Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மணி அடித்துக் கொண்டுவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு

Print PDF

தினமணி 23.03.2010

மணி அடித்துக் கொண்டுவரும் துப்புரவுத் தொழிலாளர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பை சேகரிப்பு

குடியாத்தம், மார்ச் 22: குடியாத்தம் நகரில் துப்புரவுத் தொழிலாளர்கள் மணி அடித்துக் கொண்டு வீடு, வீடாகச் சென்று குப்பை அள்ளிச் செல்லும் ரிக்ஷா வண்டிகள் சோதனை ஓட்டமாக திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டன.

திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின்கீழ் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2.10 லட்சத்தில் 15 ரிக்ஷாக்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ரிக்ஷாவிலும் தலா 4 பிளாஸ்டிக் டப்பாக்கள் வைக்கப்பட்டுள்ளன. ரிக்ஷாவுடன் துப்புரவுத் தொழிலாளர்கள் தெருக்களில் மணி அடித்துக்கொண்டு செல்வார்கள்.

பொதுமக்கள் தங்களின் வீடுகளில் வைத்திருக்கும் குப்பைகளை அதில் கொட்டலாம். ரிக் ஷாவில் எடுத்துச் செல்லப்படும் குப்பைகள் ஓரிடத்தில் மொத்தமாக கொட்டப்பட்டு, லாரிகள் மூலம் குப்பை கிடங்குக்கு எடுத்துச் செல்லப்படும்.

நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் துப்புரவுத் தொழிலாளர்களிடம் ரிக்ஷாக்களை நகர்மன்றத் தலைவர் எம்.பாஸ்கர் வழங்கினார்.

நகராட்சி ஆணையர் ஆர்.சுப்பிரமணியன், துணைத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், பொறியாளர் உமாமகேஸ்வரி, துப்புரவு அலுவலர் சி.ஆறுமுகம், துப்புரவு ஆய்வாளர் பிரணாகரன், நகரமன்ற உறுப்பினர்கள் பி.மோகன், எஸ்.டி. யுவராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 23 March 2010 11:03
 

குளிர்பானங்களில் கலப்படம்:5 ஆயிரம் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 23.03.2010

குளிர்பானங்களில் கலப்படம்:5 ஆயிரம் பாக்கெட்டுகள் பறிமுதல்

திருநெல்வேலி, மார்ச் 22: திருநெல்வேலியில் கலப்படம் செய்யப்பட்டிருப்பதாக 5 ஆயிரம் குளிர்பான பாக்கெட்களை மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். இம் மாநகர் பகுதியில் உள்ள குளிர்பானக் கடைகளில், கலப்பட செய்யப்பட்ட மோர்,தயிர்,ரஸ்னா,பாதாம்பால் ஆகியவை விற்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரனுக்கு புகார்கள் வந்தன.

அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் பாஸ்கரன், சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாநகர சுகாதாரத் துறை அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் அ.ரா.சங்கரலிங்கம், காளிமுத்து மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சந்திப்பு பகுதியில் உள்ள ஜூஸ் கடைகள், கரும்புச் சாறு கடைகள், குளிர்பான பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் திங்கள்கிழமை சோதனையிட்டனர்.

கொக்கிரகுளம், உடையார்பட்டியில் உள்ள குளிர்பானத் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனையிட்டதில், அங்கு உணவு கலப்பட தடைச்சட்டத்தை மீறியும், பல்வேறு விதிமுறைகளை மீறியும் ரஸ்னா,

பாதாம்பால் ஆகிய குளிர்பானங்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அங்கிருந்த குளிர்பானங்களைக் கைப்பற்றி, அந்த நிறுவனத்துக்கு மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதேபோல கடைகளில் கலப்படம் செய்யப்பட்ட மோர்,தயிர்,ரஸ்னா,பாதாம்பால் ஆகிய குளிர்பான பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சந்திப்பில் சில பழக்கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில், அங்கு பழஜூஸ் தயார் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த அழுகிய வாழைப்பழத் தார்களைப் பறிமுதல் செய்தனர்.

மேலும் சந்திப்பு பஸ் நிலையத்தின் உள்ளே சில கரும்புச்சாறு கடைகளில், கரும்புச்சாற்றில் கலப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சாக்ரீனை அதிகாரிகள் கைப்பற்றினர்.

இவர்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தனர்.

இந்தச் சோதனையில் மொத்தம் 5 ஆயிரம் கலப்பட குளிர்பான பாக்கெட்டுகள், 5 அழுகிய வாழைப்பழத் தார்கள், சாக்ரீன் ஆகியவற்றை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை கிருமிநாசினி தெளித்து அழித்தனர்.

மாநகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் மாநகர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Last Updated on Tuesday, 23 March 2010 10:59
 

ரூ.10 ஆயிரம் குளிர்பான பாக்கெட்டுகள் பறிமுதல் : அழுகிய பழங்கள், சாக்ரின் கலந்து ஜூஸ் விற்பனை : மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 23.03.2010

ரூ.10 ஆயிரம் குளிர்பான பாக்கெட்டுகள் பறிமுதல் : அழுகிய பழங்கள், சாக்ரின் கலந்து ஜூஸ் விற்பனை : மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

திருநெல்வேலி : உணவு கலப்பட தடைச்சட்ட விதிகளுக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கரும்புச் சாறு கடைகளில் இருந்து கலப்படத்திற்கு பயன்படும் சாக்ரின், அழுகிய எலுமிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நெல்லை மாநகராட்சி பகுதிகளில் விற்கப்படும் குளிர்பான பாக்கெட்டுகளில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக மாநகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. மாநகராட்சி சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர்.சங்கரலிங்கம், காளிமுத்து அடங்கிய குழுவினர் நெல்லை ஜங்ஷன், கொக்கிரகுளம் பகுதிகளில் குளிர்பான பாக்கெட்டுகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களிடம் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக தயாரிக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரம் மதிப்புள்ள குளிர்பான பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். சந்திப்பு பஸ்ஸ்டாண்டில் பழ ஜூஸ் தயாரிப்பு கடையில் பழ ஜூஸ் தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 5 தார் அழுகிய வாழைப்பழம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கரும்புச்சாறு கடையில் வைக்கப்பட்டிருந்த அழுகிய எலுமிச்சை பழங்கல், சாக்ரின் பாக்கெட்டுகளை கைப்பற்றி கிருமி நாசினி தெளித்து அழித்தனர்.

மாநகராட்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை : மாநகராட்சிப் பகுதியில் உணவு கலப்பட தடைச் சட்டம் மற்றும் விதிகளுக்கு புறம்பாக தயாரிப்பு தேதி, பயன்படுத்ததக்க தேதி போன்ற விபரங்கள் அச்சிடப்படாமல் குளிர்பான பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படுவதுடன், அதன் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மீது உணவு கலப்பட தடைச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் பாஸ்கரன் எச்சரித்துள்ளார். கரும்புச் சாறுகளில் சாக்ரின், தண்ணீர் கலந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 23 March 2010 08:32
 


Page 311 of 519