Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

"பள்ளி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படவேண்டும்' : மாநகராட்சி ஆணையர்

Print PDF

தினமணி 03.03.2010

"பள்ளி மாணவர்களிடம் சுகாதார விழிப்புணர்வு ஏற்படவேண்டும்' : மாநகராட்சி ஆணையர்

ஈரோடு, மார்ச். 2: சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் ஏற்படுத்தவேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பி.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சிக்கய்ய நாயக்கர் கல்லூரியின் சமூக மேம்பாடு மற்றும் அறிவியல் மையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி, ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியை தொடங்கிவைத்து, மாநகராட்சி ஆணையர் பி.பாலச்சந்திரன் பேசியது: சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பள்ளி பருவத்திலேயே மாணவர்களுக்கு ஏற்பட வேண்டும். இதற்கான மாணவர்களின் முயற்சிகளுக்கு கல்வி நிறுவனங்கள் ஊக்கம் அளிக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வு கண்காட்சிகள் மற்றும் கருத்தரங்குகள் ஒவ்வொரு பள்ளிகளிலும் நடைபெற வேண்டும் என்றார்.

கண்காட்சிóயிóல் 15 மாநகராட்சி பள்ளிகளின் மாணவர்களின் 75 அறிவியல் மற்றும் சுகாதார மாதிரிகள் இடம்பெற்றிருந்தது. சுகாதாரமான வாழ்க்கை, சுற்றுப்புறச்சூழல் மாசுபாடு, இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் குறித்த அறிவியல் மாதிரிகளும் இடம் பெற்றிருந்தன.

கண்காட்சியல் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி முதல்வர் ஆர்.பாஸ்கரன், பேராசிரியர் சரவணபாபு மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் கண்காட்சியினை பார்வையிட்டனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 09:33
 

20 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 03.03.2010

20 கிலோ கலப்பட டீ தூள் பறிமுதல்

நாகப்பட்டினம், மார்ச் 2: நாகை மாவட்டம், திருமருகல் அருகே 20 கிலோ எடையிலான கலப்பட டீ தூள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திருமருகல் வட்டார உணவு ஆய்வாளர் ஏ.டி. அன்பழகன், சுகாதார ஆய்வாளர் ஏ. கணேசன் ஆகியோர் திருமருகல் பகுதியில் செவ்வாய்க்கிழமை, உணவுப் பொருள் கலப்படம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, டீ தூளை விற்பனை செய்ய வந்த ஒருவர், 20 கிலோ டீத்தூளை கங்களாஞ்சேரி சாலையில் வீசி விட்டுத் தலைமறைவானார்.

அதிகாரிகள், அந்த டீ தூளை கைப்பற்றி ஆய்வு செய்த போது, அவை கலப்பட டீ தூள் என்பது தெரியவந்தது.

பின்னர், நாகை பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் வி. வைரமணி, கைப்பற்றப்பட்ட டீ தூளை ஆய்வு செய்து, கலப்பட டீ தூளை கண்டறியவது எப்படி என்பது குறித்து திருமருகல் பகுதியில் உள்ள வணிகர்களிடையே விளக்கினார். பின்னர், அவர் தெரிவித்தது :

கலப்பட டீ தூளை உட்கொள்வதால் புற்றுநோய், சிறுநீரகப் பிரச்னை உள்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் ஆளாக நேரிடும். உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வது தண்டனைக்குரிய குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் டாக்டர் வி. வைரமணி.

Last Updated on Wednesday, 03 March 2010 09:30
 

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கல்

Print PDF

தினமலர் 03.03.2010

யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கல்

ஆம்பூர்: ஆம்பூரில் யானைக்கால் நோய் தடுப்பு மாத்திரை வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. ஆம்பூர் நகராட்சி பகுதிகளில் யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ் டி..சி மாத்திரை மற்றும் அல்பண்டோசால் மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.விழாவிற்கு நகராட்சி தலைவர் நசீர்அகமது தலைமை தாங்கி துவக்கி வைத்தார். துப்புரவு ஆய்வாளர்கள் நாராயணமூர்த்தி, பாலசந்தர், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூச்சியியல் உதவியாளர் சேகர், களப்பணி உதவியாளர் கோபால் மற்றம் தன்னார்வலர் தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஆம்பூரில் உள்ள 36 வார்டுகளில் அனைத்து வீடுகளிலும் உள்ளவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டன.

Last Updated on Wednesday, 03 March 2010 07:08
 


Page 328 of 519