Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

Print PDF

தினமலர் 18.03.2010

சுகாதார துறையினர் கடைகளில் ஆய்வு

கடலூர்: மளிகை கடைகளில் சுகாதார துறையினர் ஆய்வு செய்தனர்.கடலூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீத்தாராமன், ஆய்வாளர் கள் பிரகாஷ், சிவப்பிரகாசம் ஆகியோர் கடலூர், பாதரிக்குப்பம் மற்றும் கூத்தப்பாக்கம் பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் கலப்பட பொருட் கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்

Last Updated on Thursday, 18 March 2010 06:48
 

மதுரையில் மூன்றாயிரம் பேருக்கு உயிர்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை : மாநகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 18.03.2010

மதுரையில் மூன்றாயிரம் பேருக்கு உயிர்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை : மாநகராட்சி முடிவு

மதுரை: மதுரை மாவட்டத்தில் 3000 பேருக்கு 8.40 கோடி ரூபாய் செலவில் உயிர்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு உயர் சிகிச்சைக்கான உயிர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் பல பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

அவர்களில் சிலர் நேற்று கலெக்டர் (பொறுப்பு) தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்தனர். இருதயத்தில் ஓட்டை ஏற்பட்ட ஓட்டையால் அவதிப்பட்ட மதுரை பழங்காநத்தம் நல்லகண்ணு மகன் ஜெயராம் (5) இத்திட்டத்தில் பயன் பெற்றவர். நல்லகண்ணு கூறுகையில், ''பள்ளியில் தடுப்பூசி போடுவதற்காக எனது மகனை பரிசோதித்தனர். அப்போது எனது மகன் இருதயத்தில் பிரச்னை இருப்பதால் தடுப்பூசி போட முடியாது என டாக்டர்கள் கூறிவிட்டனர். எனவே ஆஸ்பத்திரியில் எனது மகனுக்கு பரிசோதனை நடந்தது. அவருக்கு இருதயத்தில் ஓட்டை இருப்பது தெரியவந்தது. இதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்தனர். அந்தளவு வசதி இல்லாத நிலையில், முதல்வரின் உயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்தேன். இத்திட்டத்தில் அப்போலோ ஆஸ்பத்திரியில் எனது மகன் அனுமதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு முன் சிகிச்சை பெற்றார்.

தற்போது நலமுடன் உள்ளார்'' என்றார். இதேபோல இத்திட்டத்தில் பயனடைந்த செல்லூர் நெசவாளர்கள் ராஜூ, பிரபாகரன், ஹரிகரன் ஆகியோரும் கலெக்டர் அலுவலகம் வந்தனர். கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:மதுரை மாவட்டத்தில் 3000 பேர் உயிர்காப்பீட்டு திட்டத்தில் பயன் பெற்றுள்ளனர். இவர்களில் 1500 பேர் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மீதியுள்ளார் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். இதற்காக 8.40 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் 5.89 லட்சம் பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது'' என்றார். உயிர்காப்பீட்டு திட்ட அலுவலர் முகம்மது, ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர், மக்கள் தொடர்பு அலுவலர்கள் சரவணன், சாலிதளபதி பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 18 March 2010 06:25
 

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

Print PDF

தினமணி 17.03.2010

காரியாபட்டி கடைகளில் உணவு ஆய்வாளர்கள் சோதனை

காரியாபட்டி, மார்ச் 16: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் சில கடைகளில் உணவு ஆய்வாளர்கள் உணவுப் பண்டங்களை பரிசோதனை செய்தனர்.

உணவு ஆய்வாளர்களான போஸ், முகம்மது இஸ்லாம்ஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கராஜ் ஆகியோர், உணவு கலப்பட ஆய்வு மற்றும் மாதிரி உணவு சேகரித்தல் பணிகளை மேற்கொண்டனர்.

அதன்படி, பலசரக்குக் கடை ஒன்றில் கடலைப் பருப்பும், சூப்பர் மார்க்கெட்டில் துவரம் பருப்பும் மாதிரி எடுத்து, சென்னை உணவு ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Last Updated on Wednesday, 17 March 2010 10:35
 


Page 315 of 519