03.2010

மரப்பேட்டை கழிவு நீர் ஓடையில் சுத்தம் செய்தது சுகாதாரப்பிரிவு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் கழிவு நீர் தேங்கியிருந்த மரப்பேட்டை ஓடையை சுகாதாரப்பிரிவினர் நேற்று சுத்தம் செய்தனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 36, 11 உள்ளிட்ட வார்டுகள் வழியாக ஓடை செல்கிறது. பொள்ளாச்சி நகராட்சி பகுதியிலுள்ள குடியிருப்புகளின் கழிவு நீர் முழுவதும் அந்த ஓடையில் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் ஓடையாகி ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு செல்கிறது.

இதனால், பொட்டுமேடு, மரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. ஓடையை சுத்தம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.நகராட்சி கமிஷனர் வரதராஜ் தலைமையில் நேற்று சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 30 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். பொட்டுமேடு பகுதியில் இருந்து மரப்பேட்டை பாலம் வரையிலும் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:மரப்பேட்டை கழிவு நீர் ஓடை பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. அந்த ஓடையில் கழிவு நீர் செல்வதாலும், டியிருப்புகள் சுற்றிலும் உள்ளதாலும் பொது சுகாதார திட்டத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.கழிவு நீர் ஓடையில் பொதுமக்கள் குப்பைகளை கொட்டுவதால் அடிக்கடி தேக்கமடைந்து விடுகிறது. இதனால், கழிவு நீர் வெளியேற வழியின்றி சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.

வீட்டு குப்பைகளை கழிவு நீர் ஓடையில் கொட்ட வேண்டாம் என்று மக்களுக்கு பலமுறை எச்சரிக்கை செய்தும், யாரும் கடைபிடிப்பதில்லை. மரப்பேட்டை பாலம் அருகில் மரக்கடைக்காரர்கள் ஓடு, மரங்களை அடுக்கி வைத்திருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டுள்ளது. தற்போது, ஓடையின் ஓரு பகுதி சுத்தம் செய்து கழிவு நீர் வடிந்து செல்ல வசதி செய்யப் பட்டுள்ளது. அதேபோன்று நகரப்பகுதி முழுவதும் பிரதான சாக்கடை ஓடை சுத்தம் செய்யப் படும். இவ்வாறு, சுகாதாரப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:39
 


Page 306 of 519