Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

'வருமுன் காப்போம்' முகாமில் ஆயிரத்து 426 பேருக்கு சிகிச்சை

Print PDF

தினமலர் 31.03.2010

'வருமுன் காப்போம்' முகாமில் ஆயிரத்து 426 பேருக்கு சிகிச்சை

வந்தவாசி: வந்தவாசி நகராட்சி மற்றும் செய்யாறு சுகாதார மாவட்ட நோய்தடுப்பு மரு ந்து துறை சார்பில், வந்தவாசி ஒன்றிய மேற்கு பாடசாலையில் 'வருமுன் காப்போம்' திட்டம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, நகராட்சி தலைவர் சீனுவாசன் தலை மை வகித்தார். துணைத்தலைவர் வாசுகி, கவுன்சிலர்கள் உசேன், அன்சாரி, ஜலால், நவாப்ஜான், பழனியம்மாள், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தார். நகராட்சி பொறியாளர் சந்திரசேகர் வரவேற்றார்.முகாமில், வந்தவாசி எம்.எல்.., கமலக்கண்ணன் குத்துவிளக்கேற்றி, முகாமை தொடங்கி வைத்து பேசினார். மேலும், தாசில்தார் முருகேசன், தி.மு.., நகர செயலாளர் லியாகத்பாஷா உள்ளிட்ட பலரும் பேசினர்.வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன் தலைமையில் ஆயிரத்து 426 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 30 பேர்கள் உயர் சிகிச்சை பெறுவதற்காக பரிந்துரைக்கப்பட்டது.நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

Last Updated on Wednesday, 31 March 2010 06:12
 

இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமலர் 30.03.2010

இறைச்சி கடைகளுக்கு மாநகராட்சி எச்சரிக்கை

திருப்பூர் : 'அரசு அறிவிப்பை மீறி செயல்பட்டால், இறைச்சி கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.நேற்று முன்தினம் மகாவீர் ஜெயந்தி தினத்தை ஒட்டி, இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப் பட்டிருந்தது. இருப்பினும், மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதுகுறித்த செய்தி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் வெளியானது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் இறைச்சி கடைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நகர் நல அலுவலர் ஜவஹர்லால் அறிக்கை: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 28ம் தேதி மகாவீர் ஜெயந்தியை ஒட்டி, இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என 160 கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு நடத்தப்பட்டதில், கொங்கு மெயின்ரோடு, அவிநாசி ரோடு, பல்லடம் ரோடு, வெள்ளியங்காடு பகுதி களில் இறைச்சி விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.அக்கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டி ருந்த 40 கிலோ ஆட்டிறைச்சி, 60 கிலோ கோழி இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி உரக் கிடங்கில் புதைக்கப்பட்டது. இறைச்சி விற்பனை கடைகளுக்கு எச்சரிக்கை அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இனி, வரும் காலங்களில் அரசு அறி விப்பை மீறி செயல்பட்டால், உரிமம் ரத்து செய்யப் படும், என்ற இறுதி அறிவிப்பும் வழங்கப்பட்டது. இவ்வாறு, ஜவஹர்லால் தெரிவித்துள்ளார்.

Last Updated on Tuesday, 30 March 2010 10:35
 

உணவு கையாள்வோருக்கு மாநகராட்சி மூலம் பயிற்சி

Print PDF

தினமலர் 30.03.2010

உணவு கையாள்வோருக்கு மாநகராட்சி மூலம் பயிற்சி

மதுரை: மதுரை ஓட்டல்களில் உணவு பொருள்களை கையாள்வோருக்கு மாநகராட்சி சார்பில் சுகாதார பயிற்சி அளிக்கப்பட்டது. ஓட்டல்களில் உணவு பொருள்களை கையாள்வோர் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், உணவு பொருள் கலப்படம் பற்றி அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் ஏற்கனவே வடக்கு மண்டலத்தில் 50 பேருக்கு பல்வேறு ஓட்டல்களில் பணிபுரிவோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக ஓட்டல் மேலாளர்கள், சர்வர்கள், சமையல் நிபுணர்கள் என தெற்கு மண்டலத்தில் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்பு, தன் சுத்தம், பூச்சிகளிடம் இருந்து உணவு பொருட்களை காப்பது, கை கழுவுவதன் அவசியம், உடலில் காயம், நோய் இல்லாமல் பார்த்துக்கொள்வது ஆகியவற்றை பற்றி மாநகராட்சி நகர்நல அலுவலர் சுப்பிரமணியம், மருத்துவ கல்லூரி மைக்ரோ பயாலஜி பேராசிரியர் ஜான்சிராணி பயிற்சி அளித்தனர். தொடர்ந்து மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் இதுபோன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

Last Updated on Tuesday, 30 March 2010 09:31
 


Page 307 of 519