Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தேவர்சோலையில் பழைய மாட்டிறைச்சி விற்பனை

Print PDF

தினமணி 05.03.2010

தேவர்சோலையில் பழைய மாட்டிறைச்சி விற்பனை

கூடலூர், மார்ச் .4: கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலை பேரூராட்சியில் உள்ள இறைச்சிக் கடையில் பழைய மாட்டிறைச்சி விற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேவர்சோலை பஜாரில் பழைய மாட்டிறைச்சி விற்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து செயல் அலுவலர் பி.ராஜகோபால்,வட்டார மருத்துவ அலுவலர் கிருஷ்ணராஜ்,சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் ஆகோயோர் சோதனை நடத்தியதில் அங்குள்ள ஓரு மாட்டிறைச்சிக் கடையில் 25 கிலோ பழை மாட்டிறைச்சி இருந்ததை கைப்பற்றி பினாயில் ஊற்றி அழித்தனர்.

தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடை நிரந்தரமாக சீல்வைக்கப் படும் என்று செயல் அலுவலர் பி.ராஜகோபால் தெரிவித்தார்.

Last Updated on Friday, 05 March 2010 11:58
 

மீனாட்சி அம்மன் கோயில் தேர் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றம்

Print PDF

தினமணி 05.03.2010

மீனாட்சி அம்மன் கோயில் தேர் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றம்

மதுரை
, மார்ச் 4: மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கான தேர் நிறுத்துமிடத்தில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள், தினமணி செய்தி எதிரொலியாக வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கான தேர்கள் கீழமாசி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர் நிறுத்துமிடத்தில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் அப்பகுதியே துர்நாற்றம் வீசி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தி வந்தது. இதைச் சுட்டிக்காட்டி தினமணியில் 4}ம் தேதி (வியாழக்கிழமை) செய்தி வெளியிடப்பட்டது.

இதையடுத்து, உடனடியாக குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். தொடர்ந்து, தேர் நிறுத்துமிடத்தில் வாகனங்களை நிறுத்தாதவாறும், குப்பைகளைக் கொட்டாதவாறும் தாற்காலிகத் தடுப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர் நிறுத்துமிடத்தில் இருந்த குப்பைத் தொட்டிகளை அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்த மாநகராட்சி அதிகாரிகளையும், பணியாளர்களையும் பொதுமக்கள் பாராட்டினர்.

Last Updated on Friday, 05 March 2010 11:54
 

கடைகளில் பழைய இறைச்சி: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினமலர் 05.03.2010

கடைகளில் பழைய இறைச்சி: உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கூடலூர் : தேவர்சோலை நகரின் இறைச்சி கடையில் வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜகோபால் தலைமையில், நெலாக்கோட்டை மருத்துவ அலுவலர் டாக்டர் கிருஷ்ணராஜ், சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள், தேவர்சோலை நகரில் உள்ள மாட்டிறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 25 கிலோ பழைய மாட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.செயல் அலுவலர் ராஜகோபால் கூறுகையில், ""பழைய இறைச்சியை விற்பனை செய்யக் கூடாது என, இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்வது தெரியவந்தால், கடைக்கு "சீல்' வைக்கப்படும்,'' என்றார்.

Last Updated on Friday, 05 March 2010 08:27
 


Page 326 of 519