Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

பெ.நா.பாளையத்தில் கொசு ஒழிப்புப் பணி

Print PDF

தினமணி          21.10.2013

பெ.நா.பாளையத்தில் கொசு ஒழிப்புப் பணி

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிக்கும் வகையில் அபேட் மருந்து தெளிக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

பருவ மழை பெய்யத் தொடங்கியிருப்பதையொட்டி பெரியநாயக்கன்பாளையத்தில் பல பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதில், டெங்கு காய்ச்சலை பரப்பக்கூடிய கொசுக்கள் வளரக்கூடும் என்பதால், இதனைத் தடுக்கும் பொருட்டு பெ.நா.பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் அறிவுறுத்தலின் பேரில் செயல் அலுவலர் துவாரகநாத் சிங் மேற்பார்வையில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் பரமசிவம், துடியலூர் சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் எஸ்.ஆர்.ராமராஜ், பாஞ்சாலி ஆகியோர் தலைமையில் துப்புரவுப் பணியாளர்கள் வீடுகளில் உள்ள கழிவுநீர்த் தொட்டிகள், நீர் தேங்கியுள்ள இடங்களில் அபேட் மருந்து தெளித்தனர். மழைக்காலம் தொடங்கியிருப்பதால், மழை நீரை தேங்கவிடக்கூடாது, காய்ச்சிய நீரையே குடிக்க வேண்டும் என்பன குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

திருப்பூர், மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

Print PDF

தினத்தந்தி            21.10.2013

திருப்பூர், மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

மழைக்கால நோய்களை தடுக்க குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்று திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் செல்வ ராஜ் தெரிவித்துள்ளார்.

குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும்

பருவமழை தொடங்கி இருப்பதால் டெங்கு, சிக்குன் குனியா, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளன. இதனால், பொதுமக்கள் குடிநீரை நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின்பு குடிக்க வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீட்டின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண் டும்.

சுற்றுப்புறங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் தேங்கா வண்ணம் பராமரிக்க வேண் டும். வீட்டில் உள்ள மேல் நிலைத்தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, சிமெண்டு தொட்டி ஆகியவற்றை அடிக்கடி பிளிச் சிங் பவுடரால் சுத்தம் செய்து நன்றாக மூடி நீரை சேமித்து வைக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற நோயின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உரிய சிகிச்சை பெற வேண் டும். மாநகராட்சி பொதுசுகாதார பணியாளர்கள், வீடுகளில் உள்ள தொட்டிகளில் கொசுப்புழு உற்பத் தியை கட்டுப்படுத்தும் அபெட் மருந்து தெளிக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தண்ணீர் தேங்க ஏதுவான தேவையற்ற பழைய பொருட்களை அப் புறப்படுத்த வேண் டும்.

பழைய உணவு களை உண்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் உணவு களை வெளியே வைக் கக்கூடாது. நகரில் உள்ள உணவகங்கள், டீக்கடைகள், தொழிற் சாலைகள் நடத்து பவர்கள் பொது மக்கள் மற்றும் தொழி லாளர்களுக்கு பாது காக்கப்பட்ட சூடான குடிநீர் மற்றும் உணவு பொருட்களை வழங்க வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாநகராட்சி ஆணை யாளர் செல்வராஜ் தெரிவித் துள்ளார்.

 

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணி மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்

Print PDF

தினத்தந்தி            21.10.2013

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணி மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்

நகரின் முக்கிய பகுதிகளில் இரவு நேர துப்புரவு பணியை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார்.

மேயர் தொடக்கம்

மதுரை மாநகராட்சி முக்கிய பகுதிகளில் இரவு நேர சிறப்பு துப்புரவு பணியினை கமிஷனர் நந்தகோபால் முன்னிலையில் மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

முதலமைச்சர் உத்தரவின்படியும், ஆலோசனைபடியும் மதுரை மாநகராட்சியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கடந்த மாமன்ற கூட்டத்தில் மதுரை மாநகராட்சியின் மைய பகுதிகளில் இரவு நேரங்களில் சிறப்பு துப்புரவு பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாசி வீதிகள்

மாநகராட்சியின் முக்கியமான பகுதிகளான சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் மையப் பகுதிகளில் இரவு துப்புரவு பணி இன்று முதல் மேற்கொள்ளப்படும். குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், நேதாஜி ரோடு, டவுன் ஹால் ரோடு, நான்கு சித்திரை வீதிகள், நான்கு மாசி வீதிகள், மேல வடம்போக்கித் தெரு, பெருமாள் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள், டி.பி.கே.ரோடு, வணிக வளாக பஸ் நிலையம், மேல வெளிவீதி ரெயில்வே நிலையம் வரை, மேல மாரட்டு வீதி ஆகிய ஆகிய பகுதிகளில் இரவு 9 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை சுமார் 50 பணியாளா;கள் துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள்.

மதுரை மாநகரை இரவு நேரங்களிலும் சுத்தமாக வைத்து கொள்வதற்காக இந்த பணி தினந்தோறும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நகர்நல அலுவலர் யசோதாமணி, நகரப்பொறியாளர் (பொறுப்பு) மதுரம், உதவி கமிஷனர் தேவதாஸ் உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 33 of 519