Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

ரோட்டோர உணவகங்களில் ரெய்டு : நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவு

Print PDF

தினமலர் 03.03.2010

ரோட்டோர உணவகங்களில் ரெய்டு : நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவு

விருதுநகர்: தமிழகம் முழுவதும் ரோட்டோர உணவகங்களில் ரெய்டு நடத்த அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பஸ் பயணிகளுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டல்களில் அதிக விலையில் உணவு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, பிரிட்ஜ்களில் சேமித்து வைத்து பின், தயாரிக்கப்படும் உணவு வகைகள், பயணிகளுக்கு ஒவ்வாத நிலையை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு நோய் பரவுகிறது.

ரெய்டு நடத்த உத்தரவு: இந்த உணவகங்களில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. ரோட்டோர உணவகங்களில் உணவு தயாரிக்கும் அறை, ஸ்டோர் ரூம், உணவு பொருள்களை தயாரித்து ஸ்டாக் வைத்துள்ள பகுதிகள், மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.

ஓட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்: இந்த அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபடும் போது சுகாதாரக்கேடாக உள்ள பொருள்களை கைப்பற்றி அழித்து விட வேண்டும். ஓட்டல்களில் குறைபாடாக உள்ள சமையலறை, ஸ்டோர் ரூம்கள், பத்து நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கவேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறநகர், நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ரெய்டு நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.

Last Updated on Wednesday, 03 March 2010 06:58
 

தரமற்ற முந்திரி, திராட்சை, ரொட்டி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 03.03.2010

தரமற்ற முந்திரி, திராட்சை, ரொட்டி மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல்

சென்னை :தரமின்றி சாலையோரத்தில் வைத்து விற்கப் பட்ட 140 கிலோ முந்திரி, திராட்சை பழங்களை மாநகராட்சி சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர். பேக்கரிகளில் 900 கிலோ காலாவதியான கேக், ரொட்டிகளும் பறிமுதல் செய்யப் பட்டது.சென்னையில் சாலையோரங்களில் தரமில்லாத வகையில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சுகாதாரத் துறையினர் அதிரடி சோனையில் இறங்கினர். பெரியமேடு கடப்பா ரங்கையா தெருவில் தள்ளுவண்டியில் வைத்து விற்பனை செய்யப்பட்ட தரமற்ற, அழுகிப்போன 140 கிலோ முந்திரி, திராட்சைப் பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பிளீச்சிங் பவுடர் மற்றும் பினாயில் தெளித்து அழித்தனர்.900 கிலோ கேக் பறிமுதல்:சென்னை பத்து மண்டலங்களிலும் நேற்று உதவி சுகாதார அலுவலர் தலைமையில், சுகாதாரத்துறை ஊழியர்கள் 321 பேக்கரி கடைகளில் ஆய்வு செய்தனர். விற்பனைக்காக வைக்கப் பட்டிருந்த காலாவதியான 900 கிலோ கேக், ரொட்டி, பிஸ்கட் ஆகிய உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.கைப்பற்றிய 26 உணவு மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உணவுப் பொருட்கள் கையாள்வோருக்கான உரிமம் பெறாத பேக்கரிகள் தடை செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறையினர் எச்சரித்தனர்.

Last Updated on Wednesday, 03 March 2010 06:32
 

இன்று வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

Print PDF

தினமணி 02.03.2010

இன்று வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கரூர், மார்ச் 1: கரூர் நகராட்சி பகுதியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 2) நடைபெறுகிறது.

பசுபதிபாளையம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு முகாம் தொடங்குகிறது. முகாமில், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், சர்க்கரை நோய், புற்றுநோய், குடல் நோய், முதியோர் சிகிச்சை, சித்த மருத்துவம், நரம்பியல், காசநோய், இருதய நோய், கண் பரிசோதனை, கர்ப்பப்பை உள்ளிட்ட நோய்களுக்கு அதிநவீன சாதனங்களைக் கொண்டு பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் அனைத்து பொதுமக்களும் பங்கேற்றுப் பயனடைய வேண்டுமென கரூர் நகராட்சித் தலைவர் பி. சிவகாமசுந்தரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Last Updated on Tuesday, 02 March 2010 10:05
 


Page 329 of 519