Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

உணவு பொருள் கடைகளில் சுகாதார சீர்கேடு:வாணியம்பாடியில் அதிகாரிகள் திடீர் 'ரெய்டு'

Print PDF

தினமலர் 12.03.2010

உணவு பொருள் கடைகளில் சுகாதார சீர்கேடு:வாணியம்பாடியில் அதிகாரிகள் திடீர் 'ரெய்டு'

வாணியம்பாடி:வாணியம்பாடியில் உணவு பொருள் கடைகளில் சுகாதார சீர்கேடு உள்ளதாக வந்த புகாரை அடுத்து, நகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் சுகாதார சீர்கேடு உள்ளதாகவும், பழைய எண்ணையை பயன்படுத்தி வருவதாகவும், கலப்பட பொருட்களால் உணவு வகைகள் செய்வதாகவும் நகராட்சி அதிகாரிகளுக்கு பல புகார்கள் வந்தன,இதையடுத்து கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் நகர் நல அலுவலர் டாக்டர் பிரியாராஜ் மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் ராஜேந்திரன், சீனிவாசன், ஜான்சன், நடராஜன் மற்றும் ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு நியூடவுன், சி.என்.., சாலை கூஜா காம்பவுண்டு ஆகிய பகுதிகளில் உள்ள சிக்கன், மீன், மட்டன் வறுவல் கடைகள் மற்றும் தள்ளு வண்டி கடைகளிலும் அதிரடி ரெய்டு நடத்தினர்.அப்போது கடைகளில் சுகாதார சீர்கேடாக வைத்திருந்தது கண்டறிந்து முதல் கட்டமாக கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் பழைய எண்ணையை பயன் படுத்தப்படுகிறதா? என்றும் ஆய்வு நடத்தினர்.இதனை தொடர்ந்து நேற்று காலை கணியம்பாடி தெரு, முகமதலிபஜார் ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் நகராட்சி அதிகாரிகள் திடீர் ரெய்டு நடத்தினர். அப் போது கடையில் கலப்பட பொருட்கள் மற்றும் பழைய ஸ்டாக் ஆகியவைகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். 8க்கும் மேற்பட்ட மளிகை கடைகளில் நடத்திய ரெய்டில் 3 கடைகளில் இருந்து துவரம் பருப்பு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டு, பரிசோதனைக்காக தஞ்சாவூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Last Updated on Friday, 12 March 2010 06:27
 

மளிகை கடையில் கலப்பட உளுந்து உணவு ஆய்வாளர் திடீர் சோதனை

Print PDF

தினமலர் 11.03.2010

மளிகை கடையில் கலப்பட உளுந்து உணவு ஆய்வாளர் திடீர் சோதனை

மேட்டூர்: மேட்டூரில் மளிகை கடைகளில் விற்பனை செய்யும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, கடலை ஆகியவற்றில் கலப்படம் உள்ளதா என கண்டறிய நகராட்சி உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

ரேஷன் கடைகளில் ஒரு கிலோ துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு தலா 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ துவரம் பருப்பு 60 முதல் 70 ரூபாய் வரையிலும், உளுந்தம்பருப்பு 70 முதல் 73 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைத்த துவரம் பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. சில கடைகளில் சில்லரை விற்பனைக்காக பொட்டலத்தில் அடைக்காமல் கொட்டி வைக்கப்பட்ட துவரம் பருப்பும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறையாக விற்பனை செய்யப்படும் துவரம் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பில் ரேஷன் பருப்பு கலக்கவோ அல்லது பருப்பு பளபளப்பாக தெரிவதற்காக வண்ணப்பொடிகள், மட்டரக ஆயில் போன்றவற்றை பயன்படுத்த வாய்ப்ப்புள்ளது. பளபளப்பிற்காக பொடிகள், ஆயில் போன்றவற்றை கலப்பதால், அதை சாப்பிடும் மக்களுக்கு வயிற்று உபாதை, அல்சர் போன்ற நோய்கள் ஏற்படும்.

கடைகளில் கலப்பட துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்பட உணவு பொருட்களில் கலப்படம் செய்யப்படுகிறதா என்பது குறித்து மேட்டூர் நகராட்சியில் உள்ள மளிகை கடையில் திடீர் ஆய்வு நடந்தது. நகராட்சி உணவு ஆய்வாளர் இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் வேலவன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் தாங்கள் ஆய்வு செய்த கடைகளில் சந்தேகத்திற்கு இடமான துவரம் பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை மாதிரிக்காக எடுத்து சென்றனர். இந்த உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா என கண்டறிய பாளையங்கோட்டையில் உள்ள பகுப்பாய்வு கூடத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படும். பருப்பில் கலப்படம் இருப்பது தெரியவந்தால், சம்பந்தபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Last Updated on Thursday, 11 March 2010 06:13
 

திருநகரில் ஒருங்கிணைந்த இறைச்சி கடைகள்

Print PDF

தினமணி 10.03.2010

திருநகரில் ஒருங்கிணைந்த இறைச்சி கடைகள்

திருப்பரங்குன்றம், மார்ச் 9: திருநகர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

திருநகரில் தேசிய நெடுஞ்சாலைப் பகுதி மற்றும் மக்கள் அதிகமாக வசிக்கக் கூடிய பாண்டியன் நகர், நெல்லையப்பபுரம், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் இறைச்சிக் கடைகள் உள்ளன. இவற்றின் கழிவுகள் ஆங்காங்கே கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்களும் பரவி வருகின்றன.

இது குறித்து, பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இப்பிரச்னையைத் தீர்க்கும் விதத்தில், திருநகர் 2-வது பஸ் நிறுத்தம் அருகே ஒருங்கிணைந்த இறைச்சிக் கடைகள் சுமார் ரூ. 6 லட்சம் செலவில் பேரூராட்சி நிர்வாகம் கட்டி வருகிறது.

23 கடைகளாகக் கட்டப்பட உள்ள இக் கட்டடப் பணி, பாதி முடிந்துவிட்டது என்றும், முழுவதும் வெகு சீக்கிரமே முடிந்து இப்பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று பேரூராட்சித் தலைவர் கே. இந்திராகாந்தி தெரிவித்தார்

Last Updated on Wednesday, 10 March 2010 09:09
 


Page 323 of 519