Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு:குடியாத்தம் மக்கள் நகராட்சியிடம் புகார்

Print PDF

தினமலர் 16.03.2010

மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடு:குடியாத்தம் மக்கள் நகராட்சியிடம் புகார்

குடியாத்தம்:குடியாத்தத்தில் கோயில் அருகில் உள்ள மாட்டிறைச்சி கடைகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன. எனவே அக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நகராட்சி ஆணையாளர் மற்றும் நகராட்சி தலைவரிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: குடியாத்தம் பகுதியில் உள்ள முத்துகுமரன் நகர், கார்த்திகேயன் நகர் மற்றும் பலமநேர் ரோடு ஆகிய பகுதிகளில் நாங்கள் வசித்து வருகிறோம். பலமநேர் ரோடு பகுதியில் வீடுகளுக்கு அருகாமையில் கோயில் உள்ளது. கோயிலில் இருந்து 20அடி தூரத்தில் மாட்டிறைச்சி கடை மற்றும் வறுவல் கடை உள்ளது. இக்கடைகளில் இரவு 12மணி வரை சிலர் குடித்து விட்டு எங்களின் வீடுகளுக்கு அருகே இறைச்சி துண்டுகளையும், மதுபாட்டில்களை உடைத்தும் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. குடிகாரர்களின் நடமாட்டம் அதிகம் இருப்பதால் பெண்கள் இந்தவழியாக செல்வதற்கு பயப்படுகின்றனர். எனவே மாட்டிறைச்சி கடை மற்றும் வறுவல் கடைகளை இந்த பகுதியில் இருந்து, அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Last Updated on Tuesday, 16 March 2010 10:07
 

பொது சுகாதார விழிப்புணர்வு

Print PDF

தினமலர் 16.03.2010

பொது சுகாதார விழிப்புணர்வு

திருவாரூர்: திருவாரூரில் நகராட்சி சார்பில் பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டன.இதுகுறித்து ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தஞ்சை மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் சாந்தி உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு பொது சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தஞ்சாவூர் அன்னை கம்சலை கலைக்குழு மூலம் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், பாரதி தெரு, வண்டிக்காரத்தெரு, அழகிரி நகர் உட்பட பல இடங்களில் திடக்கழிவு மேலாண்மை, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் .தீமைகள், அயோடின் கலந்த உப்பின் நன்மைகள், உணவு கலப்படம் சம்பந்தமான விழிப்புணர்வு, தாய்சேய் நலம், குழந்தை வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவி வெப்பமடைதல், மரம் வளர்த்தல், கொசு ஒழிப்பு, சிக்கன்குனியா நோய் விழிப்புணர்வு ஆகியவை குறித்து கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பார்வையாளராக வந்த குழந்தைகளிடம் விழிப்புணர்வு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. சரியாக பதில் கூறிய குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் ராஜா தலைமையில் துப்புரவு ஆய்வர்கள் பழனிசாமி, பாலமுருகன், மணாழகன், அருள்தாஸ், சமுதாய அமைப்பாளர் சரஸ்வதி ஆகியோர் செய்திருந்தனர்.

 

சுகாதாரத் துறையினர் மளிகைக் கடைகளில் ஆய்வு

Print PDF

தினமணி 15.03.2010

சுகாதாரத் துறையினர் மளிகைக் கடைகளில் ஆய்வு

கள்ளக்குறிச்சி, மார்ச் 14: கள்ளக்குறிச்சியில் உள்ள சில மளிகைக் கடைகளில் பருப்பு வகைகள் மற்றும் உள்ளிட்ட பொருட்களில் கலப்படம் உள்ளதா என பொது சுகாதாரத் துறையினர் அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

÷கள்ளக்குறிச்சி சுகாதாரத் துறை துணை இயக்குநர் எம்.கீதா அறிவுறுத்தலின் பேரில் அவரது நேர்முக உதவியாளர் கே.தங்கராசு, வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.செல்வக்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள் எம்.நல்லமுத்து உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

÷அப்போது கடைகளில் பருப்பு வகை, காலாவதியான பொருட்கள் மற்றும் காபித் தூள், எண்ணெய் வகைகள், டால்டா, ஊறுகாய் உள்ளிட்ட பல பொருள்களை சோதனையிட்டனர்.

÷சில பொருள்களை பகுப்பாய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக உளுந்தூர்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

÷கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த சின்னசேலம், பைத்தந்துறை, கடத்தூர், கச்சிராயபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் சுகாதார ஆய்வாளர் எம்.நாராயணசாமி, கே.வெற்றிவேல், எம்.சரவணன், சின்னசேலம் காவல் நிலைய தலைமைக் காவலர் சரவணன் உள்ளிட்டோர் பள்ளியின் அருகில் உள்ள கடைகளில் சிகரெட், புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என அண்மையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

÷சிகிரெட் வைத்திருந்த 3 கடைகள் மற்றும் 7 பேருக்கு ரூ.1,150 அபராதம் விதித்தனர்.

÷கடைகளுக்கு முன், "புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வது இல்லை' என பெயர்ப் பலகை வைக்குமாறு அறிவுறுத்தினர்.

Last Updated on Monday, 15 March 2010 10:04
 


Page 317 of 519