Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ஸ்ரீமுஷ்ணத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்

Print PDF

தினமலர் 15.03.2010

ஸ்ரீமுஷ்ணத்தில் தீவிர கொசு ஒழிப்பு பணி துவக்கம்

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் தீவிர கொசு ஒழிப்பு திட்டத்தின் கீழ் கொசுவலை கட்டும் பணி துவக்கி வைக்கப் பட்டது.சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மீரா உத்தரவின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் தீவிர கொசு ஒழிப்புப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்க் காற்று போக்கிகளில் கொசு வலை கட்டும் பணி துவங்கியது.

இதன் துவக்க விழாவிற்கு ஆயங்குடி மருத்துவ அலுவலர் குலோத்துங்க சோழன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பன்னீர்செல் வம், ஸ்ரீமுஷ்ணம் பொறுப்பு டாக்டர் ஆண்டனிராஜ் முன்னிலை வகித்தனர். கொசு வலைகளை பேரூராட்சி சார்பில் சேர்மன் செல்வி இலவசமாக வழங்கினார்.

தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் பகுதிக்குட்பட்ட வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகள் மீது கொசுவலை கட்டப்பட்டது. இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சுகாதார ஆய் வாளர் கொளஞ்சி, முத்தமிழ்ச்செல்வி, சுதர்சனப்பிரியா, சத்யநாராயணன், மோகன்பாபு, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Monday, 15 March 2010 06:32
 

ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.03.2010

ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு

அரியலூர்: அரியலூர் ஹோட்டல்களில் சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொண்டனர். இதுபற்றி அரியலூர் வட்டார மருத்துவ அலுவலர் சண்முகம் கூறியதாவது:

பெரம்பலூர் சுகாதார பணிகள் துணை இயக்குநர் அறிவுறுத்தலின் பேரில், அரியலூர் நகராட்சி பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வட்டா மருத்துவ அலுவலர் சண்முகம், உணவு ஆய்வாளர் ரத்தினம், துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் ஸ்மித் சைமன், வகீல், நமச்சிவாயம், ரெங்கநாதன், மாவட்ட நலக்கல்வியாளர் அண்ணாதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர், சுமார் 10க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர்.சமையலுக்கு வைக்கப்பட்டிருந்த பருப்பு வகைகள் மாதிரி எடுக்கப்பட்டு, ஆய்வுக்காக சென்னையிலுள்ள கிங்ஸ் இன்ஸ்ட்டியூட் நிறுனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சுற்றுப்புற தூய்மை, ஹோட்டல் சுகாதாரம், பணியாளர்களின் மருத்துவ பரிசோதனை போன்றவை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் உணவு பொருள் கலப்படம் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.

Last Updated on Monday, 15 March 2010 07:08
 

பருப்பு வகைகளில் கலப்படமா? நகராட்சி அதிகாரிகள் சோதனை

Print PDF

தினமணி 12.03.2010

பருப்பு வகைகளில் கலப்படமா? நகராட்சி அதிகாரிகள் சோதனை

தென்காசி, மார்ச் 11: தென்காசியில் உள்ள பலசரக்கு கடைகளில் விற்பனைச் செய்யப்படும் பருப்பு வகைகளில் கலப்படம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா, என்பது குறித்து வியாழக்கிழமை நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

பொதுசுகாதாரத் துறை இயக்குநர் இளங்கோ, உணவு கலப்படத் தடுப்பு இணை இயக்குநர் கண்ணன் ஆகியோரின் உத்தரவை தொடர்ந்து, தென்காசி நகராட்சி ஆணையர் அப்துல்லத்தீப், உணவு ஆய்வாளர் முகம்மது அப்துல்ஹக்கீம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பலசரக்கு கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

தென்காசி நகரில் மொத்த விற்பனை செய்யப்படும் பலசரக்கு கிட்டங்கிகளில் நடைபெற்ற சோதனையின் போது, துவரம்பருப்பு, கடலைபருப்பு போன்றவற்றில் கேசரிபருப்பு கலப்படம் செய்யப்பட்டுள்ளதா, என்பது குறித்து சோதனை மேற்கொண்டனர்.

சோதனையின் போது, இரண்டு பருப்பு மூட்டைகளிலும் தலா ஒரு மூடை வீதம் ஆய்விற்காக பறிமுதல் செய்தனர்.

கூலக்கடை பஜார் பகுதியில் சோதனையிடும் பணி நடைபெறுவது தெரிந்தவுடன் அனைத்து மொத்த விற்பனை நிலையங்களும் பூட்டப்பட்டு விட்டன.

கேசரிபருப்பு கலந்த பருப்பு வகைகளை உண்ணுவதால் முடக்குவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என உணவு ஆய்வாளர் ஹக்கீம் தெரிவித்தார்.

வள்ளியூர்

வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதிகளிலுள்ள பலசரக்குக் கடைகளில் துவரம் பருப்பு, கடலைப் பருப்புகளில் கலப்படம் செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

சுகாதாரத் துறை துணை இயக்குநரின் தனி உதவியாளர் அருணாச்சலம், வள்ளியூர் வட்டார சுகாதாரத் துறை மேற்பார்வையாளர் சேவியர், சுகாதார ஆய்வாளர்கள் ரகுபதி, சந்திரசேகரன், செந்தில் ஆகியோர் வள்ளியூர், பணகுடி, திசையன்விளை பகுதி பலசரக்குக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வள்ளியூரில் 13 கடைகளிலும், பணகுடியில் 5 கடைகளிலும், திசையன்விளையில் 3 கடைகளிலும் ஆக மொத்தம் 21 கடைகளில் துவரம் பருப்பு, கடலை பருப்பு மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இவற்றை பகுப்பாய்வுச் செய்து கலப்படம் இருப்பதை உறுதி செய்த பின்னர் சம்பந்தபட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Friday, 12 March 2010 10:10
 


Page 319 of 519